IDBI வங்கியின் Whatsapp வங்கி சேவையில் என்னென்ன நன்மைகள் கிடைக்கின்றன….இதோ பார்க்கலாம்!!
IDBI வங்கி தனது வாடிக்கையாளர்களுக்காக WhatApp-ல் வங்கி சேவையை அறிமுகப்படுத்தியுள்ளது. அனைத்து வாடிக்கையாளர்களும் இப்போது அடிப்படை வங்கி சேவைகளை WhatApp-ல் எளிதாக பெற முடியும்.
Whatsapp வங்கி சேவையைப் பயன்படுத்திக் கொள்ள, வாடிக்கையாளர் வங்கியின் Whatsapp எண்ணை தங்கள் தொலைபேசியில் Save செய்து, அவர்களின் Whatsapp எண்ணையும் வங்கியில் கொடுக்க வேண்டும். இதற்குப் பிறகு, வங்கி இந்த வசதியை உங்கள் Whatsapp எண்ணில் தொடங்கும். உங்கள் எண்ணில் இந்த வசதியைத் தொடங்க, நீங்கள் வங்கியைத் தொடர்பு கொள்ள வேண்டும்.
வாடிக்கையாளர்களுக்கு தேவையான வங்கி சேவைகளான கணக்கு இருப்பு தகவல், கடைசி 5 பரிவர்த்தனைகள், காசோலை புத்தகத்திற்கு விண்ணப்பித்தல், மின்னஞ்சல் வழியாக அறிக்கை, வட்டி விகிதங்கள் மற்றும் அருகிலுள்ள IDBI வங்கி கிளை மற்றும் ATM போன்ற தகவல்கள் இதில் வழங்கப்படும்.
ரீடைல் வாடிக்கையாளர்கள் இப்போது Whatsapp வங்கி சேவை மூலம் FD-களில் முதலீடு செய்யலாம். மின்சாரம், சமையல் கேஸ் மற்றும் போஸ்ட்பெய்ட் மொபைல் போன் பில்களை செலுத்தலாம். கார்ப்பரேட்டுகள் மற்றும் MSME-க்களின் உரிமையாளர்கள் வர்த்தக நிதி தொடர்பான தகவல்களை இதில் பெறலாம்.
IDBI வங்கி தனது வாடிக்கையாளர்களுக்கு தடையின்றி சேவை புரியும் ஒரு வங்கியாகும். அந்த அம்சம் இந்த Whatsapp Banking service-சிலும் உள்ளது. வாடிக்கையாளர்களுக்கு இந்த சேவை வாரத்தின் ஏழு நாட்களும் 24 மணி நேரமும் கிடைக்கும்.