தினமும் நீங்கள் சாப்பிட வேண்டிய முக்கிய உணவுகள் குறித்து இங்கு பார்க்கலாம்.
1/6பருப்பு வகைகள் நாம் சாதம், குழப்பு போன்ற உணவுகளுடன் எடுத்துக்கொள்ளலாம் அல்லது தனியாக சாப்பிடலாம். பருப்பு வகைகள் புரத சத்துக்கள் நிறைந்துள்ளதால் நம் உணவில் கட்டாயம் சேர்த்துக்கொள்ள வேண்டும்.
2/6பால் மற்றும் பாலால் தயாரிக்கப்பட்ட பொருட்களில் புரதம் மற்றும் கால்சியம் உள்ளது. கால்சியம் உங்கள் உடம்பில் சேர்ப்பதால் உங்கள் எலும்புகள் வலுவடையும். புரதம் தசைகளை வளர்க்க உதவுகிறது.
3/6பாதாம் உள்ளிட்ட நட்ஸ் வகைகளில் வைட்டமின் ஈ, நார்ச்சத்து, மெக்னீசியம், புரதம் போன்ற உட்டச்சத்துகள் நிறைந்துள்ளன. இதனை நீங்கள் தினமும் சாப்பிடுவதால் அதிக எல்டிஎல் (கெட்ட) கொழுப்பு மற்றும் இரத்த அழுத்தம் போன்ற இதய நோய் ஆபத்து காரணிகளை குறைக்கும்.
4/6அதிகம் புரதம் நிறைந்த உணவுகளில் முட்டையும் அடங்கும். உடலை வளர்க்க நினைப்பவர்கள் இதனை அதிகம் எடுத்துக்கொள்ளலாம். வளர்ச்சிதை மற்றும் நோய் எதிர்ப்பு செயல்பாடு போன்ற முக்கிய அமைப்புகளை ஒழுங்குபடுத்த முட்டை உதவுகிறது.
5/6சிக்கன், மட்டன் மற்றும் மீன் ஆகியவற்றில் அதிகமான புரத சத்துக்கள் உள்ளன. அசைவ உணவை சாப்பிடுபவர்கள் எளிதாக புரத சத்துக்களை பெற முடியும். சைவ உணவுகள் சாப்பிடுபவர்கள் கொண்டை கடலை உள்ளிட்டவைகளை எடுத்துக்கொள்ளலாம்.
6/6(பொறுப்பு துறப்பு: இவை அனைத்தும் பொதுவான கருத்துகள். இதனை ஜீ நியூஸ் (Zee Tamil News) உறுதிப்படுத்தவில்லை. இக்கட்டுரையில் குறிப்பிட்டுள்ளதை கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது உங்கள் உடல்நலப் பயிற்சியாளரை அணுகும்படி கேட்டுக்கொள்கிறோம்.)