பொங்கல் சிறப்பு தொகுப்பு... ஆனால் இவர்களுக்கு கிடையாது - ரேஷன் அட்டைத்தாரர்கள் வெயிட்டிங்!

Sat, 14 Dec 2024-5:06 pm,

தமிழ்நாட்டில் அறுவடை திருவிழாவான  பொங்கல் பண்டிகை வெகு விமர்சையாக கொண்டாடப்படும். ஜன.14 தைப்பொங்கல், ஜன.15 மாட்டுப்பொங்கல், திருவள்ளுவர் தினம், ஜன.16 உழவர் திருநாள் என தொடர் அரசு விடுமுறை விடப்படும்.

 

அந்த வகையில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழ்நாடு அரசு சார்பில் பொங்கல் சிறப்பு தொகுப்பு வழங்கப்படுவது வழக்கமாகும். 2025ஆம் ஆண்டுக்கான பொங்கல் சிறப்பு தொகுப்பு குறித்தும் மக்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. 

 

இது ஒருபுறம் இருக்க, இந்நிலையில், கூட்டுறவுத்துறை பொங்கல் தொகுப்பு விற்பனை குறித்து நேற்று அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இது ரேஷன் கார்டுகளுக்கு வழங்கப்படும் பொங்கல் தொகுப்பு அல்ல, மாறாக கூட்டுறவுத்துறையால் தனியாக விற்பனை செய்யப்படுபவை.

 

கூட்டுறவு நிறுவனங்கள் மூலம் பொங்கல் தொகுப்பு விற்பனை செய்யப்படும் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ள நிலையில், மூன்று தொகுப்புகளாக வழங்கப்பட இருக்கிறது. இந்த மூன்றிலும் வெவ்வேறு மளிகை பொருள்கள் இடம்பெற்றிருக்கும். 

அதன்படி சாதாரண பொங்கல் தொகுப்பு 99 ரூபாய்க்கும், சிறப்பு பொங்கல் தொகுப்பு 499 ரூபாய்க்கும், பெரும் பொங்கல் தொகுப்பு 999 ரூபாய்க்கும் விற்க உத்தரவிடப்பட்டுள்ளது. கூட்டுறவு மொத்த பண்டக சாலைகள், பிரதம மந்திரி கூட்டுறவு பண்டகசாலை, கூட்டுறவு விற்பனை சங்கம், சில்லரை விற்பனை நிலையங்கள் ஆகியவற்றில் பொங்கல் பரிசு தொகுப்பை விற்பனை செய்ய தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. 

 

இது ஒருபுறம் இருக்க, தமிழ்நாடு அரசு சார்பில் ரேஷன் அட்டைத்தாரர்களுக்கு இலவச பொங்கல் சிறப்பு தொகுப்பு வழங்கப்படுவது வழக்கம். அந்த வகையில் கடந்தாண்டு அரிசி, சர்க்கரை, முழு கரும்புடன் ரூ.1,000 ரொக்கப் பரிசு வழங்கப்பட்டது. முன்பெல்லாம், வேட்டி, சேலையும் வழங்கப்பட்டு வந்தது.

 

அந்த வகையில், இந்தாண்டு ரேஷன் அட்டைத்தாரர்களுக்கு வழங்கப்படும் பொங்கல் தொகுப்பு குறித்து எவ்வித அறிவிப்புகளும் வரவில்லை. இந்த முறையும் ரூ.1000 வழங்கப்படுமா அல்லது அதற்கு முந்தைய ஆண்டை போல 21 பொருட்கள் அடங்கிய பொங்கல் சிறப்பு தொகுப்பை வழங்குமா என மக்களால் எதிர்பார்க்கப்படுகிறது. 

 

இருப்பினும், தமிழ்நாடு அரசு வழங்கும் இந்த பொங்கல் சிறப்பு தொகுப்பு சிலருக்கு கிடையாது. மத்திய, மாநில அரசு ஊழியர்கள், பொதுத் துறை நிறுவனங்களில் பணிபுரிவோர், பொருளில்லா அட்டைதாரர்கள், சர்க்கரை அட்டைதாரர்கள், வருமான வரி செலுத்துவோர், ஆகியோருக்கு இது வழங்கப்படாது.

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link