Prasakthi Worldwide Box Office Collection Day 2 : சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவான பராசக்தி திரைப்படம், 2 நாட்களில் எவ்வளவு வசூல் செய்திருக்கிறது என்பதை இங்கு பார்ப்போம்.
Prasakthi Worldwide Box Office Collection Day 2 : சிவகார்த்திகேயனின் 25வது படமாக உருவாகியிருக்கிறது பராசக்தி திரைப்படம். இந்த படத்தை சுதா கொங்கரா இயக்கியிருக்கிறார். பொங்கல் பண்டிகையை முன்னிட்டு உருவாகியிருக்கும் இந்த படம், தமிழ் மக்களிடையே நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது. இதுவரை, இப்படம் பெற்ற வசூல் என்ன என்பதை இங்கு பார்ப்போம்.
சிவகார்த்திகேயனின் 25வது படமாக உருவான படம், பராசக்தி. இந்த படத்தை, சுதா கொங்கரா இயக்கியிருந்தார். 1960களில் நடந்த இந்தி எதிர்ப்பு போராட்டத்தை வைத்து எடுக்கப்பட்ட படம் இது
சிவகார்த்திகேயன் இந்த படத்தில் இளம் போராட்ட வீரராக நடித்திருக்கிறார். இவருடன் முக்கிய கதாப்பாத்திரங்களில் அதர்வாவும், ஸ்ரீலீலாவும் முக்கிய தோற்றங்களில் நடித்திருக்கின்றனர்.
பராசக்தி திரைப்படத்திற்கு சென்சார் சான்றிதழ் கொடுக்க சிறிது தாமதம் ஆனது, சில சர்ச்சைகளை ஏற்படுத்தியது. இருப்பினும், கடைசி நேரத்தில் ‘தீ பரவட்டும்’ எனும் வாக்கியத்தை ‘நீதி பரவட்டும்’ என மாற்றி, சில காட்சிகளை நீக்கி, 20க்கும் மேற்பட்ட இடங்களில் வெட்டு போட்டு படத்திற்கு யு/ஏ சான்றிதழை அளித்தனர்.
பராசக்தி படத்தில் இடம் பெற்றுள்ள கருத்துகளை கண்டிப்பாக அனைவரும் பார்க்க வேண்டும் என்று அண்ணாமலை உள்ளிட்ட சில அரசியல் கட்சி தலைவர்களும் கூறியிருக்கின்றனர்.
பராசக்தி திரைப்படம் தமிழ்நாட்டை தாண்டி இன்னும் சில மாநிலங்களில் வெளியாகி இருக்கிறது. இதனால், படத்தின் வசூல் என்னவாக இருக்கும் என்பது குறித்த சந்தேகமும் பலருக்கு எழ ஆரம்பித்துள்ளது
பராசக்தி படம், முதல் நாளிலேயே சுமார் ரூ. 27 கோடிக்கும் மேல் வசூலித்ததாக அறிவிக்கப்பட்டது.
இரண்டாம் நாளில், பராசக்தி படம் உலகளவில் சுமார் ரூ.51 கோடி வசூலை பெற்றுள்ளது. பொங்கலில் இன்னும் இந்த வசூல் அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.