Thalaivar 173 Director Sundar C Opted Out : ரஜினியின் 173வது படத்திலிருந்து சுந்தர்.சி விலகியிருக்கிறார். இதையடுத்து, யார் இந்த படத்தை இயக்க வேண்டுமென ரசிகர்கள் இணையத்தில் பேசி வருகின்றனர்.
Thalaivar 173 Director Sundar C Opted Out : ரஜினிகாந்த் நடிக்கும் படத்தை, கமல்ஹாசன் தயாரிக்க இருக்கிறார். இது, ரஜினியின் 173வது படமாகும். இந்த படத்தை சுந்தர்.சி இயக்க இருந்தார். இந்த நிலையில், அவர் படத்திலிருந்து விலகுவதாக தெரிவித்திருக்கிறார். இதையடுத்து யார் இந்த படத்தை இயக்க இருக்கிறார் என்பது குறித்து ரசிகர்கள் பேசி வருகின்றனர்.
தமிழ் சினிமாவின் லெஜண்ட் டுயோவான கமல்-ரஜினி பல ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் ஒரு படத்தில் இணைய இருக்கின்றனர். கமல் தயாரிக்கும் படத்தில் ரஜினி நடிக்கிறார். இதனை, சுந்தர்.சி இயக்குவதாக சில நாட்களுக்கு முன்பு அறிவிப்பு வெளியானது.
சுந்தர்.சி, தற்போது தலைவர் 173 படத்திலிருந்து விலகுவதாக அறிவித்திருக்கிறார். தவிர்க்க முடியாத காரணங்களால் இதிலிருந்து விலகுவதாக கூறியிருக்கிறார். அடுத்ததாக யார் இந்த படத்தை இயக்க இருப்பது என்பது குறித்த எதிர்பார்ப்பு அதிகரித்து வருகிறது.
தற்போது ஜெயிலர் 2 படத்தை நெல்சன் திலீப்குமார் இயக்கி வருகிறார். தலைவர் 173 படத்தை இவர் இயக்கினால் நன்றாக இருக்கும் என்று சிலர் கூறி வருகின்றனர்.
கமல்-ரஜினி படத்தை இயக்க வேண்டும் என்று நினைத்த முதல் இயக்குநர் லோகேஷ் கனகராஜ்தான். இவர் கூலி படத்தை சொதப்பியதால் அடுத்ததாக அவர் நினைக்கும் படத்தை இயக்க இயலாது என்று கூறப்படுகிறது. இருப்பினும் இவரும் லிஸ்டில் உள்ளார்.
ரசிகர்கள் அனைவரும் ’இவர்’ அடுத்ததாக படத்தை எடுத்தால் நன்றாக இருக்கும் என்று சிலர் கூறி வருகின்றனர். அந்த இயக்குநர் யார் தெரியுமா?
அது கார்த்திக் சுப்புராஜ்தான். அவர், பெரிய ரஜினி ரசிகர். ஏற்கனவே, ரஜினியை வைத்து பேட்ட படத்தை இயக்கியிருக்கிறார்.
கார்த்திக் சுப்புராஜே, கமல்-ரஜினி படத்தை இயக்கினால் நன்றாக இருக்கும் என்று சிலர் கூறி வருகின்றனர். இருப்பினும் என்ன நடக்கிறது என்பதை பொருத்திருந்துதான் பார்க்க வேண்டும்.