இந்தியா-பாகிஸ்தான் போர்: மக்களின் வாழ்வில் நிகழ்ப்போகும் மாற்றங்கள்!

Changes That Might Happen After India Pakistan War : இந்தியா-பாகிஸ்தான் இடையே போர் பதற்ற சூழல் உருவாகி இருக்கிறது. இந்த போருக்கு பின், மக்களின் வாழ்க்கை எப்படியெல்லாம் மாறலாம் என்பதை இங்கு பார்ப்போம். 

Changes That Might Happen After India Pakistan War : பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில், இந்தியா ஆப்ரேஷன் சிந்தூரை ஆரம்பித்தது. அதன்படி, கடந்த ஏப்ரல் 7ஆம் தேதி நள்ளிரவு முதல் பாகிஸ்தான் மீதும் பாகிஸ்தான் ஆக்கிரமித்த ஜம்மு காஷ்மீர் பகுதிகள் மீதும் இந்தியா தாக்குதல் நடத்தியது. இந்த நிலையில், இந்த போர் முடிவுக்கு பிறகு என்னென்ன மாற்றங்கள் நிகழும் என்பது குறித்து இங்கு பார்ப்போம்.

1 /7

உணவு, பெட்ரோல் மற்றும் அத்தியாவசிய விஷயங்களின் விலையேற்றம் ஏற்படலாம். இதனால் பொருளாதாரம் பலமாக அடிவாங்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. ஏற்றுமதி, சுற்றுலா உள்ளிட்ட துறைகளில் வேலை இழப்பு அபாயம் ஏற்படலாம்.

2 /7

இந்தியாவின் எல்லை பகுதிகளில் ஊரடங்கு உத்தரவுகள் பிறப்பிக்கப்படலாம். இதனால் மக்களின் தினசரி வாழ்க்கை பாதிக்கப்படும். இணையதள சேவை நிறுத்தம், பள்ளி-கல்லூரிகள் மூடல் ஆகியவையும் நிகழலாம்.

3 /7

மக்களுக்கு போருக்கு பின் பதற்றமான மனநிலை உருவாகலாம். உயிரிழப்புகள்,  ஏவுகணை தாக்குதல்கள் ஆகியவற்றால் மன அழுத்தம் மற்றும் அதிர்ச்சி (Trauma) ஆகியவை ஏற்படலாம். இதிலிருந்து மீண்டு வர, பலருக்கு பல வருடங்கள் தேவைப்படும். இது குறிப்பாக எல்லைக்கு அருகில் இருக்கும் மக்களை அதிகமாக பாதிக்கும். 

4 /7

சில செய்தி நிறுவனங்கள் நாட்டுப்பற்று என்ற பெயரில் வீண் வதந்திகளை பரப்பலாம். இதனால், எதிரி நாட்டின் மீது தேவையற்ற வெறுப்புணர்வு உருவாகலாம். அது மட்டுமன்றி, சமூக வலைதளங்கள் உள்ளிட்ட பிற தளங்களில் தேவையற்ற பொய் செய்திகள் பரவுவதால், மக்கள் பயம் அல்லது பதற்ற சூழ்நிலைக்கு தள்ளப்படுகின்றனர்.

5 /7

ராணுவ வீரர்கள், பலர் உயிரிழக்க நேரிடும். இதனால், அவர்களின் குடும்பத்தினருடைய வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதோடு, எல்லையில் இருக்கும் ராணுவ வீரர்களின் குடும்பங்களும் பய உணர்வோடு இருப்பர்.

6 /7

எல்லையில் இருக்கும் மக்களின் வீடுகள், வாழ்வாதாரங்கள் பெரிதாக பாதிக்கப்படலாம். அவர்கள் தங்களின் குடும்பங்கள், பிற உறவுகளை இழந்து வேறு எங்காவது செல்ல நேரிடலாம்.

7 /7

தொழில் ரீதியாக அல்லது தனிப்பட்ட விருப்பத்தின் பேரில் வெளிநாடு செல்பவர்களின் பயணங்கள் தடைபடலாம். இதனால் தொழிலதிபர்கள், மாணவர்களின் வாழ்க்கை பாதிக்கப்படலாம்.