பிரதமர் முத்ரா திட்டத்தின் கீழ் தொழில்முனைவோர்கள் ரூ.20 லட்சம் கடன் பெறுவது எப்படி? என்பதை தெரிந்து கொள்ளுங்கள்
Rs. 20 Lakh Loan Under Mudra Yojana, Apply Now : சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்முனைவோர்களுக்காக உருவாக்கப்பட்ட முத்ரா திட்டத்தின் கீழ் ரூ.20 லட்சம் வரை கடன் பெறுவது எப்படி? என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.
பிரதமர் முத்ரா திட்டம் (PMMY) என்பது சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்முனைவோருக்கு (MSMEs) 10 லட்சம் முதல் 20 லட்சம் ரூபாய் வரை கடன் வழங்கும் இந்திய அரசின் முக்கிய திட்டமாகும். இது 8 ஏப்ரல் 2015-ல் தொடங்கப்பட்டது. இந்த திட்டம் நான்கு நிலைகளைக் கொண்டது
சிசு (Shishu): ₹50,000 வரை (புதிய தொழில்முனைவோர்), கிஷோர் (Kishor): ₹50,001 முதல் ₹5 லட்சம் வரை, தருண் (Tarun): ₹5 லட்சம் முதல் ₹10 லட்சம் வரை, தருண் பிளஸ் (Tarun Plus): ₹10 லட்சம் முதல் ₹20 லட்சம் (முன்பு கடனை நல்ல நிலையில் திருப்பி கட்டியவர்கள்).
கடன் வட்டி விகிதம்: 7-12% (வங்கியைப் பொறுத்து), 5 ஆண்டுகளுக்குள் திருப்பிச் செலுத்த வேண்டும். 18-65 வயது உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
சிறு கடைக்காரர்கள், கைவினைஞர்கள், சேவைத் துறையினர், பெண் தொழில்முனைவோர், SC/ST/OBC பிரிவினர், MSMEs, ஸ்டார்ட்அப்கள், சுயதொழில் செய்பவர்கள் விண்ணப்பிக்கலாம்.
ஆதார் அட்டை, பான் அட்டை, வாக்காளர் அட்டை, லோன் விண்ணப்பிக்கும் நேரத்தில் கடந்த 6 மாத வங்கி அறிக்கை, தொழில் நிறுவனத்தின் முகவரிச் சான்று, புகைப்படம் ஆகிய ஆவணங்கள் கொடுக்க வேண்டும்.
கடன் வேண்டும் என நினைப்பவர்கள் உதயம் மித்ரா போர்ட்டலில் (www.udyamimitra.in) ஆன்லைனில் விண்ணப்பிக்கவும். அதன்பின்னர், அருகிலுள்ள வங்கி/NBFC/MFI-ஐ அணுகவும். ஆவணங்களை சமர்ப்பித்து, கடனுக்கு ஒப்புதல் பெறவும்.