Planet Transit: மே மாதம் மூன்று கிரகங்களின் இயக்க மாற்றத்தால் இந்த 3 ராசிக்காரர்களுக்கு மட்டும் சிறப்பான பலன்கள் கிடைக்கும்.
Planet Transit In May 2025: புதன், குரு மற்றும் சுக்கிரன் உள்ளிட்ட சக்திவாய்ந்த கிரகங்கள் வரும் மே மாதத்தில் தங்களின் இயக்கத்தில் மாற்றத்தை செய்கின்றன.
மே மாதம் இன்னும் ஒரு வாரத்தில் பிறக்க இருக்கிறது. ஜோதிடத்தின்படி, இந்த மே மாதம் பல்வேறு வகையில் சிறப்பான ஒன்றாக அமைந்துள்ளது.
மூன்று சக்திவாய்ந்த கிரகங்களான புதன், குரு மற்றும் சுக்கிரன் இந்த மே மாதத்தில் தங்களின் இயக்கத்தை மாற்றுகின்றன. இவை அனைத்தும் 12 ராசிகளின் வாழ்விலும் தாக்கத்தை ஏற்படுத்தும்.
கிரகங்களின் இந்த மாற்றங்கள் சில ராசிக்காரர்களுக்கு மட்டும் சுபமான ஒன்றாக அமைகிறது. இவர்களுக்கு அதிர்ஷ்டம் அதிமாக இருக்கும்.
மே மாதம் இந்த கிரகங்களின் இயக்க மாற்றத்தால் 3 ராசிக்காரர்களுக்கு மட்டும் சிறப்பான பலன்கள் கிடைக்கும். அந்த 3 ராசிகள் என்னென்ன என்பதை இங்கு பார்க்கலாம்.
மேஷம் (Aries): மே மாதம் பிறந்தால் இந்த ராசிக்காரர்களுக்கு கொண்டாட்டம்தான். பணியில் பதவி உயர்வு கிடைக்கும், ஊதிய உயர்வும் கிடைக்கும். உங்கள் வேலையால் பணியிடத்தில் மகிழ்ச்சி உண்டாகும். மூத்தவர்கள் உங்களை பாராட்டி தள்ளுவார்கள். பழைய முதலீடுகளில் இருந்து நல்ல வருவாய் வரும். வீட்டில் சில சுப காரியங்கள் நடக்கும். பணி தொடர்பாக நீண்ட தூரம் பயணிக்க வேண்டியது வரும். இது உங்களுக்கு மகிழ்ச்சியை கொடுக்கும்.
கடகம் (Cancer): வரும் மே மாதம் பிறந்தால் இந்த ராசிக்காரர்களுக்கு நம்பிக்கையும் பிறக்கும். உங்கள் பணியில் நீங்கள் செய்திருந்த கடின உழைப்புக்கு பலன்கள் கிடைக்கும். பதவி உயர்வு மற்றும் பெரிய பொறுப்புகள் கிடைக்கும். அதிர்ஷ்ட காற்று உங்கள் பக்கம் வீசும். பணியில் மாற்றம் செய்ய நினைப்பவர்களுக்கு இது நல்ல சந்தர்ப்பம். பெரிய சம்பள உயர்வுடன் புதிய வேலை கிடைக்கும். வெளிநாட்டுக்கு போகும் கனவும் நிறைவேறும்.
சிம்மம் (Leo): மே மாதம் இந்த ராசிக்காரர்களுக்கு சுபமான ஒன்றாகும். நீங்கள் என்ன வேலையை செய்தாலும் வெற்றி சாத்தியப்படும். அரசு வேலைக்கு முயற்சிப்பவர்களுக்கு நல்ல செய்தி வந்துசேரும். போட்டித் தேர்வுகளிலும் நீங்கள் தேர்ச்சி பெறுவீர்கள். உங்களின் வேலை சரியாக போகும், அதே நேரத்தில் அதில் வருவாயும் அதிகரிக்கும். உங்களின் பார்ட்னருடன் நேரத்தை சிறப்பாக செலவிடுவீர்கள்.
பொறுப்பு துறப்பு: இவை அனைத்தும் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் கணிப்புகள் அடிப்படையில் எழுதப்பட்டவை. இதனை ஜீ நியூஸ் (Zee Tamil News) உறுதிப்படுத்தவில்லை.