Ration Card : PHH, PHH-AAY ரேஷன் கார்டு வைத்திருப்பவர்களுக்கு முக்கிய அறிவிப்பு

Ration Card : PHH, PHH-AAY ரேஷன் கார்டு வைத்திருப்பவர்களுக்கு கொடுக்கப்பட்டுள்ள முக்கிய அறிவிப்பு குறித்து இங்கே பார்க்கலாம்.

 

Ration Card : ரேஷன் கார்டு வைத்திருப்பவர்கள் அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டிய முக்கிய அப்டேட்டை தமிழ்நாடு அரசிடமிருந்து வெளியாகியுள்ளது. விவரம் இங்கே தெரிந்து கொள்ளுங்கள்

 

1 /9

தமிழ்நாடு அரசு ரேஷன் கார்டு (Ration Card) தொடர்பான ஒரு முக்கிய அப்டேட்டைக் கொடுத்துள்ளது. ரேஷன் கார்டு மூலம் இலவச அரிசி பெறுபவர்கள் இதுவரை கைவிரல் ரேகை பதிவு செய்யவில்லை என்றால், உடனே பதிவு செய்ய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.  

2 /9

PHH, PHH-AAY வகை ரேஷன் கார்டு வைத்துள்ளவர்களின் அனைத்து குடும்ப உறுப்பினர்களும் கட்டாயம் கைவிரல் ரேகை பதிவு செய்ய வேண்டும். அதுவும் டிசம்பர் 25 ஆம் தேதிக்குள் பதிவு செய்ய வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.  

3 /9

இதுவரை பதிவு செய்யாதவர்கள் அருகில் உள்ள ரேஷன் கடைகளுக்கு நேரடியாக சென்று தங்களின் கைவிரல் ரேகையை பதிவு செய்து கொள்ளுங்கள்.   

4 /9

இது தொடர்பான அறிவிப்பை திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அம்மாவட்ட மக்களுக்காக வெளியிட்டுள்ளார். அதில், PHH, PHH-AAY வகை ரேஷன் கார்டு வைத்துள்ளவர்கள் உடனடியாக கைவிரல் ரேகை பதிவு செய்யுமாறு கேட்டுக் கொண்டுள்ளார்.  

5 /9

தேசிய உணவு பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் பயன்பெறும் முன்னுரிமை குடும்ப அட்டைகள் (PHH) மற்றும் அந்த்யோதயா அன்ன யோஜனா (PHH-AAY) குடும்ப அட்டை வைத்திருக்கும் குடும்ப அட்டைதாரர்கள், அக்குடும்ப அட்டையில் உள்ள அனைத்து உறுப்பினர்களும் தங்களது விரல்ரேகையை (Biometric) பதிவு செய்வது கட்டாயம்.   

6 /9

இதுவரை விரல் ரேகையை பதிவு செய்யாதவர்கள் தாங்கள் வசிக்கும் இடங்களுக்கு அருகில் உள்ள நியாயவிலைக் கடைகளில் 25.12.2025-க்குள் தங்களது விரல்ரேகையை பதிவு செய்து கொள்ளுங்கள் என திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.  

7 /9

இந்த கார்டு வைத்திருப்பவர்கள் கைவிரல் ரேகை ஒருவேளை பதிவு செய்யவில்லை என்றால், பொருட்கள் வாங்குவதில் சிக்கல் எழலாம். ஒருவேளை அரசு இந்த காலக்கெடுவை  நீட்டித்துவிட்டால், பொருட்கள் வாங்குவதில் பிரச்சனை இருக்காது. நீட்டிக்காதபோது சிக்கல் வர வாய்ப்பு இருக்கிறது.  

8 /9

தமிழ்நாட்டில் அந்த்யோதயா அன்ன யோஜனா (PHH-AAY), முன்னுரிமை ரேஷன் கார்டு (PHH), முன்னுரிமையற்ற ரேஷன் கார்டு (NPHH), முன்னுரிமையற்ற சர்க்கரை ரேஷன் கார்டு (NPHH-S) மற்றும் பொருளில்லா அட்டைகள் புழக்கத்தில் உள்ளன.  

9 /9

அந்த்யோதயா அன்ன யோஜனா (PHH-AAY) ரேஷன் கார்டு வைத்திருப்பவர்களுக்கு மாதம் 35 கிலோ அரிசியும், முன்னுரிமை ரேஷன் கார்டு வைத்திருப்பவர்களுக்கு குடும்ப உறுப்பினர்களைப் பொறுத்து 8 கிலோ அரிசி கிடைப்பதுடன் சர்க்கரை உள்ளிட்ட பிற பொருட்கள் மலிவு விலையில் கிடைக்கும்.