சூரியன் பெயர்ச்சி: புரட்டாசியில் பட்டையை கிளப்பப்போகும் ராசிகள் இவைதான்.... முழு ராசிபலன் இதோ

Published: Sep 17, 2025, 03:05 PM IST|Updated: Sep 17, 2025, 03:05 PM IST

Purattasi Matha Rasi Palan: இன்று புரட்டாசி மாதம் பிறந்துவிட்டது. மேஷம் முதல் மீனம் வரை அனைத்து ராசிகளுக்கும் இந்த மாதம் எப்படி இருக்கும்? முழு ராசிபலனை இந்த பதிவில் காணலாம்.

Suriyan Peyarchi Palangal: இன்று சூரியன் கன்னி ராசியில் பெயர்ச்சி ஆனார். ஒவ்வொரு மாதமும் சூரியன் பெயர்ச்சி ஆகும் நாளில் புதிய தமிழ் மாதமும் பிறக்கிறது. இன்று பிறந்துள்ள புரட்டாசி மாதம் சூரியன் பெயர்ச்சியின் அடிப்படையில் எந்த ராசிக்கு எப்படி இருக்கும் என இங்கே காணலாம்.

Aries1/13

மேஷம்

மேஷம்: சூரியன் பெயர்ச்சி மேஷ ராசிக்காரர்களுக்கு சாதகமாக இருக்கும். வேலை தேடிக்கொண்டிருக்கும் மேஷ ராசிக்காரர்களுக்கு புரட்டாசி மாதத்தில் நல்ல வேலை கிடைக்கும். குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் நடக்கும். வாழ்வில் மகிழ்ச்சியும், அமைதியும் இருக்கும்.

Taurus2/13

ரிஷபம்

ரிஷபம்: சூரியன் பெயர்ச்சி ரிஷப ராசிக்காரர்களுக்கு மிகப்பெரிய நன்மைகளை அளிக்கும். குழந்தைகள் மூலம் நல்ல செய்திகள் கிடைக்கும். உறவினர்கள் மற்றும் நண்பர்களின் ஆதரவு கிடைக்கும். திருமணம் நிச்சயம் ஆகும். நிதி நிலை வலுவடயும்.

Gemini3/13

மிதுனம்

மிதுனம்: சூரியன் பெயர்ச்சியின் தாக்கத்தால், மிதுன ராசிக்காரர்கள் புரட்டாசி மாதத்தில் சாதகமான பல நன்மைகளை பெறுவார்கள். வீடு, வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும். பொருளாதார நிலை வலுவடையும். மாத வருமானம் அதிகரிக்கும். புரட்டாசி மாதம் முழுதும் வெற்றிகள் குவியும்.

Cancer4/13

கடகம்

கடகம்: கன்னி ராசியில் நடக்கும் சூரியன் பெயர்ச்சியின் தாக்கத்தால் சமூகத்தில் உங்கள் புகழ் அதிகர்க்கும். குடும்ப உறுப்பினர்களுடனான உறவு மேம்படும். உறவினர்கள் மற்றும் நண்பர்களின் ஆதரவு கிடைக்கும். அலுவலகத்தில் ஊதிய உயர்வும் பதவி உயர்வும் கிடைக்க வாய்ப்புள்ளது.

Leo5/13

சிம்மம்

சிம்மம்: சூரியன் பெயர்ச்சி சிம்ம ராசிக்காரர்களுக்கு சாதகமாக இருக்கும். உழைப்புக்கு ஏற்ற பலன்கள் கிடைக்கும். குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் நடக்கும். ஆக்கப்பூர்வமான நன்மைகளை பெறுவீர்கள். மாத வருமானம் அதிகரிக்கும்.

Virgo6/13

கன்னி

கன்னி: புரட்டாசி மாதத்தில் கன்னி ராசிக்காரர்கள் சூரியன் பெயர்ச்சியின் தாக்கத்தால் அதிர்ஷத்தை பெறுவார்கள். பல வித நன்மைகள் நடக்கும். குழந்தைகள் மூலம் நல்ல செய்திகள் கிடைக்கும். சமூகத்தில் மதிப்பும் மரியாதையும் அதிகரிக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியும் அமைதியும் இருக்கும். உடல் ஆரோக்கியம் மேம்படும்.

Libra7/13

துலாம்

துலாம்: புரட்டாசி மாதத்தில் சூரியன் பெயர்ச்சியின் தாக்கத்தால் துலா ராசிக்காரர்களுக்கு செலவுகள் அதிகமாகும். குடும்ப வாழ்க்கை, திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். உடல் நலனில் கவனம் தேவை. குழந்தைகளால் நல்ல செய்திகள் கிடைக்கும்.

Scorpio8/13

விருச்சிகம்

விருச்சிகம்:  சூரியன் பெயர்ச்சியின் தாக்கத்தால் புரட்டாசி மாதத்தில் விருச்சிக ராசிக்காரர்கள் பல அனுகூலமான நன்மைகளை அடைவார்கள். கடின உழைப்பின் மூலம் உங்கள் வருமானத்தை அதிகரிப்பீர்கள். நிதி ஆதாயத்திற்கான வாய்ப்புகள் கிடைக்கும். அலுவலக ரீதியாக பயணங்களை மேற்கொள்வீர்கள். இந்த பயணங்களால் லாபம் அதிகரிக்கும்.

Sagittarius9/13

தனுசு

தனுசு: சூரியன் பெயர்ச்சி தனுசு ராசிக்காரர்களுக்கு லாபகரமானதாக இருக்கும். அலுவலக பணிகளில் ஊதிய உயர்வும், சம்பள உயர்வும் கிடைக்கும். வணிகத்தில் லாபம் அதிகரிக்கும். இந்த நேரத்தில், சில நிர்வாக வேலைகள் நிறைவடையும். வீட்டில் குழப்பங்கள் முடிவுக்கு வரும்.

Capricorn10/13

மகரம்

மகரம்: இந்த மாதம் மகர ராசிக்காரர்களுக்கு கலவையான பலன்கள் கிடைக்கும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. பேச்சில் நிதானம் அவசியம். முயற்சிகளில் உங்களுக்கு அதிக அதிர்ஷ்டம் கிடைக்காது. வெற்றியை அடைய கடினமாக உழைக்க வேண்டியிருக்கும். நிதானத்தை கடைபிடிப்பது மிக அவசியம்.

Aquarius11/13

கும்பம்

கும்பம்: புரட்டாசி மாத கிரக பெயர்ச்சிகள் காரணமாக, கும்ப ராசிக்காரர்களின் ஆரோக்கியம் மேம்படும். பொருளாதார நிலை வலுவாக இருக்கும். அலுவலக பணிகளில் ஆர்வம் அதிகரிக்கும்.

Pisces12/13

மீனம்

மீனம்: இன்றைய சூரியன் பெயர்ச்சி உங்கள் திருமண உறவை இனிமையாக்கும். தடைபட்ட பணிகள் வெற்றியை அடையும். புரட்டாசி மாதம் முழுதும் கணவன் மனைவி இடையே ஒற்றுமை ஓங்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி இருக்கும்.

Disclaimer13/13

பொறுப்பு துறப்பு

பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.