ராகு பெயர்ச்சி 2025: இன்னல்களை சந்திக்கும் ராசிகளும்... கெடுபலன்கள் நீங்க பரிகாரங்களும்

ராகு பெயர்ச்சி 2025: ராகு சனியின் ராசியான கும்ப ராசியில் சஞ்சரிக்கிறார், இப்போது ராகு அடுத்த 18 மாதங்களுக்கு இந்த ராசியில் இருப்பார். வேத ஜோதிடத்தில், ராகு ஒரு சர்ப கிரகமாகக் கருதப்படுகிறது. மனதில் குழப்பத்தை உருவாக்கும் தன்மை கொண்டது ராகு கிரகம். இதன் காரணமாக, பதற்றம் மற்றும் குழப்பமான சூழ்நிலை நீடிக்கிறது.

கும்ப ராசியில் சஞ்சரிக்கும், ​​ராகு சில ராசிக்காரர்களின் நிம்மதியை பறித்துவிடும் எங்கின்றனர் ஜோதிடர்கள். இந்த ராகு பெயர்ச்சியால், கடகம், கும்பம் உள்ளிட்ட 5 ராசிகளின் வாழ்க்கை மிகவும் பாதிக்கப்படும். இந்த ராசிக்காரர்களின் மனதில் ஒரு இனம் புரியாத பயம் வேரூன்றி, அவர்களின் தன்னம்பிக்கை வெகுவாகக் குறையும்.

1 /9

ராகு பெயர்ச்சி 2025: ராகு கிரகம் மீன ராசியிலிருந்து கும்ப ராசிக்குள் நுழைந்துள்ளது. ராகு ஒரு நிழல் கிரகமாக இருந்தாலும், ஜோதிடத்தில் மிகவும் முக்கியமானது. ஒரு நபரின் தலைவிதியை மாற்றும் ஆற்றல் கொண்டது. ஆண்டியை அரசனாகவும், அரசனை ஆண்டியாகவும் ஆக்கும். கும்ப ராசிக்குள் நுழைந்த ராகு, ராகு கடகம், கும்பம் உள்ளிட்ட 5 ராசிகளை அதிகம் பாதிக்கப் போகிறார்.

2 /9

ராகுவின் தாக்கத்தினால், குறிப்பிட்ட 5 ராசிக்காரர்களின் வாழ்க்கையில் குழப்ப நிலை தொடர்ந்து நீடிக்கும். வேலை அல்லது வணிகம் தொடர்பான எந்தவொரு முடிவையும் எடுப்பதில் அவர்களுக்கு நம்பிக்கையின்மை இருக்கும். மன அழுத்தம் மற்றும் மனச்சோர்வு காரணமாக அவர்களின் உடல்நலம் மோசமாக பாதிக்கப்படலாம். 

3 /9

கெடுபலன்கள்: அடுத்த ஒன்றரை வருடங்களுக்கு, குறிப்பட்ட 5 ராசிக்காரர்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும் என்றும், ராகு தொடர்பான சில பரிகாரங்களிய செய்வது பலன் கொடுக்கும். ராகு பெயர்ச்சியினால் பாதிக்கப்படும் ராசிகளையும், ராகுவை அமைதிப்படுத்துவதற்கான ராசிகளுக்கு ஏற்ற பரிகாரங்களையும் அறிந்து கொள்ளலாம்.

4 /9

ரிஷப ராசியினர் வேலையில் கவனமாக இருக்க வேண்டும். நீங்கள் எந்த வேலையையும் குறுக்குவழி மூலம் செய்ய நினைத்தால், தவறு செய்வதற்கான வாய்ப்புகள் அதிகரிக்கக்கூடும். எனவே நீங்கள் அவசர கதியில் வேலை செய்வதைத் தவிர்க்க வேண்டும். உங்கள் வேலையை மற்றவர்களிடம் ஒப்படைக்காதீர்கள். பெற்றோரின் உடல்நலம் குறித்து கவலைகள் இருக்கலாம். ராகுவின் தீய பலன்களைத் தவிர்க்க, ராகு பீஜ மந்திரத்தை ஜபிப்பது சிறந்த பரிகாரமாக இருக்கும்.

