கறிவேப்பிலை சாப்பிட்டால் இந்த நோய்கள் எதுவும் உங்க பக்கமே வராது!
செரிமானம்: கறிவேப்பிலை செரிமானத்திற்கு உதவும் அஜீரணத்தைக் குறைப்பதன் மூலப் பொருட்களைக் கொண்டுள்ளன. இவை செரிமானம், மலச்சிக்கல் மற்றும் குடல் ஆரோக்கியத்திற்கு உதவுகிறது.
எடை இழப்பு: கறிவேப்பிலையில் நார்ச்சத்துகள் உள்ளன. இவை கொழுப்பைக் குறைத்து உடல் எடையைச் சரியான முறையில் வைக்க உதவுகிறது. மேலும் இது செரிமானத்தை மேம்படுத்தி வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்க உதவுகிறது.
கண் ஆரோக்கியம் : கறிவேப்பிலை வைட்டமின் ஏ நிறைந்துள்ளன. இது வறண்ட கண்கள், இரவு குருட்டுத்தன்மை மற்றும் மாகுலர் சிதைவு போன்ற பார்வை பிரச்சினைகளைத் தடுக்க உதவுகிறது. கண்களுக்கு குளிர்ச்சியை அளித்து சூட்டிலிருந்து பாதுகாக்கிறது.
முடி ஆரோக்கியம்: கறிவேப்பிலையில் வைட்டமின் சி உள்ளன. இது முடி வேர்களுக்கு ஊட்டமளித்து ஆரோக்கியத்துடன் வைக்க உதவுகிறது. அதுமட்டுமல்லாமல் முடி வளர்ச்சியை ஊக்குவிக்கவும் மற்றும் முடி உதிர்தலைக் குறைக்கவும் உதவுகிறது.
சரும ஆரோக்கியம்: கறிவேப்பிலையில் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் மற்றும் வைட்டமின்கள் உள்ளன. இது முகப்பரு, கரும்புள்ளிகள் நீங்கி சருமத்தை பளபளப்பாக்க வைக்கிறது.
அழற்சி எதிர்ப்பு: கறிவேப்பிலை நமது உடலில் உள்ள அழற்சியைக் குறைத்து அழற்சி எதிர்ப்பு பண்புகளை ஊக்குவிக்க உதவுகிறது.
புற்றுநோய் எதிர்ப்பு:கறிவேப்பிலையில் புற்றுநோய் செல்களின் வளர்ச்சியைக் கட்டுப்படுத்த உதவும் சேர்மங்கள் நிறைந்துள்ளன. இவை புற்று நோயிலிருந்து பாதுகாக்கும் அற்புத இலையாக உதவுகிறது.
நோயெதிர்ப்பு அமைப்பு: கறிவேப்பிலையில் வைட்டமின் சி உள்ளதால் இது நோயெதிர்ப்பு மண்டலத்தை அதிகரிக்கிறது.
பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டது. அதை ஏற்றுக் கொள்வதற்கு முன், கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெறுங்கள். ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது.