Rich Indian Actress With 4500 Crores Asset : இந்திய நடிகை ஒருவர், கடந்த 15 ஆண்டுகளில் பெரிதாக எந்த ஹிட் படமும் கொடுக்கவில்லை என்றாலும் கிட்டத்தட்ட 4,500 கோடி சொத்துடன் இருக்கிறார். அவர் யார் தெரியுமா?
Rich Indian Actress With 4500 Crores Asset : இந்தியாவின் பணக்கார நடிகை குறித்த தகவல் ஒன்று வெளியாகி இருக்கிறது. இந்த நடிகை திரையுலகில் ஆக்டிவாக இருந்தாலும், கடந்த 15 வருடங்களில் பெரிதாக எந்த ஹிட் படங்களையும் கொடுக்கவில்லை. இருப்பினும் இவரது சொத்துகள் மட்டும் 4,000 கோடியை எட்டுகிறதாம். அவர் யார் தெரியுமா?
1/7இந்தியாவில், அதிக சம்பளம் வாங்கும் தொழில்களுள், சினிமாவும் ஒன்று. பிரபலங்கள் பலர் நடிப்பதற்காக மட்டுமன்றி, தங்களின் பிராண்டை வைத்து இன்னும் சில விஷயங்களுக்காகவும் சம்பளம் பெற்று டாப்பில் இருக்கின்றனர். குறிப்பாக தெற்கை விட, வட இந்திய நடிகர்களுக்கு சம்பளம் அதிகம்
2/7இந்திய நடிகைகளை விட, பன்மடங்கு அதிகமாக நடிகர்கள்தான் அதிக சம்பளம் வாங்குகின்றனர். ஆனால் அவர்களுக்குமே கோடிகளில்தான் சம்பளம் வழங்கப்படுகிறது.
3/7தற்போது இந்தியாவின் பணக்கார நடிகை குறித்த ஒரு தகவல் வைரலாகி வருகிறது. இந்த நடிகைக்கு, கிட்டத்தட்ட சுமார் ரூ.4,500 கோடி சொத்து இருக்கிறதாம்.
4/7அது மட்டுமன்றி, இந்தியா உள்பட பல நாடுகளில் வீடு, நிலம் உள்ளிட்ட சில சொத்துகளும் இருக்கின்றனவாம். இவர், இந்தியாவின் பணக்கார நடிகர்களின் லிஸ்டிலும் இடம் பெற்றிருக்கிறார்.
5/7இந்த நடிகை கடந்த 15 வருடங்களில் நடித்த பெரும்பாலான படங்கள் சொதப்பியிருக்கிறது. இருப்பினும், இன்னும் தொடர்ந்து நடித்துக்கொண்டுதான் இருக்கிறார். அவர் யார் தெரியுமா? அவர் நீங்கள் நினைக்கும் தீபிகா படுகோன், கத்ரீனா கைஃப், பிரியங்கா சோப்ரா எல்லாம் இல்லை. தமிழ் நடிகைகளான த்ரிஷா, நயன்தாராவும் இல்லை.
6/7அந்த நடிகையின் பெயர் ஜூஹி சாவ்லா. பெயர் புகழை சம்பாதித்ததோடு, பல கோடிகளையும் சம்பாதித்திருக்கிறார். தனி விமானம், சொகுசு கார், ஆடம்பர வீடு உள்ளிட்டவையும் இதில் அடங்கும்.
7/7ஜூஹி சாவ்லா, 90களில் பாலிவுட்டை கலக்கியவர். பல ஷாருக்கான் மற்றும் சல்மான்கான் படங்களில் நடித்துள்ளார். படங்கள் மூலம் குறைவாக சம்பாதித்தாலும் இவர் பல்வேறு தொழில்களில் செய்த முதலீடுதான் இவ்வளவு சொத்துகளுக்கு காரணம் என்று கூறப்படுகிறது.