IPL 2025 Missing Players: 2025 ஐபிஎல் தொடரை தவறவிட இருக்கும் முக்கிய வீரர்களின் பட்டியல் இங்கே கொடுக்கப்பட்டுள்ளது.
IPL 2025: வரும் மார்ச் 22ஆம் தேதி 2025 ஐபிஎல் தொடர் தொடங்குகிறது. முதல் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் மோதுகின்றன. இச்சூழலில் முக்கிய வீரர்கள் ஐபிஎல் தொடரை தவறவிட இருக்கின்றனர். அந்த வீரர்கள் யார் யார்? என்பதை இந்த புகைப்பட தொகுப்பில் பார்க்கலாம்.
சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்காக விளையாட இருந்த பிரைடன் கார்ஸ் காயம் காரணமாக தற்போது விலகி இருக்கிறார். இதனால் அவருக்கு மாற்று வீரராக யான் முல்டரை ஹைதராபாத் அணி தேர்வு செய்ததுள்ளது.
தென்னாப்பிரிக்க வேகப்பந்து வீச்சாளர் லிசாத் வில்லியம்ஸ் காயம் காரணமாக வரவிருக்கும் டாடா ஐபிஎல் 2025 இல் இருந்து விலகியுள்ளார். இந்நிலையில், அவருக்கு பதிலாக மும்பை இந்தியன்ஸ் அணி கார்பின் பாஷை தேர்வு செய்துள்ளது.
டெல்லி அணி வீரர் ஹாரி புரூக் ஐபிஎல் போட்டியில் இருந்து தானாக விலகி உள்ளார். இதனால் அவர் அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு பிசிசிஐ-யால் ஐபிஎல் போட்டியில் விளையாட தடை செய்யப்பட வாய்ப்புள்ளது.
லக்னோ அணியின் முக்கிய பந்து வீச்சாளரான மயங்க் யாதவ்-க்கு முதுகில் ஏற்பட்ட காயம் காரணமாக அவர் தற்போது அதில் இருந்து குணமடைந்து வருகிறார். இதன் காரணமாக அவர் ஐபிஎல் தொடரின் முதல் பாதியில் விளையாட மாட்டார்.
ஆர்சிபி அணியால் வாங்கப்பட்ட ஜேக்கப் பெத்தேல் தசைநார் காயத்தால் அவதிபட்டு வருகிறார். இதன் காரணமாக அவர் இந்த ஐபிஎல் தொடரை தவறவிட இருக்கிறார். ஆனால் தற்போது வரை இவருக்கான மாற்று வீரர் இன்னும் அறிவிக்கப்படவில்லை.
ஆர்சிபி அணியின் முக்கிய பந்து வீச்சாளரான ஜோஸ் ஹேசில்வுட் பார்டர் கவாஸ்கர் டிராபியின் போது காயம் அடைந்தார். இதனால் அவர் சாம்பியன்ஸ் டிராபியை தவறவிட்டார். தற்போது அவர் ஐபிஎல் தொடரையும் தவறவிட வாய்ப்புள்ளது.
கடந்த டிசம்பர் மாதம் நடைபெற்ற மெகா ஏலத்தில் டெல்லி அணியால் கே.எல்.ராகுல் 14 கோடிக்கு வாங்கப்பட்டார். இந்நிலையில், அவர் வரும் ஐபிஎல் தொடரின் முதல் பாதியை தவறவிட உள்ளதாக கூறப்படுகிறது. அவரது மனைவிக்கு குழந்தை பிறக்க உள்ளதால் அவருடன் கே.எல்.ராகுல் இருக்கு விரும்புவதால் அவர் முதல் ஐபிஎல் பாதியில் விளையாட மாட்டார் என கூறப்படுகிறது.
மும்பை அணியின் நட்சத்திர பந்து வீச்சாளரான ஜஸ்பிரித் பும்ரா காயத்தால் அவதிபட்டு வருகிறார். தற்போது அதில் இருந்து குணமடைந்து வரும் அவர், ஐபிஎல் தொடரின் முதல் இரண்டு வாரங்களில் நடக்கும் போட்டிகளில் விளையாட மாட்டார் என்ற தகவல் வெளியாகி உள்ளது.