Pink Pollution: ஏரிகள், ஆறுகள், மரங்கள் என எங்கும் ‘இளஞ்சிவப்பு’ நிறம்

Tue, 27 Jul 2021-5:43 pm,

அர்ஜென்டினாவின் தெற்கு படகோனியா பகுதியில், ஒரு பெரிய ஏரியின்  நீரர் முழுவதும் இளஞ்சிவப்பு நிறமாக மாறியது. இற்கான காரணம் ஒரு ரசாயனம் என்று நிபுணர்களும், சுற்றுச்சூழல் ஆர்வலர்களும் கூறுகின்றனர். சோடியம் சல்பைட்டின் பயன்பாடு  ஏரியின் நீரை மாசுபடுத்தியதாக கூறப்படுகிறது.

ஏற்றுமதி செய்யும் இறால் மீன்களை சேமிக்க தொழிற்சாலைகள்  சோடியம் சல்பைட் பயன்படுத்துகின்றன. சோடியம் சல்பைட் என்பது  ஒரு பாக்டீரியா எதிர்ப்பு தயாரிப்பு ஆகும். இந்த ரசாயனம் ஆறுகள் மற்றும் ஏரிகளுக்கு செல்கிறது. இது தவிர, மீன் கழிவுகளும் ஆறுகளை மாசுபடுத்துகின்றன. அதன் துர்நாற்றத்தால் உள்ளூர் மக்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர். 

இளஞ்சிவப்பு மாசுபாடு ஆறுகளின் நீரை மாசுபடுத்துவது மட்டுமல்லாமல், இதனால், அருகிலுள்ள சில மரங்களும் தாவரங்களும் இளஞ்சிவப்பு நிறமாக மாறியுள்ளன. இந்த மாசு காரணமாக, இயற்கை பேரழிவை சந்தித்து வருகிறது.

ஆற்று மற்றும் ஏரியைச் சுற்றியுள்ள தொழிற்சாலைகள் நீண்ட காலமாக கழிவு நீரை வெளியிட்டு வருவதாக உள்ளூர்வாசிகள் புகார் அளித்து வருகின்றனர், ஆனால் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. சுற்றுச்சூழல் ஆர்வலர்களும் பல முறை எதிர்ப்பு தெரிவித்தனர்.

சட்டத்தின்படி, மீன் கழிவுகளை ஆற்றில்  விடுவதற்கு முன்பு சுத்தம் செய்ய வேண்டும். ரசாயனங்களை ஏரிக்குள் அல்லது ஆற்றில் விடக்க்கூடாது, ஆனால் இன்னும் ஏரிக்கு அருகில் அமைந்துள்ள நிறுவனங்கள் சட்டத்தை பின்பற்றுவதில்லை.

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link