Tamil Nadu government : புதுமைப் பெண் திட்டத்தில் ரூ.1000 பெற விண்ணப்பிக்குமாறு தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.
Tamil Nadu government : கல்லூரி பெண்களுக்கு மாதம் ரூ.1000 வழங்கப்படும் புதுமைப் பெண் (Pudhumai Penn) திட்டத்திற்கு விண்ணப்பிக்குமாறு தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. இந்த அறிவப்பு யாருக்கானது என்பதை இங்கே தெரிந்து கொள்ளுங்கள்.
1/12Tamil Nadu government : புதுமைப் பெண் (Pudhumai Penn) மற்றும் தமிழ் புதல்வன் திட்டத்தில் (Tamil Pudhalvan Scheme) பயன் பெற 6-ம்வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரையில் அரசுப் பள்ளி அல்லது அரசு உதவி பெறும் பள்ளியில் படித்து உயர் கல்வி பயிலும், அதாவது பட்டப்படிப்பு அல்லது பட்டயப்படிப்பு மாணவ மாணவிகளுக்கு மாதம் ரூ.1000/- வழங்கும் திட்டம் செயல்பட்டு வருகிறது.
2/12சமூகத்தில் விளிம்பு நிலை மக்களாகக் கருதப்படும் திருநங்கை, திருநம்பி மற்றும் இடைபாலினர் உள்ளிட்ட அனைத்து திருநங்கையர்களின் சமூகப் பொருளாதார மேம்பாட்டினை உறுதி செய்து, வாழ்க்கையில் வெற்றி பெற உயர்கல்வியின் அவசியத்தினைக் கருத்தில்கொண்டு, அவர்களும் இந்த திட்டத்தில் பயன்பெறும் வகையில் அண்மையில் தமிழ்நாடு விதிகளை தளர்த்தியது.
3/122025-2026 ஆம் நிதியாண்டு முதல் அரசு கொண்டு வந்திருக்கும் தளர்வுகளின்படி, திருநங்கைகள், திருநம்பியர்கள் மற்றும் இடைபாலினர்கள், புதுமைப் பெண் மற்றும் தமிழ் புதல்வன்திட்டங்களில் பயன்பெறலாம்.
4/12இது தொடர்பாக தமிழ்நாடு முழுவதும் அனைத்து மாவட்ட ஆட்சியர் மற்றும் தாலுகா வாரியாக அதிகாரிகள் விழிப்புணர்வு மேற்கொள்கின்றனர். துறை சார்ந்த ஆய்வு கூட்டங்களில் இத்தகவலை தெரிவிக்குமாறும் அதிகாரிகளுக்கு தமிழ்நாடு அரசு அறிவுறுத்தியுள்ளது.
5/12புதுமைப்பெண் மற்றும் தமிழ்ப் புதல்வன்திட்டங்களில் பயன்பெறுவதற்கான தகுதி வரம்புகளில் திருநங்கை, திருநம்பி மற்றும் இடைபாலினர் உள்ளிட்ட அனைத்து திருநங்கையர்களுக்கும் அரசுப் பள்ளிகளில் மற்றும் அரசு உதவி பெறும்பள்ளிகளில் 6 முதல் 12 ஆம் வகுப்பு வரை தமிழ் வழியில் படித்திருக்கவேண்டும் என்பதை முற்றிலுமாக தளர்வு செய்து ஆணைவழங்கப்பட்டுள்ளது.
6/12எனவே, உயர்கல்வி பயிலும் அல்லது உயர் கல்வி பயில உள்ளதிருநங்கைகள், திருநம்பிகள் மற்றும் இடைபாலினர் ஆகியோர் சார்ந்த கல்லூரியில் மேற்படி திட்டத்தில் பதிவு செய்து மாதம் ரூ.1000/- பெற்றுபயன் பெறலாம்.
7/12மேலும், உயர்கல்வியில் சேரும் அனைத்து திருநங்கை மற்றும்திருநம்பிகளுக்கு கல்வி கட்டணம் உள்ளிட்ட அனைத்து கல்விச்செலவினங்களை தமிழ்நாடு திருநங்கைகள் நல வாரியத்தின் மூலம் வழங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
8/12எனவே, திருநங்கைகள்அனைவருக்கும் கல்விக் கட்டணம் உள்ளிட்ட அனைத்து கட்டணங்களையும் அரசே ஏற்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், திருநங்கை, திருநம்பி, இடை பாலினர் சமூகத்தினர் இந்த திட்டத்துக்கு தேவையான தமிழ்நாடு திருநங்கைகள் நல வாரியத்தால் வழங்கப்படும் அடையாள அட்டையினை பெற்று, விண்ணிப்பிக்குமாறு திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் கேட்டுக் கொண்டுள்ளார்.
9/12மேலும், தகவலுக்கு மாவட்ட சமூக நல அலுவலரை தொடர்பு கொள்ளலாம் தொலைப்பேசி எண்ணை 044-29896049 தொடர்பு கொள்ளலாம்.
10/12இதேபோல், திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் சமூகநலத்துறையின் கீழ் புதுமைப்பெண் திட்டம் மற்றும் தமிழ்ப்புதல்வன் திட்டம் ஆகிய திட்டங்களின் வழியாக உயர்கல்வி பயிலும் மாணவ மாணவியர் மாதந்தோறும் உதவித்தொகை பெற்று வருகின்றனர்.
11/12இத்திட்டங்களில் திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் உள்ள திருநங்கை, திருநம்பி மற்றும் இடைப்பாலினர் உள்ளிட்ட அனைத்து திருநங்கையர்களும் பயன்பெற அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. எனவே 2025-2026 ஆம் கல்வியாண்டில் திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் உயர்கல்வி பயின்று வரும் திருநங்கை, திருநம்பி மற்றும் இடைப்பாலினர் ஆகியோர் புதுமைப்பெண் மற்றும் தமிழ்ப்புதல்வன் திட்டங்களில் விண்ணப்பித்து பயன்பெறுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
12/12மேலும் விபரங்களுக்கு திருச்சிராப்பள்ளி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் இரண்டாம் தளத்தில் உள்ள மாவட்ட சமூகநல அலுவலகத்தினை தொடர்பு கொள்ளவும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.