ரோகித் சர்மாவின் முன்னாள் காதலி.. அவரை விட 12 வயது மூத்தவர்.. இப்படி பண்ணிட்டாரே!

Rohit Sharma Ex-Lover: இந்திய ஒருநாள் அணியின் கேப்டன் ரோகித் சர்மா, ரித்திகாவை திருமணம் செய்து கொள்வதற்கு முன்பு ஒருவரை காதல் செய்ததாக கூறப்படுகிறது. அது குறித்து இங்கு பார்க்கலாம். 

Rohit Sharma Love Before marrying ritika sajdeh: இந்திய அணியின் நட்சத்திர வீரர் ரோகித் சர்மா. இந்திய அணியில் சுமார் 18 ஆண்டுகளாக பயணித்து வரும் இவருக்கு தனி ரசிகர் பட்டாளமே இருக்கிறது. 

1 /10

விராட் கோலிக்கு பின்னர் இந்திய அணியை வழி நடத்தி 2024 டி20 உலகக் கோப்பை மற்றும் இந்த ஆண்டு தொடக்கத்தில் நடந்த சாம்பியன்ஸ் டிராபி தொடரை வென்று கொடுத்து இந்தியாவிற்கு பெருமை சேர்த்தார். 

2 /10

2024 டி20 உலகக் கோப்பையை வென்ற கையோடு டி20 கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்தார். இதையடுத்து கடந்த மே மாதம் டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்தும் ஓய்வை அறிவித்தார். ரோகித் சர்மா தொடர்ந்து ஒருநாள் கிரிக்கெட்டில் மட்டும் விளையாட திட்டமிட்டு இருக்கிறார். 

3 /10

ஐபிஎல்லுக்கு பின்னர் அவர் விளையாடவில்லை. வரும் அக்டோபர் மாதம் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் போட்டியில்தான் அவர் விளையாட இருக்கிறார். 

4 /10

இந்த நிலையில், ரோகித் சர்மா ரித்திகா சஜ்தேவை திருமணம் செய்துக்கொள்வதற்கு முன்பு பிரிட்டிஷ் நடிகை ஒருவரை காதல் செய்வதாக கூறப்படுகிறது. அது உண்மையா? அந்த நடிகை யார் என்பதை இங்கு பார்க்கலாம். 

5 /10

ரோகித் சர்மா, சோபியா ஹயாத்யை காதல் செய்ததாக கூறப்படுகிறது. இது தொடர்பாக எங்கேயும் ரோகித் சர்மா பேசியதில்லை. ஆனால், இந்த விவகாரம் தொடர்பாக சோபியா ஹயாத் பேசி இருக்கிறார். 

6 /10

"ஆமாம், அந்த செய்திகள் உண்மைதான். நான் அவரை லண்டனில் உள்ள ஒரு கிளப்பில் சந்தித்தேன். நான் நடித்த ஒரு படத்தின் முடிவைக் கொண்டாடிக் கொண்டிருந்தேன். நான் நடனமாடிக் கொண்டிருந்தபோது, ​​படத்தின் படப்பிடிப்பில் இருந்த எனது நண்பர் ஒருவர் எங்களை அறிமுகப்படுத்தினார்.

7 /10

நான் கிரிக்கெட்டை அதிகம் பார்ப்பதில்லை என்பதால் எனக்கு அவரை தெரியவில்லை. எப்படியிருந்தாலும், நாங்கள் ஒருவருக்கொருவர் பேசிக் கொண்டோம், பின்னர் கிளப்பில் அமைதியான ஒரு இடத்திற்குச் சென்றோம். அவர் என்னை முத்தமிட்டார்.   

8 /10

அதன் பிறகு, நாங்கள் ஒன்றாக நடனமாடினோம். 4 நாட்களுக்குப் பிறகு அவர் என் வீட்டில் என்னுடன் தங்க வந்தார். அவர் திடீரென்று ஊடகங்களிடம் பேசி, நான் வெறும் ரசிகன் என்று சொன்னபோதுதான் இது எல்லாம் தொடங்கியது. அது எனக்கு மிகவும் வேதனையாக இருந்தது. நான் அவரிடமிருந்து பிரிந்து செல்ல முடிவு செய்தேன்.

9 /10

நான் அவருக்கு ஒரு செய்தி அனுப்பினேன்: பார், நான் உங்கள் ரசிகன் அல்ல. இனிமேல் நான் உங்களைப் பார்க்க விரும்பவில்லை. நீங்கள் செய்தது அருவருப்பானது. நான் அவருடனான அனைத்து தொடர்புகளையும் துண்டித்துவிட்டேன். நான் அவரைப் பார்க்க விரும்பவில்லை. எனது ட்விட்டர் பக்கத்தில் அவரைத் தடுத்தேன். யாராவது அப்படி நடந்து கொள்ள முடிந்தால், எங்கோ ஒழுக்கம் இல்லை என்று நினைக்கிறேன்" என சோபியா ஹயாத் முன்னதாக கூறி இருக்கிறார். 

10 /10

ரோகித் சர்மா, ரித்திகா சஜ்தேவை 2015ஆம் ஆண்டு திருமணம் செய்துக்கொண்டார். அவர்களுக்கு ஒரு பெண் குழந்தை மற்றும் ஆண் குழந்தை உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.