Padayappa Re Release : முதல் நாள் கலக்‌ஷன்! கில்லியை மிஞ்சி விடுமா? கணிப்பு இதுதான்!

Padayappa Re-Release Collection Day 1 Prediction: ரஜினிகாந்தின் படையப்பா திரைப்படம், அவரது பிறந்தநாளையொட்டி தற்போது வெளியாகியுள்ளது. இந்த நிலையில், கில்லி படத்தின் வசூலை இப்படம் மிஞ்சுமா என்கிற எதிர்பார்ப்பும் ரசிகர்கள் மனங்களில் எழுந்துள்ளது. 

Padayappa Re-Release Collection Day 1 Prediction: ரஜினிகாந்தின் ஹிட் படங்களுள் ஒன்று, படையப்பா. 1999ல் வெளியான இந்த படத்தை கே.எஸ்.ரவிகுமார் இயக்கியிருந்தார். இந்த படம், ரஜினியின் பிறந்தநாளையொட்டி வெளியாகி இருக்கிறது. இதன் ரீ-ரிலீஸின் முதல் நாள் வசூலை தெரிந்துகொள்ள ரசிகர்கள் ஆர்வத்துடன் உள்ளனர். இது குறித்த முழு விவரத்தை இங்கு பார்ப்போம்.

1 /7

1999ஆம் ஆண்டு, ரஜினிகாந்தின் 25ஆண்டு கால திரைப்பயணத்தை கொண்டாடும் வகையில் உருவான படம்தான் படையப்பா. ரஜினி இந்த கதையை கூற, கே.எஸ்.ரவிகுமார் திரைக்கதை எழுதி படத்தை இயக்கினார். இதையடுத்து படம் வெளியாகி பல நாட்கள் தியேட்டரில் ஓடி, சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தது.

2 /7

படையப்பா படம் ரஜினிக்கு ரொம்பவே ஸ்பெஷல். காரணம், இப்படம் அவரது 25வது வருட சினிமா பயணத்தை கொண்டாட எப்படி 1999ல் வெளியானதோ, அதே போல இப்போது அவரது 50வது திரைவாழ்க்கையை கொண்டாடும் வகையில் ரீ-ரிலீஸ் ஆகி இருக்கிறது. அதையும் தாண்டி, ரஜினிகாந்த் தான் இந்த படத்தை தயாரித்தார். இது, தன் திரைவாழ்க்கையில் மிகவும் முக்கியமான படம் என்பதால் இதனை அவர் எந்த ஓடிடிக்கும் கொடுக்க விரும்பவில்லை என்று தெரிவித்திருந்தார்.

3 /7

படையப்பா படத்தில் இடம் பெற்றிருந்த நீலாம்பரி கதாப்பாத்திரத்திற்கு ஈர்ப்பே, கல்கி எழுதிய பொன்னியின் செல்வன் நாவலின் நந்தினி கதாப்பாத்திரத்தை வைத்துதான் எழுதியதாக ரஜினி குறிப்பிட்டிருந்தார். நீலாம்பரிக்காக எடுக்கப்பட வேண்டிய படம், அப்படியே படையப்பாவின் பக்கம் திரும்பி விட்டது. 

4 /7

தற்போது 25 வருடங்கள் கழித்து, இந்த படத்தின் இரண்டாம் பாகத்திற்கான வாய்ப்பு இருப்பதாக ரஜினிகாந்த் கூறியிருக்கிறார். இப்படத்திற்கு படையப்பா பாகம் 2: நீலாம்பரி என பெயரிட இருப்பதாகவும் ரஜினி தெரிவித்திருந்தார்.

5 /7

ரஜினிக்கும் விஜய்க்கும் எந்த நேர்முக போட்டியும் இல்லை என்றாலும், ரசிகர்கள் அனைவரும் அப்படி இருப்பதாகத்தான் நினைத்துக்கொள்கின்றனர். எனவே, ரீ-ரிலீஸிற்கு ட்ரெண்ட் செட்டராக இருந்த கில்லி படத்தின் வசூலை, படையப்பா படம் முறியடிக்குமா என்கிற எதிர்பார்ப்பு மக்கள் மத்தியில் எழுந்துள்ளது. 

6 /7

கில்லி திரைப்படம், ரீ-ரிலீஸ் ஆன முதல் நாளே, சுமார் ரூ.8 கோடி வரை கலெக்ட் செய்தது. படையப்பா திரைப்படத்தின் ரீ-ரிலீஸின் முதல் நாள் டிக்கெட்டுகள் ரூ.30 லட்சம் மதிப்பில் விற்று தீர்ந்ததாக தகவல் வெளியானது.   

7 /7

சென்னை ரோகிணி திரையரங்கில், படையப்பா படத்தின் 15,000 டிக்கெட்டுகள் விற்றுள்ளதாம். இது, கில்லி ரீ-ரிலீஸை விட அதிகம் என்று கூறப்படுகிறது. படையப்பா திரைப்படம் தற்போது ஹவுஸ்ஃபுல் புக்கிங்கில் தியேட்டரில் ஓடிக்கொண்டிருக்கிறது. இப்படம், கண்டிப்பாக ரூ.40 லட்சம் வரை ரீ-ரிலீஸின் முதல் நாளில் சம்பாதிக்கலாம் என்று கூறப்படுகிறது.