Rajinikanth Kamal Haasan Movie: கமல்ஹாசன் தயாரிப்பில், சுந்தர்.சி இயக்கி ரஜினிகாந்த் நடிக்க இருக்கும் Thalaivar173 திரைப்படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு தற்போது வெளியாகி உள்ளது.
Thalaivar173 திரைப்படத்தின் ரிலீஸ் தேதி உள்ளிட்ட விவரங்களை தெரிவித்துள்ளனர். மேலும் ரஜினிகாந்திற்கு கமல் கடிதமும் எழுதி உள்ளார்.
1/8சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் - உலக நாயகன் கமல்ஹாசன் இணைந்து திரைப்படத்தில் நடிக்க இருப்பதாக கடந்த சில மாதங்களாகவே தகவல்கள் வெளியாகின. அதற்கு முன், ரஜினிகாந்த், சுந்தர்.சி இயக்கத்தில் நடிக்க இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகின.
2/8இந்நிலையில், சுந்தர்.சி இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் புதிய திரைப்படத்தின் அறிவிப்பு இன்று (நவ. 5) அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது. இத்திரைப்படத்தை கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் தயாரிப்பு நிறுவனம் தயாரிக்கிறது.
3/8இந்த அறிவிப்பை நடிகர்கள் ரஜினிகாந்த், கமல்ஹாசன், இயக்குநர் சுந்தர்.சி, தயாரிப்பாளர் ஆர். மகேந்திரன் ஆகியோர் இணைந்து வெளியிட்டுள்ளனர்.
4/8இதுகுறித்து ராஜ்கமல் நிறுவனம் இன்று வெளியிட்ட அறிவிப்பில், "சுந்தர். சி இயக்கத்தில் கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் தயாரிப்பு நிறுவனத்தின் கீழ், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பிரம்மாண்டமான Thalaivar173 படத்தில் நடிக்க உள்ளார்" என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது ரஜினிகாந்தின் 173வது திரைப்படம் என்பதால் தற்காலிகமாக Thalaivar173 என்றழைக்கப்படுகிறது. பின்னர் பெயர் அறிவிக்கப்படும்.
5/8மேலும், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் - கமல்ஹாசன் ஆகியோர் இணைவது இந்திய சினிமாவின் இரண்டு உயர்ந்த சக்திகளை ஒன்றிணைப்பது மட்டுமல்லாமல், இருவருக்கும் இடையேயான ஐந்து தசாப்த கால நட்பு மற்றும் சகோதரத்துவத்தையும் கொண்டாடுவதாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தலைமுறை தலைமுறையாக கலைஞர்கள் மற்றும் பார்வையாளர்களை ஊக்குவிக்கும் ஒரு பிணைப்பு என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
6/8Thalaivar173 திரைப்படம் வரும் 2027ஆம் ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியிடப்படுகிறது. மேலும் இத்திரைப்படம் ரெட் ஜெயண்ட் மூலம் வெளியிடுப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
7/8Thalaivar173 பட அறிவிப்பை ஒட்டி, கமல்ஹாசன் ரஜினிகாந்திற்கு கடிதம் ஒன்றை எழுதி உள்ளார். அந்த கடிதத்தில் கமல், "அன்புடை ரஜினி, காற்றாய் அலைந்த நம்மை இறக்கி, இறுக்கி தனதாக்கியது; சிகரத்தின் இரு பனிப் பாறைகள் உருகிவழிந்து இரு சிறு நதிகளானோம்; மீண்டும் நாம் காற்றாய் மழையாய் மாறுவோம்; நம் அன்புடை நெஞ்சார நம்மைக் காத்த செம்புலம் நனைக்க நாமும் பொழிவோம் மகிழ்வோம் வாழ்க நாம் பிறந்த கலை மண்" என குறிப்பிட்டுள்ளார்.
8/8இத்திரைப்படத்தை தொடர்ந்து, கமல்ஹாசன் - ரஜினிகாந்த் இணைந்து நடிக்கும் படமும் உருவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது கமல்ஹாசன் மாநிலங்களவை எம்.பி., ஆகிவிட்ட நிலையில், ரஜினிகாந்த் ஜெயிலர் 2 திரைப்படத்தில் பணியாற்றி வருகிறார். படப்பிடிப்பு நிறைவடைந்த நிலையில் அடுத்த கட்ட பணிகள் தொடங்கியிருக்கிறது. அடுத்த 2026ஆம் ஆண்டு ஜூன் 12ஆம் தேதி ஜெயிலர் 2 திரைப்படம் வெளியாக உள்ளது.