ஒரே சமையல் எண்ணெய் பலமுறை பயன்படுத்துவாரா? இந்த ஆபத்து உங்களை நெருங்கிவிடும்!

Reusing Cooking Oil Dangerous: நீங்கள் சமையலுக்கு ஒரே எண்ணெய்யைப் பயன்படுத்துவாராக இருந்தால், இந்த தகவல் உங்களுக்கு விழிப்புணர்வாக அமையும். இதனால், இன்னும் அதிகமான எச்சரிக்கையுடன் செயல்பட்டு உங்கள் உடல்நலத்தை பாதுகாக்க முடியும்.

Reusing The Same Cooking Oil: பெரும்பாலானோர் சமைத்த எண்ணெய்யை மீண்டும் மீண்டும் பயன்படுத்தி உணவு தயாரிக்கின்றனர். இதனால் உடலுக்கு பெரிய ஆபத்துகள் ஏற்படலாம். வீடு முதல் ஹோட்டல் வரை பலரும் பழைய எண்ணெய்யை மீண்டும் பயன்படுத்துவதால், அந்த உணவு விஷமாக மாறும் வாய்ப்பு அதிகமாக உள்ளது. மேலும், இதன் விளைவாக எந்த ஆபத்துகள் உடலில் ஏற்படக்கூடும் என்பதைக் காணலாம்.

1 /8

புற்றுநோய் அபாயம்(Cancer risk): மீண்டும் பயன்படுத்தும் எண்ணெய்யில் நச்சுப் பொருட்கள் உருவாகலாம், இது புற்றுநோய் அபாயத்தை அதிகரிக்கக் கூடும்.  

2 /8

இதய நோய்கள்: பலமுறை பயன்படுத்திய எண்ணெய்யில் டிரான்ஸ் கொழுப்பு அதிகரித்து, இரத்தக் குழாய்களில் அடைப்பு ஏற்படுத்தி இதய நோய்களுக்கு வழிவகுக்கும்.

3 /8

செரிமான கோளாறுகள்(Digestive disorders): பழைய எண்ணெய்யில் உள்ள அமிலங்கள் செரிமானத்தை பாதிக்கக்கூடியதால், அஜீரணம் மற்றும் வயிற்றுப்போக்கு ஏற்படலாம்.

4 /8

இரத்த அழுத்த பிரச்சனை(Blood pressure problem): மீண்டும் பயன்படுத்தும் எண்ணெய்யில் அதிக கொழுப்பு சேர்ந்து உயர் இரத்த அழுத்தத்தை ஏற்படுத்தும் அபாயம் உள்ளது.

5 /8

சருமப் பிரச்சனைகள்: ஆக்சிடேஷன் காரணமாக ஏற்படும் நச்சுப் பொருட்கள் சருமத்தில் பிம்பிள்கள், அதிக எண்ணெய் சுரப்பு போன்ற பிரச்சனைகளை உருவாக்கலாம்.

6 /8

கல்லீரல் பாதிப்பு(Liver damage): பழைய எண்ணெயில் உள்ள நச்சுப்பொருட்கள் கல்லீரலின் செயல்பாட்டை பாதித்து, டாக்ஸின்களை வெளியேற்றும் திறனை குறைக்கும்.

7 /8

நுண்ணுயிர் தொற்று அபாயம்(Risk of microbial infection): மீண்டும் பயன்படுத்தும் எண்ணெய்யில் பாக்டீரியாக்கள் அதிகமாக உருவாகும். இதனை உணவுக்குப் பயன்படுத்தும் போது உணவு விஷத்தன்மை ஏற்படும்.

8 /8

இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ZEE MEDIA இந்த தகவல்களுக்கு பொறுப்பேற்காது.