செம்ம சூப்பர் ஹிட் கொடுத்த சாக்லெட் பாய் டூ ஆக்‌ஷன் ஹீரோ மாதவனின் தமிழ் திரைப்படங்கள்

மாதவனின் தமிழ் திரைப்படங்களை விமர்சன ரீதியாக பாராட்டிய மற்றும் நிபுணர்களால் அதிகம் மதிப்பிடப்பட்ட திரைப்படங்களைப் பார்ப்போம்.
  • Sep 20, 2020, 16:56 PM IST

மாதவனின் தமிழ் திரைப்படங்களை விமர்சன ரீதியாக பாராட்டிய மற்றும் நிபுணர்களால் அதிகம் மதிப்பிடப்பட்ட திரைப்படங்களைப் பார்ப்போம்.

1 /5

விக்ரம் வேதா  என்பது 2017 ஆம் ஆண்டு வெளியான ஓர் இந்தியத் தமிழ்த் திரைப்படம் ஆகும். இது ஒரு குற்றத் திகில் திரைப்படம் ஆகும். புஷ்கர் மற்றும் காயத்ரி  இத்திரைப்படத்தை இயக்கியுள்ளனர்.  R. மாதவன் மற்றும் விஜய் சேதுபதி முன்னணி பாத்திரங்களில் நடித்துள்ளனர். சாரதா ஸ்ரீநாத், வரலட்சுமி, கதிர் மற்றும் ஜான் விஜய் ஆகியோர் துணைக் கதாப்பாத்திரங்களாக நடித்துள்ளனர். வை நாட் ஸ்டூடியோஸ் இத்திரைப்படத்தைத் தயாரித்துள்ளது. மேலும் 2014 ஆம் ஆண்டில்  படப்பிடிப்பு 2016 ஆம் ஆண்டு  இத்திரப்படத்தின் திட்டம் உருவாக்கப்பட்டு நவம்பர் மாதமளவில் படப்பிடிப்பு தொடங்கியது. இத்திரைப்படத்தில் விஜய் சேதுபதி ஓர் தாதாவாக நடித்துள்ளார்.

2 /5

இறுதிச்சுற்று குத்துச் சண்டை விளையாட்டை மையமாக வைத்து சுதா கொங்கரா எழுதி இயக்கிய ஒரு திரைப்படமாகும். 2016 ஆம் ஆண்டில் தமிழ், இந்தி ஆகிய இருமொழிகளிலும் இப்படம் வெளியானது. இத்திரைப் படத்தில் ஆர். மாதவன் ஒரு குத்துச்சண்டை பயிற்சியாளராக முன்னணி கதாபாத்திரத்திலும், இவருடன் ஆர்வலரும் குத்துச்சண்டை வீரருமான ரித்திக்கா சிங் குத்துச்சண்டை வீரராகவும் இப்படத்தில் நடித்தனர். 

3 /5

மின்னலே திரைப்படம் 2001 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். மாதவன்,ரீமா சென் போன்ற பலரின் நடிப்பிலும் வெளிவந்த இத்திரைப்படத்தை கௌதம் மேனன் இயக்கினார்.

4 /5

அன்பே சிவம் 2003 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம் ஆகும். இத்திரைப்படத்தில் கமல்ஹாசன், மாதவன், கிரண், நாசர் மற்றும் பலர் நடித்துள்ளனர். இத்திரைப்படம் 2003 இல் இந்தியாவில் நடைபெற்ற சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்பட்டது.

5 /5

அலைபாயுதே, மணிரத்னம் இயக்கத்தில், 2000ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். இத்திரைப்படத்தில் மாதவன், ஷாலினி, சொர்ணமால்யா முதலியோர் நடித்திருந்தனர். இது ஒரு காதல் படம் ஆகும்.