Ravindra Jadeja: இந்திய டெஸ்ட் அணியின் துணை கேப்டனாக நியமிக்கப்பட்ட ஜடேஜா, தற்போது ஓடிஐ அணியில் இருந்து ஓய்வுபெறுவது ஏறத்தாழ உறுதியாகிவிட்டது. இதுகுறித்து விரிவாக இங்கு காணலாம்.
India National Cricket Team: ரவீந்திர ஜடேஜா (Ravindra Jadeja) டி20ஐ-இல் ஓய்வை அறிவித்துவிட்டார். டெஸ்டில் முதல்முறையாக துணை கேப்டன் பொறுப்பை பெற்றுள்ளார். இந்நிலையில், தற்போது அவருக்கு ஓடிஐ அணியில் இடமில்லை. அதற்கு என்ன காரணம், இந்திய ஓடிஐ அணிக்கு அவர் தேவைப்படாதது ஏன் என்பதை இங்கு விரிவாக தெரிந்துகொள்ளலாம்.
1/8இந்திய அணி (Team India) கடந்த 2024 ஐசிசி டி20 உலகக் கோப்பை தொடரை கைப்பற்றிய உடன் விராட் கோலி, ரோஹித் சர்மா (Rohit Sharma), ரவீந்திர ஜடேஜா ஆகிய மூவரும் ஓய்வை அறிவித்தனர். தொடர்ந்து ரோஹித், கோலி ஆகியோர் டெஸ்டில் இருந்தும் ஓய்வை அறிவித்தனர்.
2/8ஆனால், ஜடேஜா டெஸ்ட் மற்றும் ஓடிஐ-இல் இன்னும் ஓய்வை அறிவிக்கவில்லை. ரிஷப் பண்டுக்கு ஏற்பட்ட காயம் காரணமாக, இந்திய டெஸ்ட் அணியில் ஜடேஜாவுக்கு முதல்முறையாக துணை கேப்டன் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.
3/8ஜடேஜா இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரிலும் சரி, தற்போது நடைபெறும் வெஸ்ட் இண்டீஸ் தொடரிலும் சரி சிறப்பாக விளையாடி வருகிறார். ஜடேஜா 10 இன்னிங்ஸில் 516 ரன்களையும், 7 விக்கெட்டையும் வீழ்த்தியிருந்தார். வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான முதல் போட்டியில் 105* ரன்கள் மற்றும் 4 விக்கெட்டுகளை எடுத்து அசத்தினார்.
4/8சுழற்பந்துவீச்சுக்கு பெயர் பெற்ற ஜடேஜா, தற்போது பேட்டிங்கிலும் கலக்கி வருகிறார். 1000 நாள்களுக்கும் மேலாக டெஸ்ட் தரவரிசையில் நம்பர் 1 ஆல்-ரவுண்டராக வலம் வருகிறார் ஜடேஜா.
5/8இந்த சூழலில், ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலியை (Virat Kohli) போல் ஜடேஜாவும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இந்தியாவின் ஓடிஐ அணியில் இடம்பெறுவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவருக்கு வாய்ப்பு வழங்கப்படாதது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
6/8அக்சர் பட்டேல், வாஷிங்டன் சுந்தர் என ஏற்கெனவே இரண்டு ஆல்-ரவுண்டர்களுடன் இந்தியா களமிறங்குவதாலும், ஆஸ்திரேலியாவில் இரண்டு சுழற்பந்துவீச்சு ஆல்-ரவுண்டருக்கு மேல் தேவைப்படாது என்பதாலும் ஜடேஜாவுக்கு (Ravindra Jadeja) வாய்ப்பு வழங்கவில்லை என அகர்கர் தெரிவித்தார். இருப்பினும் அவர் எப்போதும் எங்களின் கவனத்தில் இருப்பார் என்றும் கூறினார்.
7/8இதன்மூலம், தென்னாப்பிரிக்காவில் நடைபெறும் 2027 உலகக் கோப்பை தொடருக்கு ஜடேஜா முதன்மையான ஆப்ஷன் இல்லை என்பது உறுதியாகிறது. ஆஸ்திரேலியாவை போல் தென்னாப்பிரிக்காவிலும் 3 சுழற்பந்துவீச்சு ஆல்-ரவுண்டர்கள் அணியில் தேவைப்பட மாட்டார்கள். எனவே, யாருக்காவது காயம் ஏற்பட்டால் ஒழிய வேறு காரணத்திற்காக ஜடேஜாவுக்கு வாய்ப்பு கிடைக்காது என்பதும் உறுதியாகிறது.
8/8தற்போது ஸ்குவாடில் இருக்கும் ரோஹித், விராட் கோலி ஆகியோரே 2027 உலகக் கோப்பை தொடரில் இருப்பார்கள் என்பது உறுதியில்லை என அகர்கர் கூறியிருந்தார். அவர்களுக்கே அந்த நிலைமை என்றால் ஜடேஜாவுக்கு இனி ஓடிஐயில் வாய்ப்பு கிடைப்பது மிக மிக அரிது. எனவே இனி ஜடேஜாவை வெள்ளை ஜெர்ஸியில் மட்டுமே பார்க்க முடியும். ஐபிஎல் தொடரில் ஜடேஜா தொடர் விளையாடுவார்.