ஐபிஎல் 2025: இந்த அணி தான் சாம்பியன்.. கருத்து கணிப்பில் வெளியான ஹேப்பி நியூஸ்!

நடப்பாண்டு ஐபிஎல் தொடரின் இறுதி போட்டி வரும் ஜூன் 3ஆம் தேதி நடைபெறுகிறது. 

 

2025 ஐபிஎல் தொடர் தற்போது இறுதி கட்டத்தை எட்டி உள்ளது. பிளே ஆஃப் சுற்றுக்கு ஆர்சிபி, குஜராத், மும்பை மற்றும் பஞ்சாப் அணிகள் முன்னேறி உள்ளன. இந்த நிலையில், மக்களிடையே கருத்துக்கணிப்பு எடுக்கப்பட்டுள்ளது. 

1 /5

ஐபிஎல் தொடரில் எந்த அணி கோப்பையை வெல்லும்? எந்த அறிமுக வீரர் இந்த ஆண்டில் மிகச் சிறப்பாக செயல்பட்டுள்ளார் என்ற பல்வேறு கேள்விகள் ரசிகர்கள் இடையே எழுப்பப்பட்டது. நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பின் முடிவுகள் தற்போது வெளியாகி உள்ளன.

2 /5

கருத்துக்கணிப்பில் 65% பேர் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி தான் ஐபிஎல் கோப்பையை வெல்லும் என கூறி உள்ளனர். 

3 /5

அடுத்ததாக டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு 12% பேரும் பஞ்சாப் அணிக்கு 7% பேரும் வாக்களித்து உள்ளனர். 

4 /5

அதேபோல் இந்த ஆண்டின் சிறந்த அறிமுக வீரராக வைபவ் சூர்யவன்ஷியை பெரும்பாலான ரசிகர்கள் தேர்வு செய்துள்ளனர். இதற்கு காரணமாக, 14 வயதிலேயே அவர் 35 பந்தில் சதம் விளாசியது பார்க்கப்படுகிறது.

5 /5

மேலும், அடுத்த அண்டு ஐபிஎல் தொடரில் தோனி விளையாட வேண்டுமா? என்று எழுப்பப்பட்ட கேள்விக்கு 73% பேர் தோனி அடுத்த ஆண்டு விளையாட வேண்டும் என விருப்பம் தெரிவித்துள்ளனர்.