Weight Gain Tips in Tamil: இத்தொகுப்பில் எடை குறைவாக இருக்கும் ஒருவர் எடையை அதிகரிக்க என்ன செய்ய வேண்டும் என்பதை பார்க்கப்போகிறோம்.
Weight Gain Tips: அதிக எடையுடன் இருப்பது எப்படி உடலுக்கு நல்லது இல்லையோ, அதேபோல் எடை குறைவாக இருப்பதும் அரோக்கியம் அல்ல. எனவே இத்தொகுப்பில் எடை குறைவாக இருப்பவர்கள் எப்படி எடையை அதிகரிக்க செய்வது? அதற்கு என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து இங்கு பார்க்கலாம்.
எடை குறைவாக உள்ளவர்கள் தங்களது எடையை அதிகரிக்க நினைத்தால், அவர்கள் தினமும் காலையில் வால் நட்ஸ், பாதாம், பிஸ்தா உள்ளிட்ட நட்ஸ் வகைகளை எடுத்துக்கொள்ளலாம். குறிப்பாக பாதாமை தண்ணீரில் உறவைத்து காலையில் சாப்பிட்டால் நல்லது.
எடையை அதிகரிக்க கண்டிப்பாக புரம் நிறைந்த உணவுகளை எடுத்துக்கொள்வது அவசியம். குறிப்பாக முட்டை, சிக்கன் போன்ற புரதம் நிறைந்த அசைவ உணவுகளை எடுத்துக்கொள்ளலாம். அசைவ உணவுகளை விரும்பாதவர்கள் கொண்டை கடலை போன்ற கடலை வகைகளை உட்கொள்ளலாம்.
வெண்ணெய், ஆலிவ் எண்ணெய், தேங்காய் எண்ணெய் மற்றும் நெய் போன்ற ஆரோக்கியமான கொழுப்புகளை உட்கொள்ளுங்கள். இவை உடலுக்கு சக்தி மற்றும் எடை அதிகரிக்க உதவுகின்றன.
எடையை அதிகரிக்க நினைப்பவர்கள் சாதத்துடன் நிறைய காய்கறிகள் எடுத்துக்கொள்ள வேண்டும். காய்கறிகள் எடுத்துக்கொள்வதால் உடலுக்கு நல்ல சத்துக்கள் சேரும். எடையை அதிகரிக்க வேண்டும் என்பதற்காக கண்மூடித்தனமாக இருக்க வேண்டும். நல்ல சத்துக்கள் மிகவும் அவசியம். அப்போதுதான் நமது உடல் ஆரோக்கியமாக இருக்கும்.
பழச்சாறுகள் குடிப்பதன் மூலம் எடையை அதிகரிக்க செய்யலாம். பழங்களுடன் பால் சேர்த்து குடிப்பதால் எடை அதிகரிக்கும். குறிப்பாக அவ்வபோது செவ்வாழை பழச்சாறு குடிப்பது மிகவும் நல்லது. எடை அதிகரிக்க பெரிதாக உதவுகிறது.
எடையை அதிகரிக்க உடற்பயிற்சி செய்யலாம். இது தசைகளை வலுப்படுத்தி உடல் எடையை அதிகரிக்க செய்கிறது. உடற்பயிற்சி செய்தவுடன் நன்றாக சாப்பிட வேண்டும். மேலே குறிப்பிட்டது போல சத்துள்ள உணவுகளை எடுத்துக்கொள்வது அவசியம்.
பொறுப்பு துறப்பு: அன்புள்ள வாசகரே, எங்கள் செய்திகளைப் படித்ததற்கு நன்றி. இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.