Reason Why Rajinikanth Did Not Marry Sridevi : தமிழ் திரையுலகின் சூப்பர் ஸ்டார் நடிகராக விளங்கும் நடிகர் ரஜினிகாந்த், நடிகை ஸ்ரீதேவியை மிகவும் காதலித்ததாக கூறப்படுகிறது. ஆனால், அவர்கள் இருவரும் திருமணம் செய்துகொள்ளவில்லை. அது ஏன் தெரியுமா?
Reason Why Rajinikanth Did Not Marry Sridevi : மறைந்த நடிகை ஸ்ரீதேவியை நம்மால் எப்படி மறக்க முடியாதோ, அதே போல அவரை நன்கு தெரிந்தவர்களாலும் அவர் மீது வைத்திருந்த காதலை மறக்க முடியாது. அப்படி, ஸ்ரீதேவியை கண்ணாபின்னாவென காதலித்தாராம், நடிகர் ரஜினிகாந்த். இவர்கள் இருவரும் கிட்டத்தட்ட 18 படங்களில் ஜோடி சேர்ந்து நடித்திருப்பதாக கூறப்படுகிறது. ஸ்ரீதேவி, குழந்தை நட்சத்திரமாக திரையுலகிற்குள் அறிமுகமாக, நடிகர் ரஜினிகாந்த் பஸ் கண்டக்டராக இருந்து பின்னர் திரையுலகிற்குள் நுழைந்தார். இவர்கள் இருவரும் சேர்ந்து நடித்த பெரும்பாலான படங்கள் பெரிய ஹிட் அடித்துள்ளன. ஸ்ரீதேவியை ரஜினி காதலித்தாலும், ஒரு சிம்பிளான காரணத்தால் இவர்களின் திருமணம் நடைபெறாமல் போனது. அது என்ன காரணம் தெரியுமா?
ஸ்ரீதேவி, குட்டிப்பெண்ணாக இருக்கும் போதே குழந்தை கதாப்பாத்திரங்கள் மூலமாக திரையுலகிற்குள் நுழைந்து விட்டார். இவரும் ரஜினியும் ராணுவ வீரன், போக்கிரி ராஜா உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளனர்.
ஸ்ரீதேவியும், ரஜினிகாந்தும் கிட்டத்தட்ட 18 படங்களில் ஜோடி சேர்ந்து நடித்திருந்தாலும் மக்கள் மத்தியில் நீங்கா நினைவாக இருப்பது ஜானி படமும், மூன்று முடிச்சு படமும்தான்.
ரஜினிகாந்த், திரையுலகில் வளர்ந்து வரும் நடிகராக இருந்த காலத்தில் ஸ்ரீதேவியின் குடும்பத்தாருக்கு நெருக்கமாக இருந்தார். அடிக்கடி ஸ்ரீதேவியின் தாயாரை சந்திப்பது, ஒன்றாக உணவு அருந்துவது போன்ற விஷயங்கள் நடைபெறும். ரஜினி துவண்டு போய் இருந்த சில சமயங்களில் ஸ்ரீதேவியின் தாயார் அவருக்கு ஆதரவு தெரிவித்திருக்கிறார்.
ஸ்ரீதேவிக்கு 16 வயதான சமயத்தில், ரஜினிகாந்த் அவரை திருமணம் செய்துகொள்ள வேண்டும் என நினைத்தாராம். இதனை, மறைந்த தமிழ்பட இயக்குநர் கே.பாலச்சந்தரிடம் கூறியிருக்கிறார் ரஜினிகாந்த். இருவரும் ஸ்ரீதேவியின் வீட்டிற்கு அவரை பெண் கேட்பதற்காக சென்றதாக கூறப்படுகிறது.
அது, ஸ்ரீதேவியின் வீட்டில் ஒரு விஷேஷம் நடந்து கொண்டிருந்த சமயம். ரஜினியும் பாலச்சந்தரும் ஸ்ரீதேவியின் வீட்டை அடைந்த உடனே மின்வெட்டு ஏற்பட்டு, விளக்குகள் எரியாமல் போய் இருக்கிறது. இதனால், வீடே இருள் சூழ்ந்து காணப்பட்டிருக்கிறது. இதை பார்த்தவுடன் ரஜினிக்கு மனம் நெருட ஆரம்பித்து இருக்கிறது. ரஜினி, இது போன்ற விஷயங்களில் நம்பிக்கை உடையவர் என்பதால் ஸ்ரீதேவியை அன்று பெண் கேட்கவும் இல்லை, அந்த நாளுக்கு பிறகு அதை பற்றி பேசவும் இல்லை.
வருடங்கள் உருண்டோடின, தமிழ்-இந்தி படங்களில் நடித்து வந்த ஸ்ரீதேவி பெரிய ஸ்டாராக உச்சத்திற்கு சென்றார். இதற்கிடையில் ரஜினிகாந்த் லதாவை திருமணம் செய்து குழந்தை-குடும்பம் என செட்டிலாகி விட்டார். நடிகை ஸ்ரீதேவியோ 33 வயதில் திரைப்பட தயாரிப்பாளர் போனி கபூரை திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு ஜான்வி-குஷி என இரு பெண் குழந்தைகள் உள்ளனர்.
ஸ்ரீதேவி-ரஜினி வாழ்வில் ஒன்று சேரவில்லை என்றாலும், இருவருக்கும் இடையே இருந்த நட்பு பல ஆண்டுகளாக தொடர்ந்தது. 2011ஆம் ஆண்டு ரஜினிகாந்த் உடல்நலம் குன்றி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். அப்போது அவர் நலம்பெற வேண்டும் என்பதற்காக ஸ்ரீதேவி 7 நாட்கள் விரதம் இருந்தார் எனவும் ரஜினி உடல் நலம் பெற்ற பின், ஷீரடி சாய்பாபா கோயிலுக்கு சென்று தரிசனம் செய்ததாகவும் கூறப்படுகிறது.