Shani Rahu Yuti 2025 : கடந்த மார்ச் 29 ஆம் தேதி, சனி மீன ராசிக்கு பெயர்ச்சி அடைந்தார், இதனிடையே ராகு ஏற்கனவே மீன ராசியில் பயணித்து வருகிறார். மேலும் வரும் மே 18 ஆம் தேதி ராகு பெயர்ச்சி அடைகிறார், அதன்படி அடுத்த 34 நாட்களுக்கு, நிகழும் சனி-ராகுவின் சேர்க்கையால் 5 ராசிக்காரர்களுக்கு பெரும் சவாலான நேரம், தொல்லைகள், பண கஷ்டம் ஏற்படக் கூடும்.
மீன ராசியில் பயணித்து வரும் சனி பகவான், சில ராசிக்காரர்களுக்கு நன்மை பலனையும், சில ராசிக்காரர்களுக்கு அசுப பலனையும் தருவார். ஆனால் தற்போது ராகு சனியின் ராசியில் பெயர்ச்சி அடைந்துள்ளது சில ராசிக்காரர்களுக்கு சிறப்பு நிகழ்வாக பார்க்கப்படாது. இந்நிலையில் அடுத்த மாதம் மே 18 ஆம் தேதி வரை எந்த ராசிக்காரர்கள் கவனமாக இருக்க வேண்டும் என்பதை பார்ப்போம்.
சனி மற்றும் ராகுவின் சேர்க்கை பிசாச யோகத்தை உருவாக்குகிறது. ஜோதிடத்தின் பார்வையில் இந்த யோகம் மிகவும் அசுப யோகங்களின் ஒன்றாக கருதப்படுகிறது. வரும் மே 18 ஆம் தேதி, ராகு மீன ராசியை விட்டு வெளியேறி கும்ப ராசியில் நுழையும் வரை, இந்த அசுப யோகமான பிசாச யோகம் நிலைத்திருக்கும். இதனால் 5 ராசிக்காரர்களுக்கு பெரும் கஷ்டங்கள், தொல்லைகள், பண இழபீடு போன்றவை ஏற்படும். அவை எந்த ராசிக்காரர்கள் என்று பார்ப்போம்.
மேஷம்: மேஷ ராசிக்காரர்களுக்கு நிதி சிக்கல்கள் ஏற்படலாம். அலசல் அதிகரிக்கும். வேலையில் இன்னல்கள் ஏற்படும். தேவையற்ற சோக சம்பவங்கள் ஏற்படும். பணியிடத்தில் மோதல்கள் ஏற்படலாம்.
மிதுனம்: மிதுன ராசிக்காரர்கள் குழப்பங்கள் அதிகரிக்கும். பிரமைகள் அல்லது குழப்பம் ஏற்படலம். முக்கிய முடிவுகளை எடுப்பதை தவிர்க்க வேண்டும். குடும்பத்தில் கருத்து வேறுபாடு ஏற்படலாம். பதற்றம் இருக்கும்.
சிம்மம்: சிம்ம ராசிக்காரர்கள் நிதி சிக்கல்கள் ஏற்படக்கூடும். சில நோய்கள் உங்களை பாதிக்கலாம். எதிரிகளால் இம்சை இருக்கும்.
கன்னி: கன்னி ராசிக்காரர்களுக்கு சில விஷயங்களால் கஷ்டங்கள் ஏற்படும். மன அழுத்தம் இருக்கலாம். கணவருடன் மோதல்கள் ஏற்படலாம்.
விருச்சிம்: விருச்சிக ராசிக்காரர்களுக்கு குடும்ப வாழ்க்கையில் பாதிப்பு ஏற்படும். மன அழுத்தம் ஏற்படும். எரிச்சல் ஏற்படலாம். உடல் ரீதியான பிரச்சினைகள் ஏற்படலாம், கட்டாயம் மருத்துவரை அணுகவும்.
பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரையில் உள்ள தகவல்கள் பல்வேறு ஊடகங்கள், ஜோதிடர்கள், பஞ்சாங்கம், உபதேசங்கள், நம்பிக்கைகள், ஆன்மீக நூல்கள் ஆகியவற்றிலிருந்து சேகரிக்கப்பட்டு உங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது.