Pongal Gift | பொங்கல் பரிசு யாருக்கெல்லாம் கிடைக்காது? ரேஷன் அட்டை வைத்திருப்பவர்களுக்கு ஒரு முக்கிய தகவல் இங்கே தெரிந்து கொள்ளுங்கள்
Pongal Gift | ரேஷன் அட்டை வைத்திருப்பவர்களில் பொங்கல் பரிசு யாருக்கெல்லாம் கிடைக்காது? என்பதை இங்கே தெரிந்து கொள்ளுங்கள்
தமிழ்நாடு அரசு ஒவ்வொரு ஆண்டும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மக்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பை (Pongal Gift) வழங்கி வருகிறது. இந்தத் தொகுப்பில் வழக்கமாகப் பச்சரிசி, சர்க்கரை, முழுக்கரும்பு ஆகியவை இடம்பெறும்.
இந்த ஆண்டு (2026) சட்டப்பேரவைத் தேர்தல் வரவுள்ளதால், பரிசுத் தொகையாக ரொக்கப் பணம் வழங்கப்படுமா என்பது குறித்து ஜனவரி முதல் வாரத்தில் தெரியவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அரசு வழங்கும் இந்தப் பொங்கல் பரிசு, பொதுவாக ரேஷன் அட்டை (Ration Card) வைத்திருக்கும் அனைவருக்கும் கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பு உள்ளது. ஆனால், ரேஷன் அட்டை வைத்திருக்கும் அனைவருக்கும் பொங்கல் பரிசுத் தொகுப்பு கிடைக்காது என்பதே உண்மை. சில அட்டைதாரர்களுக்கு, அட்டை இருந்தும் பரிசு வழங்கப்படாது.
யாருக்குப் பொங்கல் பரிசுத் தொகுப்பு கிடைக்காது? - பொங்கல் பரிசுத் தொகுப்பைப் பெறுவதற்கு, ரேஷன் அட்டையின் வகையைத் தெரிந்துகொள்வது அவசியம். தமிழ்நாட்டில் உள்ள ரேஷன் அட்டைகளின் வகைகள்:
முன்னுரிமை அட்டை (Priority Card) - அரிசி அட்டை: அனைத்துப் பொருட்களும் கிடைக்கும்.
முன்னுரிமை அட்டை (அந்தியோதயா அன்ன யோஜனா) - அரிசி அட்டை: 35 கிலோ அரிசி உள்ளிட்ட அனைத்துப் பொருட்களும் கிடைக்கும்.
முன்னுரிமையற்ற அட்டை - அரிசி அட்டை: அனைத்துப் பொருட்களும் கிடைக்கும்.
முன்னுரிமையற்ற அட்டை - சர்க்கரை அட்டை (Sugar Card): அரிசி தவிர மற்ற அனைத்துப் பொருட்களும், சர்க்கரையும் கிடைக்கும்.
பொருளில்லா அட்டை (Non-commodity Card): இந்த அட்டை வைத்திருப்பவர்களுக்கு நியாய விலைக் கடைகளில் எந்தப் பொருளும் வழங்கப்படாது. இது வெறும் அடையாள ஆவணமாக மட்டுமே பயன்படுத்தப்படுகிறது.
இந்த வகைப்பாட்டின்படி பார்த்தால், அரிசி அட்டை (Rice Card) வைத்திருக்கும் குடும்ப அட்டைதாரர்களுக்கு மட்டுமே தமிழ்நாடு அரசு வழங்கும் பொங்கல் பரிசுத் தொகுப்பு கிடைக்கும்.
எனவே, பொருளில்லா ரேஷன் அட்டை (Non-commodity Ration Card) வைத்திருப்பவர்கள் நியாய விலைக் கடைகளில் பொங்கல் பரிசுத் தொகுப்பைப் பெற முடியாது. இதுவே, ரேஷன் அட்டை இருந்தும் பரிசு கிடைக்காததற்கான முக்கியக் காரணமாகும்.
பொங்கல் பரிசுத் தொகுப்பைப் பெறுவதற்கு, பயனாளிகள் கட்டாயம் டோக்கன் பெற்றிருக்க வேண்டும். டோக்கன் கிடைக்கப் பெறாதவர்கள், சம்பந்தப்பட்ட ரேஷன் கடைக்குச் சென்று உடனடியாகப் பெற்றுக்கொள்ள வேண்டும். டோக்கன் இருந்தால் மட்டுமே பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்படுவது உறுதி செய்யப்படும்.