கறிவேப்பிலை சாப்பிட்டால் இந்த நோய்கள் எதுவும் உங்க பக்கமே வராது!

கறிவேப்பிலையில் வைட்டமின்கள், நார்ச்சத்துக்கள், அழற்சி எதிர்ப்பு பண்புகள், நல்ல பாக்டீரியாக்கள் நிறைந்துள்ளன. இவை பல்வேறு நோய்களிலிருந்து உங்களைப் பாதுகாத்து ஆரோக்கியமான உடலைத் தக்க வைக்கிறது. கறிவேப்பிலை மூலிகை குணம் பற்றி கீழேக் கொடுக்கப்பட்டுள்ளது. 

  • Dec 08, 2024, 17:50 PM IST

கறிவேப்பிலை பொதுவாக நாம் அனைவரும் சமையலுக்குப் பயன்படுத்தப்படும் முக்கிய பொருள். ஆனால் இதனைச் சாப்பிடும் போது தூக்கிப்போட்டுச் சாப்பிடுகிறோம். இதில் இருக்கும் நன்மைகள் பற்றி யாரும் தெரிந்துகொள்ள முன்வரவில்லை. கறிவேப்பிலை புற்று நோய் போன்ற பல்வேறு கொடிய நோயிலிருந்து நம்மைப் பாதுகாக்கும் எளிமையாகக் கிடைக்கும் மூலிகை  இலை என்றே சொல்லலாம். மேலும் இதன் நன்மைகள் பற்றி கீழே படிக்கவும். 

1 /9

செரிமானம்: கறிவேப்பிலை செரிமானத்திற்கு உதவும் அஜீரணத்தைக் குறைப்பதன் மூலப் பொருட்களைக் கொண்டுள்ளன. இவை  செரிமானம், மலச்சிக்கல் மற்றும் குடல் ஆரோக்கியத்திற்கு உதவுகிறது.

2 /9

எடை இழப்பு: கறிவேப்பிலையில் நார்ச்சத்துகள் உள்ளன. இவை கொழுப்பைக் குறைத்து உடல் எடையைச் சரியான முறையில் வைக்க உதவுகிறது. மேலும் இது செரிமானத்தை மேம்படுத்தி வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்க உதவுகிறது.  

3 /9

கண் ஆரோக்கியம் : கறிவேப்பிலை வைட்டமின் ஏ நிறைந்துள்ளன. இது வறண்ட கண்கள், இரவு குருட்டுத்தன்மை மற்றும் மாகுலர் சிதைவு போன்ற பார்வை பிரச்சினைகளைத் தடுக்க உதவுகிறது. கண்களுக்கு குளிர்ச்சியை அளித்து சூட்டிலிருந்து பாதுகாக்கிறது. 

4 /9

முடி ஆரோக்கியம்: கறிவேப்பிலையில் வைட்டமின் சி உள்ளன. இது முடி வேர்களுக்கு ஊட்டமளித்து ஆரோக்கியத்துடன் வைக்க உதவுகிறது. அதுமட்டுமல்லாமல் முடி வளர்ச்சியை ஊக்குவிக்கவும் மற்றும் முடி உதிர்தலைக் குறைக்கவும் உதவுகிறது.  

5 /9

சரும ஆரோக்கியம்: கறிவேப்பிலையில் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் மற்றும் வைட்டமின்கள் உள்ளன. இது முகப்பரு, கரும்புள்ளிகள் நீங்கி சருமத்தை பளபளப்பாக்க வைக்கிறது.   

6 /9

அழற்சி எதிர்ப்பு: கறிவேப்பிலை நமது உடலில் உள்ள அழற்சியைக் குறைத்து அழற்சி எதிர்ப்பு பண்புகளை ஊக்குவிக்க உதவுகிறது. 

7 /9

புற்றுநோய் எதிர்ப்பு:கறிவேப்பிலையில் புற்றுநோய் செல்களின் வளர்ச்சியைக் கட்டுப்படுத்த உதவும் சேர்மங்கள் நிறைந்துள்ளன. இவை புற்று நோயிலிருந்து பாதுகாக்கும் அற்புத இலையாக உதவுகிறது. 

8 /9

நோயெதிர்ப்பு அமைப்பு: கறிவேப்பிலையில் வைட்டமின் சி உள்ளதால் இது நோயெதிர்ப்பு மண்டலத்தை அதிகரிக்கிறது. 

9 /9

பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டது. அதை ஏற்றுக் கொள்வதற்கு முன், கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெறுங்கள். ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது.