பிஎம் கிசான் முக்கிய அப்டேட் : விவசாயி இறந்துவிட்டால், வாரிசு அந்த பணத்தை கிளைம் செய்வது எப்படி?

PM Kisan : பிஎம் கிசான் திட்டத்தில் விவசாயி இறந்துவிட்டால், அவரின் மகன் அந்த தொகையை கிளெய்ம் செய்வது எப்படி 

 

PM Kisan : பிஎம் கிசான் திட்டத்தில் தமிழ்நாட்டு விவசாயிகள் தெரிந்து கொள்ள வேண்டிய முக்கிய தகவல்

 

1 /10

பிஎம் கிசான் (PM Kisan) திட்டத்தில் 22வது தவணைத் தொகைகான பணிகளை மத்திய அரசு தொடங்கிவிட்டது. இதனையொட்டி பல்வேறு மாவட்ட ஆட்சியர்கள் தமிழ்நாட்டு விவசாயிகளுக்கு அறிவுறுத்தல்களை கொடுக்க தொடங்கியுள்ளனர்.  

2 /10

இதுவரை விவசாய அடையாள எண் பெறாதவர்கள், வங்கி கணக்குடன் ஆதார் எண் இணைக்காதவர்கள் உடனடியாக இணைக்குமாறு வேளாண்மை துறை அதிகாரிகள் கேட்டுக் கொண்டுள்ளனர். ஒருவேளை இதைசெய்யாமல் யாரேனும் இருந்தால், அந்த விவசாயிகளுக்கு பிஎம் கிசான் திட்டத்தில் 22வது தவணைத் தொகை கிடைக்காது.  

3 /10

எனவே, மாவட்டந்தோறும் நடைபெற்று வரும் விவசாய குறைதீர்ப்பு முகாம் கூட்டங்களில் கலந்து கொண்டு இதுதொடர்பான அப்டேட்டுகளையும், சிக்கல் இருந்தால் அதனை தீர்த்துக்கொள்ளுமாறும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். கூடுதல் தகவல்களுக்கு வேளாண்மை துறை அலுவலங்களை தொடர்பு கொள்ளலாம்.  

4 /10

இது ஒருபுறம் இருக்க, பிஎம் கிசான் திட்டத்தில் பயனாளியாக இருக்கும் ஒரு விவசாயி இறந்துவிட்டால் என்ன செய்ய வேண்டும்? என்பது குறித்து இங்கே தெரிந்து கொள்ளுங்கள்  

5 /10

பிஎம் கிசான் திட்டத்தில் பயனாளியாக இருக்கும் விவசாயி இறந்துவிட்டால் அதனை வேளாண் துறை அலுவலகத்துக்கு அவரின் வாரிசுதாரர்கள் தெரியப்படுத்த வேண்டும்.   

6 /10

பின்னர், வாரிசுதாரர் என்பதற்கான சான்றுகள், விவசாய நிலத்துக்கு உரிமையானவர் என்பதை நிரூபிக்கும் ஆவணங்களை கொடுக்க வேண்டும். அப்படி செய்தால் இறந்தவரின் பெயர் நீக்கப்பட்டு, அவருக்கு பதிலாக அவரின் வாரிசு பிஎம் கிசான் திட்டத்தில் பயனாளியாக சேர்க்கப்படுவார்.  

7 /10

இறந்த விவசாயின் பெயரில் பிஎம் கிசான் தொகை பெறுவது கண்டுபிடிக்கப்பட்டால், அந்த தொகையை அபராதத்துடன் அத்தொகையை பெற்றவர்கள் திரும்ப செலுத்த வேண்டியிருக்கும்.   

8 /10

மேலும், வேளாண் அடுக்ககம் பெரும் பதிவேட்டில் தங்கள் நில ஆவணங்களை பதிவு செய்தால் மட்டுமே பிளம்கிசான் திட்டத்தின்கீழ் தொடர்ந்து தவணை தொகையினை பெற இயலும் என மத்திய அரசு திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.  

9 /10

எனவே, விவசாயிகள் பட்டா நகல், ஆதார் அட்டை நகல் மற்றும் ஆதாருடன் இணைக்கப்பட்ட மொபைலுடன் அருகில் உள்ள பொதுசேவை மையம் அல்லது தங்கள் பகுதியில் நடைபெறும் முகாம்களில் கலந்து கொண்டு தங்கள் நில ஆவணங்களை வேளாண் அடுக்ககம் பெரும் பதிவேட்டில் பதிவு செய்து கொள்ள வேண்டும்.  

10 /10

இது தொடர்பாக சந்தேகம் ஏதும் இருப்பின், தங்கள் பகுதியிலுள்ள வேளாண்மை உதவி இயக்குநரை அணுகி கூடுதல் தகவல்களை பெற்றுக் கொள்ளலாம்.