வழக்கமாக நாம் கடைகளில் வாங்கும் பொருட்களில் காலாவதியாகும் தேதி அதாவது Expiry Date இருக்கும். ஆனால், சில பொருட்களில் இவை இருப்பது இல்லை. அப்படிப்பட்ட பொருட்களை எத்தனை நாட்களுக்கு வேண்டுமானாலும் பயன்படுத்தலாம் என நாம் நினைக்கிறோம். ஆனால், நாம் தினமும் பயன்படுத்தும் சில பொருட்களுக்கு expiry date உண்டு என்பதே நமக்குத் தெரியாமல் உள்ளது. அவற்றை சரியான சமயத்தில் மாற்றாமல் இருந்தால் பல பிரச்சனைகள் உண்டாகலாம். அப்படிப்பட்ட சில பொருட்களின் பட்டியலை இங்கே காணலாம்.
சிலருக்கு அவர்கள் பயன்படுத்தும் துண்டின் மீது அதிக ஒட்டுதல் ஏற்பட்டு விடுவது வழக்கம். என்ன ஒட்டுதலாக இருந்தாலும், துண்டுகளை அவற்றின் உற்பத்தியின் தரத்தைப் பொறுத்து 1 -3 ஆண்டுகளுக்கு ஒரு முறை கண்டிப்பாக மாற்றுவது மிக அவசியமாகும். குளித்த பிறகு உடல் துடைப்பது, கை, முகம் கழுவும் போது துடைப்பது என நாம் ஒரு நாளில் பல முறை அவற்றை பயன்படுத்துவதால், அவற்றில் பல வித பாக்டீரியாக்கள் வளர வாய்ப்புள்ளன. ஈரமான துண்டுகள் பாக்டீரியாவின் மைதானமாகின்றன. வழக்கமாக அவற்றை துவைத்தாலும், வெயிலில் காய வைத்தாலும், 1-3 ஆண்டுகளுக்கு மேல் ஒரே துண்டை பயன்படுத்துவது நமது உடல் ஆரொக்கியத்திற்கு நல்லதல்ல.
ஆச்சரியமாக உள்ளதா? வழக்கமாக, தேய்ந்து விட்டாலோ அல்லது அறுந்து போனாலோ மட்டும் நாம் மாற்றும் செருப்புகளுக்கும் காலாவதி ஆகும் காலம் உள்ளது. அவற்றின் அதிக பயன்பாட்டின் காரணமாக, செருப்புகளில் பூஞ்சை தொற்று பரவ அதிக வாய்ப்புள்ளது. செருப்புகளை தினமும் ஒழுங்காக கழுவ வேண்டும். அதோடு ஒவ்வொரு ஆறு மாதத்திற்கு ஒரு முறை செருப்புகளை மாற்ற வேண்டும்.
குளியலில் பயன்படுத்தப்படும் ஸ்பாஞ்சுகளை நாம் 2 வாரங்களுக்கு ஒரு முறை மாற்ற வேண்டும். எளிதில் தரம் மங்காத விலை உயர்ந்த ஸ்பாஞ்சுகளை நீங்கள் பயன்படுத்தினாலும், அவற்றையும் நீங்கள் 2 வாரங்களுக்கு மேல் பயன்படுத்தக் கூடாது. ஸ்பாஞ்சுகளில் இரண்டு வார காலத்திற்கு மேல் பூஞ்சை இனப்பெருக்கம் செய்யத் தொடங்குகின்றன. எனினும், இந்த ஸ்பாஞ்சுகளை சுத்திகரிக்க, அவற்றை சூடான கொதிக்கும் நீரில் போட்டு வைக்கலாம்.
சில நூறு மைல்கள் ஓடிய பிறகு, நமது ஓடும் காலணிகள் அவற்றின் குஷன் தன்மையை இழக்கத் தொடங்கி விடுகின்றன. இதனால், நமது மூட்டுகளில் இறுக்கம் அதிகமாகின்றது. நீங்கள் தொடர்ந்து உடற்பயிற்சிகள், ரன்னிங் மற்றும் ஜாகிங் செய்பவராக இருந்தால், கண்டிப்பாக உங்கள் ரன்னிங் ஷூக்களை 1 வருடத்திற்கு ஒரு முறை மாற்ற வேண்டும்.
சில காலம் தொடர்ச்சியாக பயன்படுத்திய பிறகு, தலையணைகளும் தூசியால் ஏற்படும் பூச்சிகளுக்கு அடைக்கலம் கொடுக்கத் துவங்குகின்றன. 2-3 ஆண்டுகளுக்கு ஒரு முறை தலையணைகளை கண்டிப்பாக மாற்ற வேண்டும். தலையணைகளின் மிருதுவான தன்மை மாறி, அவை திண்டுகளாகவும் மிகவும் மெலிதாகவும் மாறினால், அதனால் பல உடல் உபாதைகளும் ஏற்படக்கூடும். கழுத்து வலி, தலை வலி ஆகியவை ஏற்படக்கூடும்.
வாரத்திற்கு ஒரு முறையாவது நாம் பயன்படுத்தும் சீப்பை சுத்தம் செய்ய வேண்டும். இதைத் தவிர, ஒவ்வொரு ஆண்டும் உங்கள் சீப்பை மாற்ற வேண்டும். சுத்தமில்லாத மற்றும் தரம் இல்லாத சீப்புகளால் தலையில் உள்ள தோலிலும் உச்சந்தலையிலும் பல நோய்த்தொற்றுகள் ஏற்படலாம். மேலும், உங்கள் முடி உதிர்தலுக்கும் அவை மிகப்பெரிய காரணமாக இருக்கலாம்.