51 வயது நடிகருக்கு ஜோடியாகும் பூஜா ஹெக்டே.. யார் தெரியுமா?

Written ByR Balaji
Published: Apr 21, 2025, 03:30 PM IST|Updated: Apr 21, 2025, 03:30 PM IST

பூஜா ஹெக்டே பீஸ்ட் படத்தில் விஜய்யுடன் நடித்ததன் மூலம் தமிழ் திரையுலகில் பிரபலமானார். 

பிரபல நடிகையான பூஜே ஹெக்டே 51 வயதான நடிகருக்கு ஜோடியாக நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அது குறித்து இங்கு பார்க்கலாம். 

1/5

பிரபல நடிகை பூஜே ஹெக்டே தமிழில் முகமுடி படத்தில் நடித்ததன் மூலம் நடிகையாக அறிமுகமானார். 

2/5

இதையடுத்து தெலுங்கு திரையுலகில் கவனம் செலுத்தி வந்த அவர் 10 ஆண்டுகள் கழித்து மீண்டும் தமிழில் நடித்தார். அவர் பிரபல நடிகர் விஜய்யுடன் பீஸ்ட் படத்தில் கதாநாயகியாக நடித்து தமிழில் பிரபலமானார். 

3/5

தற்போது சூர்யாவுடன் ரெட்ரோ, ரஜினியின் கூலி, விஜய்யின் ஜனநாயகன் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். இப்படங்கள் விரைவில் வெளியாக உள்ளது. 

4/5

இந்த நிலையில், பூஜா ஹெக்டே-வின் புதிய படம் குறித்து லேட்டஸ்ட் அப்டேட் ஒன்று வெளியாகி உள்ளது. அதன்படி, கன்னட சூப்பர் ஸ்டார் நடிகர் கிச்சா சுதீப்புடன் இணைந்து நடிக்கவிருக்கிறாராம் பூஜா ஹெக்டே. 

5/5

அனுப் பந்தரி இயக்கத்தில் கிச்சா சுதீப் நடிப்பில் உருவாக உள்ள படம் பில்லா ரங்கா பாட்ஷா. இப்படத்தில் பூஜா ஹெக்டே ஹீரோயினாக நடிக்க உள்ளதாக பேச்சு வார்த்தை அடிபடுவதாக தகவல் வெளியாகி உள்ளது. இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.