திருமணமான 3 நடிகர்களை காதலித்த பிரபல நடிகை! 50 வயதிலும் சிங்கிள்- யார் தெரியுமா?

Written ByYuvashree
Published: Oct 03, 2025, 12:08 PM IST|Updated: Oct 03, 2025, 12:08 PM IST

Actress Involved With Married Actors Single At 50 : பிரபல நடிகை ஒருவர் 50 வயதாகியும் இன்னும் சிங்கிளாக இருக்கிறார். ஆனால் இளமை காலத்தில் பல காதல் கதைகள் இவரை சுற்றி வலம் வந்து கொண்டிருந்தது. அந்த நடிகை யார் தெரியுமா?

Actress Involved With Married Actors Single At 50 : தமிழ் சினிமாவில் இருக்கும் நடிகர் நடிகைகள் ஒன்றாக படங்களில் நடிக்கும் போது காதலில் விழுவதும் எழுவதும் சகஜம். அந்த காதல் பல சமயங்களில் கை சேரலாம், கை சேராமலும் போகலாம். அப்படி இங்கும் ஒரு நடிகையை சுற்றி சில காதல் கதைகள் வலம் வந்தன. அந்த நடிகை, பின்னர் அந்த காதல்களில் இருந்து மீண்டு வந்து, இப்போது 50 வயதிலும் சிங்கிளாகவே இருக்கிறார். அவர் யார் தெரியுமா?

Famous Actress1/7

பிரபல நடிகை

தமிழ் திரையுலகில் பிரபலமாக இருந்த நடிகைகளுள் ஒருவர் இவர். இவர் நடித்த பல படங்கள் ஹிட் ஆகியிருக்கின்றன. 90கள் மற்றும் 2000 காலகட்டங்களில் இவர்தான் டாப் ஹீரோயினாக இருந்தார்.

Nagma2/7

நக்மா

அந்த நடிகை வேறு யாருமில்லை, நக்மாதான். தமிழில் பாட்ஷா, காதலன் உள்ளிட்ட பல ஹிட் படங்களில் நடித்திருக்கும் இவர், ஜோதிகாவின் சகோதரியும் கூட. இவர் இந்தியிலும் டாப் நடிகையாக வலம் வந்துள்ளார். 

Tamil Actress3/7

தமிழ் நடிகை

நக்மா, மும்பையில் பிறந்து வளர்ந்தவராக இருந்தாலும், அவருக்கு தமிழ் திரையுலகம்தான் பெரிய மார்கெட்டை திறந்து வைத்தது. இதனாலேயே இந்தி படங்களில் நடித்தாலும், அவர் தமிழ் மக்களை மறக்கவில்லை. 

Love Stories4/7

காதல் கதைகள்

நக்மா இளமை காலத்தில் இருந்த போது, அவரை சுற்றி பல காதல் கிசுகிசுக்கள் வலம் வந்ததுண்டு. இவர், பிரபலமாக இருந்த நடிகர்கள் மற்றும் ஒரு கிரிக்கெட்டருடன் உறவில் இருந்ததாகவும் கூறப்பட்டது. 

Ganguly5/7

கங்குலி

நக்மா-சௌரவ் கங்குலியின் காதல் உறவு குறித்து பாலிவுட் வட்டாரத்துக்கே தெரியும் என்று கூறப்படுகிறது. இந்த சமயத்தில், கங்குலியும் திருமணம் ஆனவராக இருந்தாராம். இவர்களின் உறவு குறித்து இதுவரை இருவரும் வெளியில் பேசவே இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Sarathkumar6/7

சரத்குமார்

நடிகை நக்மா, கிரிக்கெட் வீரர் கங்குலியுடன் ஆன உறவு முறிந்தவுடன் சரத்குமாருடன் உறவில் இருந்ததாக கூறப்பட்டது. அந்த சமயத்தில் சரத்குமார் திருமணம் ஆனவராக இருந்தாராம். இந்த உறவு குறித்து தெரிந்த பின்பு அவர்கள் திருமண விவாகரத்து செய்து கொண்டதாக கூறப்படுகிறது. அதன் பிறகு நக்மா-சரத்குமார் உறவும் நீடிக்கவில்லையாம்.