ராகு பகவானின் பகை ராசிகள்: கவனமாக இருக்க வேண்டிய 5 ராசிகள்!

ராகு பகவானின் கடும் கோபத்திற்கு ஆளாகும் 5 ராசிகள்.. தப்பிக்க செய்ய வேண்டியது என்ன? முழு விவரங்களை தெரிந்து கொள்ளுங்கள்.

 

1 /6

வேத ஜோதிடத்தில் நிழல் கிரகமான ராகுவுக்கு, சூரியன் மற்றும் சந்திரன் ஆகிய இரு கிரகங்களும் பரம எதிரிகளாகும். இதுபோக செவ்வாய் கிரகத்துடனும் ராகுவுக்கு பகை உள்ளதால், இந்த கிரகங்களின் ஆதிக்கத்தில் உள்ள 5 ராசிகள் ராகுவின் பகை ராசிகளாக கருதப்படுகின்றன.  

2 /6

செவ்வாய் பகவான் ஆட்சி செய்யும் மேஷ ராசியில் ராகு அமரும் போது, ஜாதகருக்கு கடுமையான கோபமும், பதற்றமும் ஏற்படும். அவசரத்தில் எடுக்கும் முடிவுகளால் தவறான பாதையில் செல்வதோடு, விபத்துக்கள் ஏற்படும் அபாயமும் உள்ளது.  

3 /6

ராகுவின் பரம எதிரியான சந்திரன் ஆளும் கடக ராசியில் ராகு அமர்ந்தால், அந்த ராசிக்காரர்களுக்கு மனரீதியான குழப்பங்கள், தேவையற்ற பயம் மற்றும் மன அமைதியின்மை உண்டாகும்.  

4 /6

சூரியன் ஆட்சி செய்யும் சிம்ம ராசியில் ராகு அமரும்போது பிதுர் தோஷம் ஏற்படும் அமைப்புகள் உருவாகலாம். இதனால் தந்தை-மகன் உறவில் விரிசல், கௌரவக் குறைச்சல் மற்றும் அரசு வழியில் பல தடைகள் ஏற்படக்கூடும்.  

5 /6

விருச்சிக ராசியில் ராகு பகவான் நீச்சம் அடைவதால் அங்கு அவரது வலிமை குறையும். இதனால் தேவையற்ற கோபம், பகை மற்றும் விபத்துக்கள் ஏற்பட அதிக வாய்ப்புள்ளது.   

6 /6

குரு பகவான் ஆட்சி செய்யும் தனுசு ராசியில் ராகு அமர்வது சண்டாள யோகத்தை உருவாக்கும். இதனால் கடின உழைப்புக்கான பலன் தாமதமாவதுடன், சமூகத்தில் அதிர்ஷ்டத்தையும் குடும்ப ஆதரவையும் இழக்க நேரிடலாம்.