ஆடி மாதத்தில் பிறந்தவர்களுக்கு ஒரு மிகப்பெரிய அதிர்ஷ்டம்..ஆனால் இந்த ‘ஒன்றில்’கவனம் தேவை!

Aadi Month Birth Advantages: இவர்களுக்கு ஆரோக்கியத்தில் கவனம் தேவையானது, குறிப்பாக உணவுக்குணம்குறைவால் பிரச்சினைகள் ஏற்படாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். கனவுகள் மற்றும் விருப்பங்களில் தீவிரம் கொண்டிருப்பதால் தோல்விகள் மன அழுத்தத்தை ஏற்படுத்தலாம். இதனால் ஆரோக்கியத்தையும் மனநிலையையும் சமநிலையுடன் வைத்துக்கொள்வது அவசியம்.

Aadi Born Personality Traits: ஆடி மாதத்தில் பிறந்தவர்கள் தெய்வீக ஆற்றல் கொண்டவர்களாகவும் தன்னம்பிக்கையுடன் செயல்படுபவர்களாகவும் ஜோதிடம் கூறுகிறது. அவர்கள் மன உறுதி மற்றும் திறமையில் சிறந்து விளங்குவர். அமாவாசை அல்லது பவுர்ணமி அருகே பிறந்தவர்களுக்கு செல்வம் சேரும் வாய்ப்புகள் அதிகமாக இருக்கும், மேலும் குடும்ப பாசமும் சமுதாய மதிப்பும் நிறைந்த வாழ்க்கை கிடைக்கும்.

1 /8

ஆடி மாதத்தின் தவறான கருத்துகள்(Misconceptions of the month of Aadi): பொதுவாக ஆடி மாதத்தில் பிறந்தவர்களைப் பற்றி சிலர் தவறாக மதிப்பீடு செய்வதுண்டு. ஆனால், ஜோதிட அடிப்படையில், இது முழுமையாகத் தவறான புரிதல் எனக் கூறப்படுகிறது.

2 /8

கடக ராசி மற்றும் சூரியன் சஞ்சாரம்(Cancer and the Sun's Transit): ஆடி மாதத்தில் சூரியன் கடக ராசியில் சஞ்சரிப்பதால், இதன் காரணமாக வாழ்க்கையில் பல சிறப்புக்கள் மற்றும் சவால்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளது.

3 /8

சுட்டித்தனம் மற்றும் முன்னேற்றம்(Accuracy and progress): இளமையில் சுட்டித்தனமாக நடந்து கொண்டாலும், இந்த தன்மை அவர்களைச் சாமர்த்தியமாக வாழ்க்கையில் முன்னேற்றம் அடையச் செய்யும்.

4 /8

மன உறுதியும் தைரியமும்(Determination and courage): ஆடி மாதத்தில் பிறந்தவர்கள் மன அழுத்தங்களைத் தைரியமாகச் சமாளிக்கும் திறன் கொண்டவர்கள். எந்த சிரமத்தையும் நிதானமாகக் கையாள்வதில் அவர்கள் சிறந்து விளங்குவர்.

5 /8

முடிவெடுக்கும் திறமை(Decision-making skills): இவர்கள் திடுக்கிடும் வகையில் வேகமாக முடிவெடுப்பார்கள். ஆனால், அந்த முடிவுகள் காலப்போக்கில் சரியானதாகவும் பயனுள்ளதாகவும் இருக்கும்போது புரிய வரும்.

6 /8

உறவுகள் மற்றும் ஆலோசனையின் முக்கியத்துவம்(The importance of relationships and advice) உறவுகள் மற்றும் வாழ்க்கை தொடர்பான முக்கிய முடிவுகளை எடுத்துவரும்போது பிறரின் ஆலோசனையைக் கேட்பது இவர்களுக்கு அதிக நன்மைகளை அளிக்கும்.

7 /8

அறிவுத்திறன் மற்றும் சிறப்பு(Intelligence and expertise): ஆடி மாதத்தில் பிறந்தவர்கள் அறிவாற்றலும் திறமையும் கொண்டவர்கள். பலர் மேதைகள் மற்றும் தலைசிறந்த அறிஞர்களாகப் பிரபலமாகுவார்கள்.  

8 /8

பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்தூள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.