வெட்கத்தில் ராஷ்மிகா மந்தனா.. நிச்சயதார்த்த மோதிரம் இதுதான்.. வீடியோ வைரல்

Written ByVijaya Lakshmi
Published: Nov 04, 2025, 06:14 PM IST|Updated: Nov 04, 2025, 06:14 PM IST

ஜெகபதி பாபு தொகுத்து வழங்கிய Zee5 டாக் ஷோவான 'Jayammu Nischayammu Raa' நிகழ்ச்சியில், ராஷ்மிகா மந்தனாவிடம் அவரது நிச்சயதார்த்த மோதிரம் மற்றும் விஜய் தேவரகொண்டா பற்றி கேள்விகள் கேட்கப்பட்டது.

நடிகை ராஷ்மிகா மந்தனா, ஜகபதி பாபு தொகுத்து வழங்கிய ஜீ5 தளத்தின் 'ஜெயம்மு நிச்சயம்மு ரா' (Jayammmu Nischayammmu Raa) என்ற நிகழ்ச்சியில் தனது வரவிருக்கும் படமான 'தி கேர்ள் ஃப்ரெண்ட்' (The Girlfriend) திரைப்படத்தை விளம்பரப்படுத்துவதற்காக விருந்தினராகக் கலந்துகொண்டார். நிகழ்ச்சியின்போது அவர் அணிந்திருந்த நிச்சயதார்த்த மோதிரம், தொகுப்பாளர் மற்றும் பார்வையாளர்களின் கவனத்தை ஈர்த்தது.

1/6

தமிழ் , தெலுங்கி , இந்தி , கன்னடம் ஆகிய மொழிகளில் முன்னணி நடிகையாக வலம் வரும் ராஷ்மிகா மந்தனாவுக்கு அண்மையில் நடிகர் விஜய் தேவரகொண்டாவுடன் திருமணம் நிச்சயிக்கப்பட்டது.

2/6

குடும்பத்துடன் மற்றும் நெருங்கிய நண்பர்கள் மத்தியில் இந்த நிகழ்வு நடைபெற்றது. இது குறித்து இரு நடிகர்களும் தற்போது வரை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடவில்லை. ஆனால் இருவரது புகைப்படங்களிலும் அவர்கள் நிச்சயதார்த்தத்தில் மாற்றிக்கொண்ட மோதிரங்களை நாம் காணலாம்.

3/6

கீதா கோவிந்தம் , டியர் காம்ரேட் ஆகிய படங்களில் விஜய் தேவரகொண்டா மற்றும் ராஷ்மிகா மந்தனா இணைந்து நடித்துள்ளார்கள். அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் 26 ஆம் தேதி இருவருக்கும் திருமணம் முடிவு செய்யப்பட்டிருப்பதாக சினிமா வட்டாரங்களில் கூறப்படுகிறது. திருமண சலசலப்பிற்கு மத்தியில் பிஸியாக அடுத்தடுத்த படங்களில் நடித்து வருகிறார் ராஷ்மிகா. அண்மையில் இந்தியில் ஆயுஷ்மான் குர்ரானாவுடன் அவர் நடித்த தம்மா திரைப்படம் வெளியாகி வெற்றி நடைபோடுகிறது.

4/6

நடிகை ராஷ்மிகா மந்தனா, ஜீ5 தளத்தில் ஜகபதி பாபு தொகுத்து வழங்கும் Jayammmu Nischayammmu Raa என்ற நிகழ்ச்சியில் தனது வரவிருக்கும் படமான 'தி கேர்ள் ஃப்ரெண்ட் திரைப்படத்தை விளம்பரப்படுத்துவதற்காக விருந்தினராகக் கலந்துகொண்டார். அப்போது தொகுப்பாளர் அந்த மோதிரத்தைக் குறிப்பிட்டு, "இது உங்களுக்கு மிகவும் பிடித்த மோதிரம், அதற்குப் பின்னால் ஒரு வரலாறு இருக்கிறது" என்று கிண்டலாகக் கூறியபோது, ராஷ்மிகா வெட்கப்பட்டு சிரித்தவாறே, "நான் இதை ரசிக்கிறேன்" என்று பதிலளித்தார்.

5/6

தொகுப்பாளர் ஜெகபதி பாபு, ராஷ்மிகாவை கிண்டல் செய்யும் விதமாக, அவரது வாழ்வில் உள்ள 'விஜய்' களின் (விஜய் தேவரகொண்டா, விஜய் சேதுபதி, தளபதி விஜய்) பெயர்களைக் குறிப்பிட்டு, "நீங்கள் 'விஜயம்' (வெற்றி) மற்றும் விஜய்யை உரிமையாக்கிக் கொண்டதாகத் தெரிகிறது" என்று நகைச்சுவையாகக் கூறினார். இதற்கு ராஷ்மிகா புன்னகைத்து சிரித்ததோடு நிறுத்திக்கொண்டார்.

6/6

இது தொடர்பான வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. மேலும் பலர் இந்த மொத்திரம் எவ்வளவு ரூபாய் இருக்கும் என்று ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.

 

        View this post on Instagram                      

A post shared by Zee Telugu (@zeetelugu)