SIP Mutual Fund: மாதம் ரூ.10,500 போதும்... 60 வயதில் கையில் ரூ.4 கோடி இருக்கும்

தனியார் துறையில் வேலை பார்ப்பவர்கள், தொழிலதிபர்கள், அமைப்புசாரா துறையில் இருப்பவர்கள் ஆகியோர், தங்கள் ஓய்வு காலத்திற்காக திட்டமிடுவது மிக அவசியம். இதனால் எவரையும் எதிர்பார்க்காமல் தன்னம்பிக்கையுடன் இருக்கலாம்.

ஓய்வு காலத்தில் யாரையும் சாராமல் இருக்க, சரியாக திட்டமிடுதல் அவசியம். சம்பாதிக்கும் பணத்தில் ஒரு சதவீதத்தை சேமித்து, அதனை நல்ல வருமானம் தரும் முதலீட்டில் போட்டு வந்தால், ஓய்வு காலத்தில் கோடிகளில் பணம் கையில் இருக்கும்.

1 /10

ஆயிரங்களை கோடிகளாக்குவது சாத்தியம் அல்லாத விஷயம் ஒன்றும் அல்ல. அதற்கு தேவை சரியானதிட்டமிடல் மட்டுமே. நீண்ட கால முதலீட்டில், வருமானத்தை அள்ளித் தரும் திட்டங்களால், பணத்தை பன்மடங்காக்குவது எளிதான காரியம் தான்.

2 /10

வருமானத்தை அள்ளித் தரும் முதலீடுகளில் பரஸ்பர நிதியம் முதலிடம் வகிக்கிறது. தற்போது பங்குச்சந்தையில் சிறிது ஏற்ற இறக்கம் காணப்பட்டாலும், நீண்ட கால முதலீட்டில் நிச்சயம் நல்ல லாபம் பார்க்கலாம் என்று வல்லுனர்கள் கூறுகின்றனர்.

3 /10

பரஸ்பர நிதியத்தில் கிடைக்கும் வருமானம் சராசரியாக 12% என்ற அளவில் இருக்கும் என்று பொருளாதார வல்லுநர்கள் கணிக்கின்றனர். மேலும் இதில் முதலீட்டிற்கு கூட்டு வட்டியை போன்று வருமானம் கிடைப்பதால், பணம் எளிதில் பன்மடங்கு ஆகிறது.

4 /10

ஓய்வு காலத்தில் கோடிகளில் பணம் கையில் இருந்தால், உங்களுக்கு ஏற்ற வகையில், லட்சங்களில் வருமானம் கிடைக்கும் வகையில், முதலீடுகள் செய்து கொள்ளலாம். அவசர செலவுகளுக்கும், அன்றாட தேவைகளுக்கும் யாரையும் எதிர்பார்க்க வேண்டிய அவசியமே ஏற்படாது.

5 /10

பரஸ்பர நிதியங்களில் எஸ்ஐபி என்னும் சிஸ்டமேட்டிக் இன்வெஸ்ட்மென்ட் பிளான் முறையில், மாதா மாதம் ரூபாய்10,500 என்ற அளவில் முதலீடு செய்து வந்தால், 32 ஆண்டுகளில் உங்கள் ஓய்வு காலத்தில் கையில் சுமார் 4 கோடி இருக்கும்.

6 /10

சுமார் 27 அல்லது 28 வயது இருக்கும் போதே, முதலீட்டை தொடங்கி தொடர்ந்து 32 ஆண்டுகளுக்கு, மாதம் ரூபாய் 10,500 என்ற அளவில், நல்ல வருமானம் கொடுக்கும் பரஸ்பர நிதியத்தில் முதலீடு செய்யத் தொடங்குவதால், ஆயிரங்களை கோடிகளாக்கலாம்.

7 /10

மாதம் ரூபாய் 10,500 என்ற அளவில், தொடர்ந்து 32 ஆண்டுகளுக்கு முதலீடு செய்யும் போது, நீங்கள் முதலீடு செய்த மொத்த தொகை ரூ.45,32,000 என்ற அளவில் இருக்கும். ஆனால் இதன் மூலம் கிடைக்கும் வருமானம் மட்டுமே ரூ.3.5 கோடியை தாண்டும்.

8 /10

பரஸ்பர நிதியத்தில் சராசரியாக 12 சதவீத வருமானம் கிடைக்கிறது என நிபுணர்கள் கூறுகின்றனர். சிறந்த பரஸ்பர நிதியங்கள், இதை விட அதிக அளவில் கூட அளிக்கின்றன. இது கூட்டு வட்டி வருமானத்தை கொடுப்பதால், ஆயிரங்களில் செய்யப்படும் முதலீடுகளுக்கு, கோடிகளில் வருமானம் கிடைக்கிறது.

9 /10

பரஸ்பர நிதியத்தில் 32 ஆண்டுகள் தொடர் முதலீட்டுக்கு, கிடைக்கும் வருமானம், சுமார் மூன்று கோடியே 68, 32 லட்சத்தி 297 என்ற அளவில் இருக்கும். அசலும் வருமானமும் சேர்த்து, 60 வயதில் உங்கள் கையில், 4,08,64,297 என்ற தொகை சேர்ந்திருக்கும்.

10 /10

பொறுப்பு துறப்பு: எங்கள் கணக்கீடுகள் கணிப்புகள் மட்டுமே, முதலீட்டு ஆலோசனை அல்ல. பரஸ்பர நிதியம் என்னும் மியூச்சுவல் ஃபண்டின் கடந்தகால வருமானம், எதிர்காலத்திலும் தொடரும் என்பதற்கு உத்தரவாதம் இல்லை. SEBI அங்கீகரிக்கப்பட்ட முதலீட்டு ஆலோசகரை அணுகி ஆலோசித்த பின்னரே முதலீடு தொடர்பான முடிவுகள் எடுக்கப்பட வேண்டும்.