புதுமைப் பெண் திட்டம் : மாணவிகள் எப்படி விண்ணப்பிக்க வேண்டும்? அரசு முக்கிய தகவல்

Published: Nov 05, 2025, 01:52 PM IST|Updated: Nov 05, 2025, 01:52 PM IST

pudhumai penn scheme : புதுமைப் பெண் திட்டத்துக்கு கல்லூரி மாணவிகள் எப்படி விண்ணப்பிக்க வேண்டும்? என்பதை தெரிந்து கொள்ளுங்கள்

 

pudhumai penn scheme : கல்லூரி படிக்கும் மாணவிகள் மாதம் ரூ.1000 பெறும் புதுமைப் பெண் திட்டத்துக்கு எப்படி விண்ணப்பிப்பது என்பதை இங்கே தெரிந்து கொள்ளுங்கள்.

 

1/8

தமிழ்நாட்டில் உயர்கல்வியில் சேரும் மாணவிகளின் எண்ணிக்கையை அதிகரிக்கும் பொருட்டு 2022 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 5 ஆம் தேதி புதுமைப் பெண் திட்டம் (pudhumai penn scheme) தொடங்கப்பட்டது.

 

2/8

இத்திட்டத்தின் கீழ் கல்லூரிகளில் சேரும் மாணவிகளுக்கு மாதம் தோறும் ஆயிரம் ரூபாய் வழங்கப்படும். ஆனால், அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 6ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு படித்தவர்களாக இருக்க வேண்டும்.

 

3/8

கல்லூரியில் படிக்கும் மாணவிகளுக்கு மட்டுமே இத்திட்டத்தின் கீழ் மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் வழங்கப்படும். ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும், ஒவ்வொரு மாணவிக்கும் தலா ஆயிரம் ரூபாய் கொடுக்கப்படும்.

 

4/8

எனவே, இத்திட்டத்தின் கீழ் இதுவரை விண்ணப்பிக்காமல் மாணவிகள் இருந்தால் உடனே விண்ணப்பிக்குமாறு தமிழ்நாடு அரசின் சமூகநலத்துறை கேட்டுக்கொண்டுள்ளது.

 

5/8

மாணவிகள் தாங்கள் உயர்கல்வி படிக்கும் கல்லூரியின் ஒருங்கிணைப்பாளரை அணுகி https://umis.tn.gov.in/ என்ற வெப்சைட்டில் இத்திட்டத்துக்கு விண்ணிப்பிக்க வேண்டும்.

 

6/8

முறையாக விண்ணப்பித்த மாணவிகளுக்கு மட்டுமே மாதம் ரூ.1000 கிடைக்கும். எனவே, மாணவிகள் இத்திட்டத்தை பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

 

7/8

இத்திட்டம் தொடர்பாக அண்மையில் தமிழ்நாடு அரசு வெளியிட்ட தகவலில், புதுமைப் பெண் திட்டம் தொடங்கப்பட்ட பிறகு உயர்கல்வியில் சேரும் மாணவிகளின் எண்ணிக்கை முந்தைய ஆண்டுகளுடன் ஒப்பிடும்போது ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்திருப்பதாக தெரிவித்துள்ளது.

 

8/8

திண்டுக்கல் மாவட்டம், பழனியாண்டவர் மகளிர் கலைக் கல்லுாரியில் சேர்ந்து புதுமைப் பெண் திட்டத்தில் பயனாளியாக இருக்கும் மாணவி ஒருவர் பேசும்போது, என் தந்தை சில ஆண்டுகளுக்கு முன் இறந்த நிலையில், அண்ணன் வேலைக்கு செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது. இத்திட்டத்தில் ஆயிரம் ரூபாய் கிடைப்பதால் நான் உயர்கல்வியை படிக்க முடிகிறது என தெரிவித்துள்ளார்.