சாய் பல்லவி நிராகரித்த படங்களில் பெரும்பாலானவை, அவருக்கு நடிப்புத் திறமை வெளிப்படுத்த போதுமான வாய்ப்பை வழங்காத கமர்ஷியல் சப்ஜெக்ட்டுகள் அல்லது ரீமேக் படங்கள் எனத் தெரிகிறது.
நடிகை சாய் பல்லவி தன் நடிப்புத் திறமைக்கும், கதைத் தேர்வுக்குமான தனிப்பட்ட கொள்கைகளுக்காக அறியப்பட்டவர். இவர் தளபதி விஜய் மற்றும் மகேஷ் பாபு உட்பட தென்னிந்திய சினிமாவின் பல முன்னணி நடிகர்களின் மெகா ஹிட் திரைப்படங்களை நிராகரித்துள்ளார் என்ற அதிர்ச்சி தகவல் தற்போது வெளியாகியுள்ளது.
நடிப்புத் திறமைக்கு அதிக முக்கியத்துவம் அளித்து, கதைத் தேர்வில் உறுதியான தனிப்பட்ட கொள்கைகளை பின்பற்றுவதில் சாய் பல்லவி பிரபலமானவர். இந்தப் பிடிவாதமே, தளபதி விஜய் மற்றும் மகேஷ் பாபு போன்ற உச்ச நட்சத்திரங்களின் பல மெகா ஹிட் திரைப்படங்களை அவர் நிராகரிக்க காரணமாக அமைந்துள்ளது.
தளபதி விஜய்யின் 'லியோ ': கதாபாத்திரத்தின் முக்கியத்துவம் குறைவு: நாயகிக்கு நடிப்பை வெளிப்படுத்த போதுமான வாய்ப்பு இல்லை என்றும், பிரதானக் கதைக்களம் ஹீரோவைச் சுற்றியே அமைந்திருந்ததாகவும் அவர் கருதியதாகக் கூறப்படுகிறது.
மகேஷ் பாபுவின் 'சர்க்கார் வாரி பாட' : கதாநாயகிக்கு முக்கியத்துவம் இல்லை: வணிக ரீதியான ஆக்ஷன் படத்தில் நாயகி வெறும் கவர்ச்சிக்காக மட்டுமே பயன்படுத்தப்படுவதாக உணர்ந்துள்ளார்.
துல்கர் சல்மானின் 'கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்': இயக்குநர் தேசிங் பெரியசாமி இயக்கத்தில் நடிகர் துல்கர் சல்மான் நடிப்பில் வெளியான திரைப்படம் 'கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்'. துல்கருக்கு ஜோடியாக நடிக்க முதலில் சாய் பல்லவியிடம் கேட்கப்பட்டது, ஆனால் அவர் கதை பிடிக்கவில்லை என ரிஜெக்ட் செய்ததால் அந்த கதாபாத்திரத்தில் நடிகை ரிது வர்மா கமிட்டாகி நடித்தார்.
கார்த்தியின் 'காற்று வெளியிடை' : ஆரம்பகாலத் தயக்கம்:மணிரத்னம் இயக்கிய இந்தப் படத்தில் நடிக்க ஆரம்பத்தில் அவர் தேர்வானாலும், அப்போதைய தன் அனுபவமின்மை மற்றும் கதாபாத்திரத்தின் நுணுக்கம் காரணமாகத் தான் தயாராக இல்லை என்று பின்வாங்கியதாகக் கூறப்படுகிறது.
விஜய் தேவரகொண்டாவின் 'டியர் காம்ரேட்': முத்தக் காட்சிகளில் தயக்கம் : கதையில் இடம்பெற்ற லிப்-லாக் காட்சிகளில் நடிக்க அவர் சௌகரியமாக உணராததால் நிராகரித்தார்.
அஜித் குமார் 'வலிமை' : சவாலற்ற வேடம்: ஆக்ஷன் டிராமா திரைப்படங்களில் நாயகியை விட ஹீரோவுக்கே முக்கியத்துவம் இருக்கும் என்பதால், தனது திறமைக்கு சவால் இல்லாத வேடம் என முடிவெடுத்தார்.
சிரஞ்சீவி 'போலா ஷங்கர்' : மேக்குகளில் விருப்பமின்மை: இது ஒரு ரீமேக் படம் (தமிழில் 'வேதாளம்' படத்தின் ரீமேக்) என்பதால், ரீமேக் படங்களில் நடிக்க பொதுவாக விருப்பமில்லை என்ற தனது கொள்கையால் மறுத்துவிட்டார்.