பூந்திக்கொட்டை தலைக்கு மட்டுமல்ல..இதுக்கும் பயன்படுத்தலாம்..குறிப்பாக இந்த விஷயத்துக்கு ரொம்ப நல்லது!

Eco-Friendly Cleaner: பூந்திக்கொட்டை என்பது இயற்கையில் வளரும் ஒரு சிறப்புமிக்க பொருள். இதை நாம் எவ்வாறு பல்வேறு நல்ல நோக்கங்களுக்குப் பயன்படுத்தலாம்? இது நமக்குக் கொண்டுவரும் பலன்கள் என்ன? இதன் பயன்கள் எவை? என்பதைக் கீழே உள்ள தொகுப்பில் விரிவாகக் காணலாம்.

 

Poonthikottai Offers Many Benefits: பூந்திக்கொட்டையின் பயன்பாடு பலருக்கும் தலைமுடியைச் சுத்தம் செய்வதற்காக மட்டுமே தெரிந்திருக்கலாம். ஆனால், இந்த ஒரு பொருளை பல்வேறு விதங்களில் நம் தினசரி செயல்பாடுகளுக்குப் பயன்படுத்திக்கொள்ளலாம். இயற்கையாகவே பல நன்மைகளைக் கொண்டுள்ள பூந்திக்கொட்டை, பலதரப்பட்ட பயன்பாடுகளுக்கு ஏற்றதாகும். நாம் இதனை எவ்வாறு வெவ்வேறு முறைகளில் பயன்படுத்தலாம் என்பதைப் பார்ப்போம்.

1 /8

பூந்திக்கொட்டை தலைமுடிக்கு நல்ல ஊட்டச்சத்து அளிக்கிறது(Hair care). இது முடியைப் பலப்படுத்தி, கூந்தலில் ஏற்படும் பிரச்சனைகளைத் தீர்க்க உதவுகிறது.

2 /8

வாகனங்களைக் கழுவுதல்(Car washing): கார்கள், மோட்டார், சைக்கிள்கள் போன்ற வாகனங்களைச் சுத்தம் செய்யப் பூந்திக்கொட்டை தண்ணீரைப் பயன்படுத்தலாம். இது வாகனங்களைப் பளபளப்பாக்க உதவுகிறது.

3 /8

நகைகள் சுத்தம் செய்தல்(Jewelry cleaning): பழைய நகைகளைப் புதிதுபோல் மின்ன, பூந்திக்கொட்டை பொடியாக அரைத்து, சிறிதளவு நீர் சேர்த்துத் தேய்த்துப் பயன்படுத்தலாம்.

4 /8

வீட்டைப் பராமரித்தல்(Housekeeping): பூந்திக்கொட்டை  நீரைத் தரை, சமையலறை மேசை போன்றவற்றைச் சுத்தம் செய்ய உதவுகிறது. இது இயற்கையான சுத்திகரிப்பு மூலம் அழுக்குகளை அகற்ற உதவும்.

5 /8

கழிப்பறை சுத்தம் செய்தல்(Toilet cleaning): பூந்திக்கொட்டை தண்ணீரில் ஊறவைத்து கழிப்பறையைச் சுத்தம் செய்ய ஒரு சிறந்த இயற்கை தீர்வாகும். இது கெட்ட வாசனையை நீக்கி, நோய்த்தொற்றுகளைத் தடுக்க உதவும்.

6 /8

தாவரங்களைப் பாதுகாத்தல்(Conservation of plants): பூச்சிகளை விரட்டப் பூந்திக்கொட்டைத் தண்ணீர் சிறந்த தேர்வாகும். இதைத் தண்ணீரில் கலந்து தாவரங்களுக்குத் தெளிக்கலாம், மேலும் தாவரங்களைப் பாதுகாக்க இயற்கையான வழி இது.  

7 /8

துணிகள் துவைத்தல்(Washing clothes): பூந்திக்கொட்டை இயற்கையாகத் துணிகளை மென்மையாகவும், அழுக்குகளை நீக்கவும் இது உதவுகிறது.

8 /8

பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. ZEE MEDIA இந்த தகவல்களுக்கு பொறுப்பேற்காது.