ரிஷப் பண்ட் டூ ஸ்டார்க்: ஐபிஎல் வரலாற்றில் அதிக விலைக்கு வாங்கப்பட்ட டாப் 10 வீரர்கள்!

Most Expensive Ipl Players In History: ஐபிஎல் வரலாற்றில் அதிக விலைக்கு வாங்கப்பட்ட டாப் 10 வீரர்கள் யார் யார் என்பது குறித்து இங்கு பார்க்கலாம். 

1 /10

ரிஷப் பண்ட் (Rishabh Pant): 2025 ஐபிஎல் மெகா ஏலத்தில் ரிஷப் பண்ட் லக்னோ (LSG) அணியால் ரூ. 27 கோடிக்கு வாங்கப்பட்டார். இதன் மூலம் ஐபிஎல் வரலாற்றில் அதிக விலைக்கு வாங்கப்பட்ட வீரர்களின் பட்டியலில் முதல் இடம் பிடித்திருக்கிறார். 

2 /10

ஸ்ரேயாஸ் ஐயர் (Shreyas Iyer): 2025 ஐபிஎல் மெகா ஏலத்தில் ஸ்ரேயாஸ் ஐயர் பஞ்சாப் (PBKS) அணியால் ரூ. 26.75 கோடிக்கு வாங்கப்பட்டார். அத்தொடரில் அவர் அந்த அணியை இறுதி போட்டி வரை அழைத்து சென்றார் என்பது குறிப்பிடத்தக்கது. 

3 /10

மிட்செல் ஸ்டார்க் (Mitchell Starc): 2024ஆம் ஆண்டில் நடந்த ஏலத்தில் மிட்செல் ஸ்டார்க் ரூ. 24.75 கோடிக்கு கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (KKR) அணியால் வாங்கப்பட்டார். 

4 /10

வெங்கடேஷ் ஐயர் (Venkatesh Iyer): 2025 மெகா ஏலத்தில் வெங்கடேஷ் ஐயர் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (KKR) அணியால் ரூ. 23.75 கோடிக்கு வாங்கப்பட்டார். ஆனால் அவர் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தாததால், அவரை அந்த அணி விடுத்தது. 

5 /10

பேட் கம்மின்ஸ் (Pat Cummins): 2024 ஏலத்தில் பேட் கம்மின்ஸ் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் (SRH) அணியால் ரூ. 20.50 கோடிக்கு வாங்கப்பட்டார். அவர் இன்னும் தொடர்ந்து அந்த அணியுடன் பயணிக்கிறார். 

6 /10

சாம் கரண் (Sam Curran): 2023 மினி ஏலத்தில் சாம் கரண் ரூ. 18.50 கோடிக்கு பஞ்சாப் கிங்ஸ் (PBKS) அணியால் வாங்கப்பட்டார். 

7 /10

கேமரூன் கிரீன் (Cameron Green): 2023ஆம் ஆண்டு நடைபெற்ற ஏலத்தில் கேமரூன் கிரீன் ரூ. 17.50 கோடிக்கு மும்பை இந்தியன்ஸ் (MI) அணியால் வாங்கப்பட்டார். 

8 /10

பென் ஸ்டோக்ஸ் (Ben Stokes): 2023ஆம் ஆண்டில் பென் ஸ்டோக்ஸ் சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) அணியால் ரூ. 16.25 கோடிக்கு வாங்கப்பட்டார். 

9 /10

கிரிஸ் மோரீஸ் (Chris Morris): 2021ஆம் ஆண்டு ஏலத்தின்போது, கிரிஸ் மோரீஸ் ரூ. 16.25 கோடிக்கு ராஜஸ்தான் ராயல்ஸ் (RR) அணியால் வாங்கப்பட்டார். 

10 /10

யுவராஜ் சிங் (Yuvraj Singh): 2015ஆம் ஆண்டு யுவராஜ் சிங் டெல்லி டேர்டெவில்ஸ் (DD) அணியால் ரூ. 16 கோடிக்கு வாங்கப்பட்டார்.