Popular Actor Gone Through 23 Surgeries Now Top Star : தமிழ் திரையுலகில் முக்கிய நடிகராக இருக்கும் ஒருவர் தனது வாழ்க்கையில் பாதி வருடத்தை ஹாஸ்பிட்டல் பெட்டிலேயே கழித்திருக்கிறாராம். அவருக்கு 23 சர்ஜரிக்களும் நடந்திருக்கிறது. அந்த நடிகர் யார் தெரியுமா?
Popular Actor Gone Through 23 Surgeries Now Top Star : தமிழ் திரையுலகில் ஹீரோவாக மாறுவதே ரொம்பவும் கஷ்டமான விஷயம். ஆனால், இங்கு ஒரு நடிகர், மொத்தம் 23 அறுவை சிகிச்சைகளுக்கு பிறகு, 3 ஆண்டுகள் மருத்துவமனையில் இருந்துவிட்டு இப்போது டாப் நடிகராக மாறியிருக்கிறார். அந்த நடிகர் யார் தெரியுமா? இதோ முழு விவரம்!
தமிழ் திரையுலகில் முக்கிய நடிகராக இருக்கும் இந்த நடிகருக்கு, திரையுலகின் ஆரம்பக்கட்ட வாழ்க்கை அவ்வளவு பெரிதாக இல்லை. அவர், சினிமாவில் நடிப்பதாக தனக்கு ஆசை இருப்பதாக, தனது பெற்றோரிடம் கூறிய போது அவர்களுக்கு பெரிதாக அதில் விருப்பமே இல்லை.
இந்த நடிகருக்கு பள்ளியில் படிக்கும் போதில் இருந்தே நாடகத்தில் நடித்த நடிப்பு அனுபவம் இருந்திருக்கிறது. அப்படியே சினிமா ஆசையும் அதிகரித்துள்ளது. இதனால், ஒரு வழியாக சினிமாவில் நடிக்க பெற்றோர்களை ஒத்துக்கொள்ள வைத்த பிறகு, இவரது வாழ்வில் பெரிய ட்விஸ்ட் ஒன்று நடந்தது.
இந்த நடிகர், சினிமாவில் நுழைய இருந்த சமயத்தில் ஒரு பெரிய விபத்தில் சிக்கியிருக்கிறார். இதனால் அவருக்கு கால் உடைந்து போயுள்ளது. இதையடுத்து, அந்த காலை டாக்டர் வெட்ட வேண்டும் என்று கூறியிருக்கிறார். இதனால், 3 வருடங்கள் இவர் மருத்துவமனை பெட்டிலேயே இருக்க வேண்டிய நிலை ஏற்பட்டிருக்கிறது.
அந்த நடிகர் வேறுய் யாருமில்லை, நடிகர் விக்ரம்தான். இப்போது கோலிவுட்டின் முக்கிய நடிகர்களுள் ஒருவராக இருக்கும் இவருக்கு மொத்த 23 சர்ஜரிக்கள் செய்யப்பட்டுள்ளதாம்.
விக்ரமால், இனி நடக்கவே முடியாது என்று மருத்துவர்கள் கூறினார்களாம். ஆனால், கொஞ்சம் கொஞ்சமாக ஸ்டிக் உதவியுடன் நடந்து சென்று ஒரு வேலைக்கு சென்றிருக்கிறார் விக்ரம். அவர் பெற்ற முதல் சம்பளமே சுமார் ரூ.750தானாம். கால் உடைந்து, எப்படி சினிமாவில் நடிப்பாய் என அனைவரும் இவரை கேட்பார்களாம்.
ஒரு வழியாக பல படங்களுக்கு ஆடிஷன்களை அட்டெண்ட் செய்து, சில படங்களில் துணை கதாப்பாத்திரங்களில் நடித்திருக்கின்றார். பின்னர், சில படங்களில் வாய்ஸ் ஆக்டராக நடித்திருக்கிறார்.
விக்ரம், இப்போது டாப் நடிகர்களுள் ஒருவர். இவருக்கு ‘Hard Working Actor’ என்கிற பெயரும் உள்ளது. அந்த அறுவை சிகிச்சைகள் நடந்த போது அவர் மனமுடைந்து அப்படியே வீட்டில் உட்கார்ந்திருந்தால் அவரால் இந்த அளவிற்கு உயர்ந்திருக்க முடியாது.