1999ஆம் ஆண்டு படையப்பா திரைப்படம் எவ்வளவு வசூல் செய்தது என்பது குறித்து தகவல் வெளியாகியுள்ளது.
ரஜினியின் இந்த ஐம்பது ஆண்டு சினிமா சகாப்தத்தைப் பிரம்மாண்டமாகக் கொண்டாடும் வகையில், அவரது மாபெரும் வெற்றிப் படங்களில் ஒன்றான 'படையப்பா' திரைப்படத்தைத் திரையரங்குகளில் மீண்டும் வெளியிட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
1999 ஆம் ஆண்டு வெளியாகி, அன்றைய காலகட்டத்தில் இந்தியத் திரையுலகையே திரும்பிப் பார்க்க வைத்த இந்தப் படம், சரியாக 25 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் வெள்ளித்திரையில் வரவிருக்கிறது. ரசிகர்கள் மத்தியில் பலத்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள 'படையப்பா', நாளை திரையரங்குகளில் வெளியாகிறது.
கே.எஸ்.ரவிகுமார் இயக்கத்தில், ரஜினிகாந்த், ரம்யா கிருஷ்ணன், சௌந்தர்யா, சிவாஜி கணேசன் போன்ற ஜாம்பவான்கள் நடிப்பில் உருவான 'படையப்பா', பாக்ஸ் ஆபிஸில் மாபெரும் வசூல் வேட்டையாடியது. இப்படத்தில் நீலாம்பரியாக ரம்யா கிருஷ்ணன் வெளிப்படுத்திய வில்லத்தனமான நடிப்பு இன்றளவிலும் பேசப்படுகிறது.
தற்போது, 25 ஆண்டுகளுக்குப் பிறகு மறு வெளியாகும் 'படையப்பா', நவீன தொழில்நுட்ப மேம்பாடுகளுடன் திரையிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. ரஜினிக்கு இருக்கும் நிலையான ரசிகர் பட்டாளம் மற்றும் இந்த படத்தின் மீதான கிரேஸ் காரணமாக, இது ஒரு மாபெரும் வசூல் சாதனையைப் படைக்கும் என்றும், ரீ-ரிலீஸ் படங்களின் வசூல் சாதனைகளை இது முறியடிக்கக்கூடும் என்றும் திரையுலக வட்டாரங்கள் ஆவலுடன் எதிர்பார்க்கின்றன.
1999-ஆம் ஆண்டு 'படையப்பா' திரைப்படம் செய்த வரலாற்றுச் சாதனையை நினைவுபடுத்தும் வகையில், அதன் வசூல் விவரங்கள் வெளியாகியுள்ளன. இன்றைய பணவீக்க மதிப்போடு ஒப்பிடும்போது இது மிக மிகப் பெரிய சாதனையாகும்.
உலகளவில் மொத்த வசூல் ₹63 கோடி தமிழ்நாட்டில் மட்டும் ₹29.8 கோடி தெலுங்கு பதிப்பில் ₹14 கோடி
இந்த பிரம்மாண்டமான ஆரம்ப வசூல், 'படையப்பா' இந்தியத் திரையுலகில் செய்த தாக்கத்தை வெளிப்படுத்துகிறது. தற்போது, ரஜினி ரசிகர்கள் இந்தப் பழைய சாதனையை முறியடித்து, ஒரு புதிய வரலாற்றைப் படைக்கத் தயாராகி வருகின்றனர்.