Coolie Movie OTT : கூலி திரைப்படம் ரிலீஸாகியிருக்கும் நிலையில், அப்படத்தின் ஓடிடி ரைட்ஸ் பெற்ற நிறுவனம் குறித்த தகவலும் வெளியாகியிருக்கிறது. இது குறித்த முழு விவரம், இதோ!
Coolie Movie OTT : ரஜினிகாந்த் நடிப்பில் வெளியாகியிருக்கும் படம், கூலி. லோகேஷ் கனகராஜ் இயக்கியிருக்கும் இந்த படம், ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளிவந்துள்ளது. இந்த படத்தின் ஓடிடி உரிமம் குறித்த தகவலும் தற்போது வெளியாகி இருக்கிறது. இது குறித்த முழு தகவலை இங்கு பார்ப்போம்.
1/7சுதந்திர தினத்தை முன்னிட்டு, லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள கூலி திரைப்படம் வெளியாகியுள்ளது. ரஜினிகாந்த் இதில் ஹீரோவாக நடித்திருக்கிறார். இந்த படம் குறித்த பல்வேறு தகவல்களையும், படத்தின் ஓடிடி உரிமம் குறித்தும் இங்கு பார்ப்போம்.
2/770 வயதை கடந்த போதிலும், ரஜினிகாந்த் கூலி படத்தில் கிங் போல கம்பீரமாக நடித்திருப்பதாக ரசிகர்கள் கூறி வருகின்றனர். இந்த படத்தில் அவரது பெயர், தேவா.
3/7ரஜினி, லோகேஷ் கனக்ராஜ் மற்றும் அனிருத்தின் கூட்டணியானது வெற்றிக்கூட்டணியாக பார்க்கப்படுகிறது. அனிருத்தின் இசையில் பாடல்களும் பெரு வெற்றி பெற்றுள்ளன.
4/7கூலி படத்தின் மீது அதிகபட்ச எதிர்பார்ப்பு ரசிகர்களுக்கு எழுந்துள்ள நிலையில், படம் நன்றாக இருபப்தாக இதுவரை படம் பார்த்தவர்கள் தெரிவித்து இருக்கின்றனர். இதில் நாகார்ஜுனா, உப்பேந்திரா, சௌபின் சாஹிர், அமீர்கான், சத்யராஜ், ஸ்ருதிஹாசன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளனர்.
5/7ரசிகர்கள் பலரும், படத்தின் முதல் பாதி ஓகே ரகம் என்று கூறி வருகின்றனர். இந்த சமயத்தில் இன்னொரு தகவலும் வெளியாகி இருக்கிறது.
6/7கூலி படத்தின் ஓடிடி உரிமம் குறித்த தகவல் வெளியாகியிருக்கிறது. இப்படத்தின் ஓடிடி உரிமையை பெற்ற டிஜிட்டல் தளம் எது தெரியுமா?
7/7ரஜினியின் பல படங்களை ஸ்ட்ரீம் செய்து வரும் அமேசான் ப்ரைம் தளம்தான், கூலி படத்தின் உரிமையையும் பெற்றுள்ளது. படத்தின் ஓடிடி ரிலீஸ் குறித்த தகவல் இனிதான் வெளிவரும்.