சனி பெயர்ச்சி 2025: வாழ்வில் ஏற்றம் காணப்போகும் ராசிகள்... தடைகள் விலகி வெற்றிகள் குவியும்

Sani Peyarchi 2025: மார்ச் 29, 2025 சனி பெயர்ச்சி நடக்கவுள்ளது. இதனால் சில ராசிகளுக்கு விசேஷ நன்மைகள் கிடைக்கும். நம்ப முடியாத நற்பலன்களை பெறப்போகும் ராசிகள் இவைதான்.

 

Sani Peyarchi Palangal: அனைத்து கிரகங்களிலும் மிகவும் முக்கியமான கிரகமாக கருதப்படும் சனி பகவான் இரண்டரை வருடங்களுக்கு ஒரு முறை தனது ராசியை மாற்றுகிறார். மார்ச் 29, 2025 அன்று, சனி பகவான் கும்ப ராசியிலிருந்து மீன ராசிக்கு பெயர்ச்சி ஆவார். ஜோதிடக் கணக்கீடுகளின்படி, சில ராசிகளைச் சேர்ந்தவர்கள் சனியின் ராசி மாற்றத்தால் அதிக பயனடைவார்கள். இந்த ராசிக்காரர்களுக்கு பண வரவு அதிகமாகும். குடும்பத்தில் மகிழ்ச்சியும் அமைதியும் இருக்கும். ஆரோக்கியம் நன்றாக இருக்கும். சனியின் ராசி மாற்றத்தால் எந்த ராசிக்காரர்கள் அதிக பயனடைவார்கள் என்பதை இந்த பதிவில் காணலாம்.

1 /10

மார்ச் மாத இறுதியில் நடக்கும் சனி பெயர்ச்சியின் தாக்கம் அனைத்து ராசிகளிலும் காணப்படும். எனினும், சில ராசிகளில் இதனால் அதிகமான நல்ல பலன்கள் கிடைக்கும். இவர்கள் வாழ்வில் தடைபட்டிருந்த அனைத்து விஷயங்களும் இப்போது வெற்றிகரமாக நடந்துமுடியும். உடல் ஆரோக்கியம் நன்றாக இருக்கும். அந்த அதிர்ஷ்ட ராசிகளை பற்றி இந்த பதிவில் காணலாம்.

2 /10

மேஷம்: சனி பெயர்ச்சி காலத்தில் சனி பகவானின் அருளால் உங்கள் பணியிடத்தில் பெரிய முன்னேற்றங்கள் கிடைக்க வாய்ப்புகள் கிடைக்கும். வாழ்க்கைத் துணையுடன் நல்ல நேரத்தை அனுபவிப்பீர்கள். உங்கள் குழந்தைகளிடமிருந்து நல்ல செய்தியைப் பெறலாம். பொருளாதார ரீதியாக நன்மைகள் ஏற்படும். நிதி நிலைமை வலுவாக இருக்கும். உங்கள் கடின உழைப்பின் முழு பலனையும் பெறுவீர்கள். நிலுவையில் உள்ள பணிகள் வெற்றிகரமாக நிறைவடையும். தொழில் மற்றும் வியாபாரத்தில் புதிய வாய்ப்புகள் உங்களுக்குக் கிடைக்கும். செல்வத்தைச் சேர்ப்பதில் வெற்றி பெறுவீர்கள்.

3 /10

மிதுனம்: சனி பெயர்ச்சியின் தாக்கத்தால் அலுவல பணிகளில் வெற்றி கிடைக்கும். மேல் அதிகாரிகள் மற்றும் சக ஊழியர்களின் முழுமையான ஆதரவு கிடைக்கும். உங்கள் வாழ்க்கையில் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். பணப் பற்றாக்குறை இருக்காது. பணியிடத்தில் நல்ல பலன்களைப் பெறுவீர்கள். வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் ஊதிய உயர்வு கிடைக்க வாய்ப்புள்ளது.

