Retirement Planning With PPF: ஓய்வூதியத்திற்கான திட்டமிடல், முதுமையில் ஓய்வுக்கு பின், யாரையும் சாராமல், உடன் வாழ உதவும். பென்ஷன் வசதி இல்லாதவர்கள், பி பி எஃப் திட்டத்தின் மூலம், மாதம் ரூ. 85 ஆயிரம் வரியில்லா வருமானம் பெறலாம்.
மத்திய அரசின் நீண்ட கால முதலீட்டு திட்டமான பி பி எஃப், கூட்டு வட்டி வருமானத்துடன் கூடிய மிகவும் பாதுகாப்பான திட்டம். இதில் திட்டமிட்டு செய்யப்படும் முதலீடு மூலம், மாதம் தோறும் நல்ல தொகையை, பென்ஷன் போன்ற வருமானமாக பெறலாம்.
PPF முதலீடு: ஒவ்வொரு வருடமும் அதிகபட்ச தொகையான மாதம் ரூ.12,500 அல்லது ஆண்டுக்கு ரூ. 1.5 லட்சத்தை, 29 ஆண்டுகளுக்கு தொடர் முதலீடு செய்து வந்தால், உங்களிடம் ரூ.1.42 ஒரு கோடிக்கும் அதிகமான ஓய்வூதிய நிதி சேர்ந்த விடும். இதன் மூலம், மாதம் ரூ. 85 ஆயிரம் வரியில்லா வருமானம் பெறலாம்.
கார்பஸ் ரூ.1.03 கோடி: 25 ஆண்டு கால கட்டத்தில், மொத்த முதலீடு ரூ.37,50,000 ஆகவும், மதிப்பிடப்பட்ட வட்டி ரூ.65,58,015 ஆகவும், மதிப்பிடப்பட்ட கார்பஸ் ரூ.1,03,08,015 ஆகவும் இருக்கும்.
கார்பஸ் ரூ.1.42 கோடி: 29 ஆண்டுகளில், மொத்த முதலீடு ரூ.99,26,621 ஆகவும், மதிப்பிடப்பட்ட வட்டி தொகை ரூ.99,26,621 ஆகவும், மதிப்பிடப்பட்ட கார்பஸ் ரூ.1,42,76,621 ஆகவும் இருக்கும்.
முதலீட்டில் இருந்து கிடைக்கும் வட்டி: 29 ஆண்டுகளுக்கு பிறகு, கணக்கு வைத்திருப்பவர்கள் கார்பஸுக்கு கிடைக்கும் வட்டியை எடுக்கத் தொடங்கலாம். கணக்கை நீட்டிக்கும் போது, கணக்கு வைத்திருப்பவர் வருடத்திற்கு ஒரு முறை வட்டித் தொகையை எடுக்க அனுமதிக்கப்படுகிறார்.
வட்டி வருமானம்: பிபிஎஃப் முதலீட்டிற்கு 7.1 சதவீத வட்டி விகிதத்தில், ஒரு வருடத்தில் வட்டி ரூ.11,89,718 ஆக இருக்கும். இது ஒரு மாதத்திற்கு ரூ.85,000 என்ற தொகைக்கு சமமாக இருக்கும்.
ரூ.85,000 மாத வருமானம்: மாதத்திற்கு ரூ.12,500 அல்லது வருடத்திற்கு ரூ.1.5 லட்சம் என்ற அளவில் 29 ஆண்டுகளுக்கான தொடர் முதலீட்டிற்கு பிறகு வாழ்நாள் முழுவதும் ரூ.85,000 வழக்கமான வருமானத்தை பெறலாம்.
வரி இல்லாத வருமானம்: பிபிஎஃப் திட்ட முதலீடுகள், அதிக் கிடைக்கும் கார்பஸ், வட்டி என அனைத்திற்கும் வரி இல்லை என்பதால், இது வரி இல்லாத வருமானமாக இருக்கும். எனவே பாதுகாப்பான, வரி இல்லாத மற்றும் நிரந்தர வருமானத்தைத் திட்டமிடுபவர்களுக்கு PPF சிறந்த தேர்வாக இருக்கும்.