New OTT Movies: தமிழ் சினிமா ரசிகர்களுக்கு இந்த வாரம் விருந்தாக அமைய உள்ளது. ஏனெனில் சில முக்கிய படங்கள் ஓடிடியில் வெளியாக உள்ளது.
நானி நடிப்பில் இந்த மாதம் வெளியாகி சூப்பர் ஹிட் அடித்த ஹிட் திரைப்படம் பலரையும் கவர்ந்திருந்தது. வித்தியாசமான கதைக்களத்தை கொண்டு ஒரு போலீஸ் இன்வெஸ்டிகேஷன் திரில்லர் ஆக உருவாகியிருந்தது.
ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று இருந்த ஹிட் 3 திரைப்படம் இன்று முதல் நெட்பிளிக்ஸ் ஓடிடியில் வெளியாகி உள்ளது.
கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சூர்யா, பூஜா ஹெக்டே, ஜெயராம், ஜோஜு ஜார்ஜ் உள்ளிட்ட பலர் நடிப்பில் இந்த மாதம் மே ஒன்றாம் தேதி வெளியான திரைப்படம் ரெட்ரோ. ஒரு சிலருக்கு படம் பிடித்தும் ஒரு சிலருக்கு பிடிக்காமலும் இருந்தது.
கேங்ஸ்டர் கதை களத்தை மையமாகக் கொண்டு சிறிது எமோஷனலாகவும் ரெட்ரோ படத்தை இயக்கியிருந்தார் கார்த்திக் சுப்புராஜ். இந்த படம் 30ம் தேதி நெட்பிளிக்ஸ் தளத்தில் வெளியாக உள்ளது.
மோகன்லால் நடிப்பில் எம்புரான் படத்திற்கு பிறகு உடனடியாக வெளியான படம் துடரும். எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமல் ஏப்ரல் 25ஆம் தேதி வெளியான இந்த படம் மிகப்பெரிய வசூலை பெற்றது.
இதுவரை 200 கோடிக்கு மேல் வசூல் செய்து சாதனைப் படைத்துள்ள இந்த படம் தற்போது ஓடிடியில் வெளியாக உள்ளது. மே 30ம் தேதி ஜியோ ஹாட்ஸ்டார் ஓடிடியில் வெளியாகிறது.