4 /10

தனுசு: சனி பெயர்ச்சி காலத்தில் உங்கள் பணியிடத்தில் புகழும் பாராட்டும் கிடைக்கும். உறவினர்கள் மற்றும் நண்பர்களின் முழுமையான ஆதரவு கிடைக்கும். நிதி நிலை நன்றாக இருக்கும். அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவு கிடைக்கும். வருமானம் அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளது. வெளியூர் பயணங்களை மேற்கொள்வீர்கள்.

5 /10

மகரம்: சனி பெயர்ச்சியின் தாக்கத்தால் இந்த நேரத்தில் உங்களுக்கு அதிர்ஷ்டத்தின் முழுமையான ஆதரவு கிடைக்கும். சனி பெயர்ச்சிக்கு பின் மகர ராசிக்காரர்களுக்கு பாத சனி விலகி ஏழரை சனியிலிருந்து நிவாரணம் கிடைக்கும். கல்வித்துறையில் நீங்கள் சிறப்பாக செயல்படுவீர்கள். உங்கள் துணைவருடன் பரஸ்பர வேறுபாடுகளைத் தவிர்க்கவும். இந்த காலகட்டத்தில், நிதி சிக்கல்களில் இருந்து உங்களுக்கு நிவாரணம் கிடைக்கும். உங்கள் வேலையில் வெற்றியைப் பெறுவீர்கள்.

6 /10

சனிபகவான் ஒரு ராசியில் பெயர்ச்சி ஆகும்போது, அவர் பெயர்ச்சி ஆகி அமர்ந்துள்ள் ராசிக்கும், அதற்கு முன் உள்ள ராசிக்கும், அதற்கு பின் உள்ள ராசிக்கும் ஏழரை நாட்டு சனி இருக்கும். தற்போது இந்த மாதம் 29 ஆம் தேதி மீன ராசியில் சனி பெயர்ச்சி நடக்கவுள்ளது. இதனால் மீன ராசிக்கு ஜென்ம சனியும் (இரண்டாம் நிலை), அதன் முன் உள்ள கும்ப ராசிக்கு பாத சனியும் (மூன்றாம் நிலை), கும்ப ராசிக்கு பின் உள்ள மீன ராசிக்கு விரய சனியும் (முதல் நிலை) தொடங்கும்.

7 /10

சனி பெயர்ச்சியால் சில ராசிகளுக்கு ஏழரை சனி (Ezharai Sani) பாதிப்புகள் ஏற்படும். ஏழரை சனி என்றாலே பலருக்கு அச்சம் ஏற்படுகின்றது.  ஆனால் அப்படி அச்சம் கொள்ளத் தேவையில்லை. சனி பகவான் நீதியின் கடவுளாக இருப்பதால், அவர் நியாயமான விளைவுகளையே ஏற்படுத்துகிறார்.

8 /10

முக்கியமாக நாம் செய்த தவறை உணர்ந்து அதற்கு மனதார மன்னிப்பு கேட்டால் சனி பகவான் நமக்கான தீய விளைவுகளை குறைக்கிறார். மேலுன் ஏழரை சனி காலத்தில் நியாயமாக நடந்துகொண்டால், பாதிப்புகள் குறைவாக இருக்கும். ஏழரை நாட்டு சனி காலத்தில் தினமும் சனி சாலிசா, அனுமான் சாலிசா, கோளறு பதிகம் ஆகியவற்றை சொல்வது அதிகப்படியான நன்மைகளை அளிக்கும்.

9 /10

ஏழரை சனியால் பாதிக்கப்பட்டும் ராசிக்காரர்கள் சனிக்கிழமையன்று சனிபகவானை வணங்கி எள் தீபத்தை ஏற்றி வழிபட வேண்டும். கோயிலுக்கு சென்று, சனீஸ்வரரை வணங்க, தீபம் ஏற்றி, அங்குள்ள ஏழை எளிய மக்களுக்கு தானம் தர்மம் செய்யலாம். நலிந்தோருக்கு உதவும் நபர்களை சனி பகவான் அதிகம் சோதிப்பதில்லை.

10 /10

பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.