5 /9

கடக ராசிக்கு ராகு பெயர்ச்சி காரணமாக, உடல்நலம் தொடர்பான பிரச்சினைகளை சந்திக்க நேரிடும். மோசமான உணவுப் பழக்கவழக்கங்களால், நீங்கள் சில தொற்றுகளுக்கு ஆளாக நேரிடும். ராகுவின் இருப்பு மாமியார் உறவினர்களின் அதிக குறுக்கீட்டைக் குறிக்கிறது. பங்குச் சந்தையில் பணத்தை முதலீடு செய்வதை தவிர்ப்பது. ராகு பெயர்ச்சி பரிகாரமாக நீங்கள் சிவபெருமானுக்கு ருத்ராபிஷேகம் செய்யலாம்.

6 /9

சிம்ம ராசிக்கு ராகு பெயர்ச்சி உறவுகள் மற்றும் வேலை தொழிலில் கலவையான விளைவை ஏற்படுத்தும். குறிப்பாக திருமணமானவர்கள் கவனமாக இருக்க வேண்டும், தம்பதிகள் இடையே தவறான புரிதல்கள் அதிகரிக்கக்கூடும். எந்த தவறான வேலையிலும் ஈடுபடாதீர்கள். நேர்மையாக வேலை செய்யுங்கள், இல்லையெனில் பின்னர் வருத்தப்பட வேண்டியிருக்கும். சனிக்கிழமை கருப்பு எள் தானம் செய்வது சிறந்த பரிகாரமாக கருதப்படுகிறது.

7 /9

விருச்சிக ராசியினர் ராகுவின் சஞ்ச்சாரத்தினால் குடும்ப வாழ்க்கையில் சில பிரச்சனைகளை கொண்டு வரக்கூடும். குடும்பத்தில் அன்பும் ஒற்றுமையும் இல்லாமல் இருக்கலாம். வேலை காரணமாக தங்கள் குடும்பங்களை விட்டு விலகி இருக்க வேண்டியிருக்கும். மார்பு தொற்று போன்ற பிரச்சனைகள் ஏற்படலாம். இந்த ராகு பெயர்ச்சியின் போது, ​​குடும்ப விஷயங்களில் அதிகமாக தலையிடுவதைத் தவிர்க்க வேண்டும். ஜோதிட பரிகாரமாக, கருப்பு நாய்க்கு உணவளிப்பது பிரச்சனைகளுக்கு தீர்விய அளிக்கும்.

8 /9

கும்ப ராசிக்காரர்களுக்கு ராகுவின் பெயர்ச்சி சிந்தனை மற்றும் புரிந்துகொள்ளும் திறன்களில் குறிப்பாக வலுவான தாக்கத்தை ஏற்படுத்தும். பல நேரங்களில், எது சரி, எது தவறு என்று யோசிக்காமல் நீங்கள் முடிவுகளை எடுப்பீர்கள். பின்னர் அது தவறாக நிரூபிக்கப்படலாம், ஏனெனில் ராகு உங்கள் மூளையையும் சிந்தனையையும் பாதிக்கும். இது பிழைகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகளை அதிகரிக்கும். சிவபெருமானுக்கு வெள்ளை சந்தனத்தை சமர்ப்பிப்பது கெடுபலன்களை நீக்கும் சிறந்த பரிகாரமாக இருக்கும்.

9 /9

பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரையில் உள்ள தகவல்கள் பல்வேறு ஊடகங்கள், ஜோதிடர்கள், பஞ்சாங்கம், உபதேசங்கள், நம்பிக்கைகள், ஆன்மீக நூல்கள் ஆகியவற்றிலிருந்து சேகரிக்கப்பட்டு உங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது.