பூரட்டாதியில் ராகு பெயர்ச்சி: இந்த 3 ராசிகளுக்கு வருமானம் திடீரென அதிகரிக்கும்!

Rahu Constellation Transit: பூரட்டாதி நட்சத்திரத்தில் ராகு கிரகம் பெயர்ச்சி ஆகும் நிலையில், இந்த 3 ராசிகளுக்கு மட்டும் நன்மைகள் தேடி வரும். அவை குறித்து இங்கு காணலாம்.

Rahu Constellation Transit After Holi 2025: ராகு கிரகம் வரும் மார்ச் 16ஆம் தேதி பூரட்டாதி நட்சத்திரத்திற்கு பெயர்ச்சி ஆகிறது. வரும் நவம்பர் மாதம் 23ஆம் தேதி வரை அதிலேயே இருக்கும். இதனால், நட்சத்திர பெயர்ச்சியால் பலனடையப் போகும் 3 ராசிகளை இங்கு காணலாம்.

1 /8

ஜோதிடத்தின்படி ராகு (Rahu) அசுபமான கிரகமாக பார்க்கப்படுகிறது. அதனை நிழல் கிரகம் என்றும் அழைப்பார்கள். கலியுக மன்னன் என்றும் அழைப்பார்கள். மற்ற கிரகங்களை போல ராகு கிரகமும் குறிப்பிட்ட காலகட்டத்தில் ராசிகள் மற்றும் நடச்சத்திரங்கள் இடையே பெயர்ச்சி அடையும்.

2 /8

ராகு பெயர்ச்சி (Rahu Transit 2025) அனைத்து 12 ராசிகளுக்கும் தாக்கம் இருக்கும். இருப்பினும் ஒரு சில ராசிகளுக்கு மிக மோசமான காலகட்டமாகவும் இருக்கும், ஒரு சிலருக்கு அதிர்ஷ்டமும் அடிக்கும்.

3 /8

ஹோலி பண்டிகை (Holi 2025) நாடு முழுவதும் வரும் மார்ச் 14ஆம் தேதி கொண்டாடப்பட உள்ள நிலையில், ராகு கிரகம் வரும் மார்ச் 16ஆம் தேதி குரு பகவானின் ஆசிபெற்ற பூரட்டாதி நட்சத்திரத்திற்கு பெயர்ச்சி அடைக்கிறது. மார்ச் 16ம் தேதியில் இருந்து வரும் நவம்பர் 23ஆம் தேதிவரை ராகு பூரட்டாதியிலேயே இருக்கும்.

4 /8

குரு பகவான் ஞானம், அறிவு, மதிப்பு, மரியாதை, முன்னேற்றம் ஆகியவற்றை தர வல்லவர். ராகு கிரகமோ வஞ்சகத்தை தர வல்லது. இருப்பினும், ராகு பூரட்டாதி நட்சத்திற்கு பெயர்ச்சி ஆவதால் இந்த 3 ராசிகளுக்கு பெரிய நன்மைகள் காத்திருக்கின்றன. அவற்றை இங்கு காணலாம்.

5 /8

மேஷம் (Aries): ராகுவின் நட்சத்திர பெயர்ச்சியால் நீண்ட நாளாக தடைப்பட்டு இருக்கும் வேலைகள் மீண்டும் தொடங்கும். மன நிம்மதி அடைவீர்கள். ஆன்மீக நாட்டம் அதிகரிக்கும். இதனால் குடும்பத்தினருடன் ஆன்மீகச் சுற்றுலாவுக்கு செல்வீர்கள். சில செலவுகள் திடீரென வந்தாலும் நீங்கள் பொருளாதாரத்தில் பிரச்னையின்றி இருப்பீர்கள். வருமானம் அதிகரிக்கும். வீட்டில் சுபகாரியம் நடக்கும்.

6 /8

மிதுனம் (Gemini): ராகுவின் நட்சத்திர பெயர்ச்சியால் வங்கி, நிதி மற்றும் காப்பீடு துறை சார்ந்தவர்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும். தனியாரில் வேலை பார்ப்பவர்களுக்கு சம்பள உயர்வு மகிழ்ச்சியளிக்கும் விதத்தில் இருக்கும். சுய தொழில் பார்ப்பவர்கள் தொழிலை விரிவாக்க இது நல்ல நேரம். ஏற்றுமதி, இறக்குமதி சார்ந்த தொழிலில் இருப்பவர்களுக்கு நல்ல லாபத்தை கொடுக்கும் காலகட்டம் இது. வெளிநாடு செல்லும் ஆசை நிறைவேறலாம். 

7 /8

விருச்சிகம் (Scorpio): ராகுவின் நட்சத்திர பெயர்ச்சி இந்த ராசிகளுக்கு பெரியளவில் உதவும். புதிய வேலையை தொடங்கலாமா என பல நாள்களாக இருக்கும் எண்ணத்திற்கு தீர்வு கிடைக்கும். கடன் தொல்லைகள் நீங்கள். வருமானம் வரும் வழிகள் அதிகரிக்கும். இதனால் பொருளாதாரத்தில் பலமடைவீர்கள். உங்கள் பணியிடத்திலும் நல்ல வாய்ப்புகள் வரும்.

8 /8

பொறுப்பு துறப்பு: இவை அனைத்தும் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் கணிப்புகளின் அடிப்பைடையில் எழுதப்பட்டதாகும். இதனை ஜீ நியூஸ் (Zee Tamil News) உறுதிப்படுத்தவில்லை.