ஐபிஎல் 2026 மினி ஏலம்: RCB அணி யாரை தக்கவைக்கிறது? யாரை கழட்டிவிடுகிறது? முழு லிஸ்ட்!

RCB Retain And Release Players List: ஐபிஎல் 2026 மினி ஏலத்திற்கு முன்பாக ஆர்சிபி அணி எந்த வீரரையெல்லாம் தக்கவைக்கிறது மற்றும் விடுவிக்க வாய்ப்பிருக்கிறது என்பதை தெரிந்துக்கொள்ளலாம். 

RCB Retain And Release Players List: ஐபிஎல் 2026 மினி ஏலம் அடுத்த மாதம் நடுப்பகுதியில் நடைபெற இருக்கும் நிலையில், அதற்காக அனைத்து அணிகளும் தீவிரமாக தயாராகி வருகிறது. எந்தெந்த வீரர்களை தக்கவைக்கலாம் எந்தெந்த வீரர்களை விடுவிக்கலாம் என்ற பரிசீலனையில் உள்ளன. இந்த நிலையில், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி தக்கவைக்கும் மற்றும் விடுவிக்க வாய்ப்புள்ள வீரர்கள் யார் யார் என்பது குறித்து இங்கு பார்க்கலாம். 

1 /9

2 /9

தக்கவைக்கப்படும் வீரர்கள் லிஸ்ட்: முதலில் விராட் கோலி: ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமில்லை. கண்டிப்பாக விராட் கோலியை ஆர்சிபி அணி தக்கவைத்துக்கொள்ளும். அந்த அணியின் பிராண்ட்டாக இருக்கும் அவரை கடைசி வரை தங்களது அணியில் வைத்துக்கொள்ள அந்த அணி நிர்வாகம் விரும்பும். 

3 /9

பில் சால்ட்: அதிரடியான தொடக்கத்தை கொடுக்கும் பில் சால்ட்டை ஆர்சிபி அணி தக்கவைத்துக்கொள்ள விரும்பும். நடந்து முடிந்த 2025 ஐபிஎல் தொடரில் 403 ரன்களை குவித்தார். 

4 /9

ரஜத் படிதார்: ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் கேப்டன் ரஜத் படிதார் 2025 ஐபிஎல் தொடரை கைப்பற்றி கொடுத்தார். 17 ஆண்டுகால தவிப்பை போக்கிய படிதாரை ஆர்சிபி அணி கண்டிப்பாக தக்கவைத்துக்கொள்ளும். 

5 /9

டிம் டேவிட்: டெத் ஓவர்களில் டிம் டேவிட் தனது ஆக்ரோஷ்மான பேட்டிங்கால் பந்துகளை சிக்சர்களுக்கு பறக்கவிடக்கூடியவர். குறிப்பாக ரன் சேஸிங்கில் அந்த அணிக்கு நம்பிக்கை அளிக்கக்கூடியவராக இருப்பதால், இவரை ஆர்சிபி அணி தக்கவைத்துக்கொள்ள விரும்பும். 

6 /9

ஜிதேஷ் சர்மா: விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான ஜிதேஷ் சர்மா, மிடில் ஆர்டரில் ரன்களை சேர்க்கக்கூடியவர். சில நேரங்களில் அதிரடியாகவும் பேட்டிங் செய்யக்கூடியவர் என்பதால், அவரை அந்த அணி தக்கவைத்துக்கொள்ள விரும்பும். 

7 /9

குருணால் பாண்டியா: நடந்து முடிந்த சீசனில் ஆர்சிபி அணியின் வெற்றிக்கு முக்கிய காரணம் குருணால் பாண்டியா. ஆர்சிபி அணி இந்த ஆல் ரவுண்டரை கண்டிப்பாக தக்கவைத்துகொள்ள்ளும் என எதிர்பார்க்கபபடுகிறது. 

8 /9

ஜோஷ் ஹேசில்வுட் மற்றும் புவனேஷ்வர் குமார்: இவர்கள் இருவருமே ஆர்சிபி அணியின் துணாக உள்ளனர். ஜோஷ் ஹேசில்வுட் பவர் பிளேயில் விக்கெட்களை வீழ்த்தவும் புவனேஷ்வர் குமார் டெத் ஓவர்களை கட்டுக்குள் வைத்திருக்கவும் உதவுவதால், இவர்கள் இருவரையும் அந்த அணி தக்கவைத்துக்கொள்ள நினைக்கும்.

9 /9

விடுவிக்கப்பட வாய்ப்புள்ள வீரர்கள்: தேவ்தத் படிக்கல் மற்றும் ரொமாரியோ ஷெப்பர்ட்: இவர்கள் இருவரை பொருத்தவரையில் நடந்து முடிந்த சீசனில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. ஒரு சில போட்டிகளில் அவர்களின் பங்கு இருந்ததே தவிர மற்றபடி சிறப்பாக இல்லை. இதனால் இவர்களை ஆர்சிபி அணி விடுவிக்க அதிக வாய்ப்புள்ளது. இவர்களை போல் இன்னும் சில வீரர்களும் விடுவிக்கப்படலாம்.