13 ஆண்டுகளுக்குப் பிறகு சினிமாவுக்கு திரும்பும் சமீரா ரெட்டி... மகன் சொன்ன ஒரு கேள்வி தான் காரணம்!

Written ByThirishala S.P
Published: Aug 12, 2025, 11:00 AM IST|Updated: Aug 12, 2025, 11:12 AM IST

Sameera Reddy Returns To Cinema: 13 ஆண்டுகள் நீண்ட இடைவெளிக்குப் பிறகு, வெள்ளித்திரைக்கு மீண்டும் வருகிறார் சமீரா ரெட்டி. மகன் கேட்ட ஒரு கேள்வி, இவரின் வாழ்க்கையையே திருப்பி விட்டது!

Sameera Reddy Returns To Cinema: மீண்டும் சமிரா ரெட்டி திரைக்கு வர இது தான் காரணம். 2008ல் வந்த Race படத்தில் அம்மாவை பார்த்த மகன், “ஏன் மீண்டும் நடிக்கக்கூடாது?” என்றான். அந்த ஒரு கேள்வியே, சமீராவை ‘Chimni’ ஹாரர் படத்துடன் மீண்டும் லைம் லைட்டில் கொண்டு வந்தது!

After 13 years cinema1/9

13 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் சமீரா ரெட்டி:

13 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் சமீரா ரெட்டி: 2012ஆம் ஆண்டு Tezz படத்துக்குப் பிறகு, 13 வருட இடைவெளிக்குப் பிறகு Chimni என்ற ஹாரர் படத்தில் நடிக்கிறார் சமீரா ரெட்டி. 2008ல் வெளியான Race படத்தை தனது மகன் பார்த்த பின்னர், “ஏன் மீண்டும் நடிக்கக்கூடாது?” என்ற கேள்வி இவரை மீண்டும் திரைக்கு கொண்டு வந்தது.

Son words2/9

மகன் சொன்ன வார்த்தை

மகன் சொன்ன வார்த்தை..சினிமாவுக்கும் திருப்பம்!  Race படத்தில் அம்மாவை பார்த்த மகன், “நீங்க இப்போ ஏன் மீண்டும் நடிக்கக்கூடாது?” என்று கேட்டார். சமீரா, “உங்களையும் தங்கையையும் கவனிக்க நேரம் சரியாக இருக்கு” என்று சொன்னார். ஆனால், அந்த கேள்வி தான் இவரை மீண்டும் நடிப்பை யோசிக்க வைத்தது.

Feel 3/9

திரைக்குத் திரும்பிய முதல் நாள்

திரைக்குத் திரும்பிய முதல் நாள் உணர்வு: Chimni படத்தின் படப்பிடிப்பு தளத்தில் சமீரா மிகவும் பதட்டமாக இருந்தார். சிலர் “நீங்க பல ஆண்டுகள் அனுபவம் பெற்ற நபர்” என்றாலும், “நான் புதிதாக ஆரம்பிக்கறேன்” என்ற உணர்வு இருந்தது. ஆனால் ‘Action’ என்ற சத்தம் கேட்டவுடன், உள்ளே உறங்கிக் கிடந்த நடிகை மீண்டும் விழித்துக் கொண்டார் என்று சமீரா கூறுகிறார்.

Social media4/9

சமூக வலைத்தளத்தில் ட்ரெண்டு:

சமூக வலைத்தளத்தில் ட்ரெண்டு: COVID காலத்தில் சமூக வலைத்தளத்தில் ஆர்வமுடன் செயல்படத் தொடங்கினார். குழந்தைகள், குடும்பம், உடல் எடை, வயது ஆகிய சவால்களை வெளிப்படையாகப் பகிர்ந்து, பெண்களுக்கு மனநிறைவு தரும் வகையில் உள்ளடக்கம் வெளியிட்டார். “யாருக்கும் பிரச்சினைகள் வராதது இல்லை” என்ற கருத்தை பரப்பினார்.

Life5/9

ஆரம்ப வாழ்க்கை

ஆரம்ப வாழ்க்கை மற்றும் குடும்பம்: 1978 டிசம்பர் 14ஆம் தேதி மும்பையில் பிறந்த சமீரா ரெட்டி, தெலுங்கு தந்தை, மங்களூரிய காங்கணி தாயின் மகள். இரு அக்காக்கள் மேக்னா ரெட்டி (முன்னாள் சூப்பர் மாடல்) மற்றும் சுஷ்மா ரெட்டி (நடிகை) உள்ளனர். Bombay Scottish பள்ளியில் படித்து, Sydenham கல்லூரியில் பட்டம் பெற்றார்.

Cinema start6/9

சினிமா அறிமுகம்:

சினிமா அறிமுகம்: 1997-இல் பங்கஜ் உதாஸ் இசை வீடியோவில் தோன்றினார். 2002-இல் Maine Dil Tujhko Diya மூலம் ஹிந்தி சினிமாவில் அறிமுகமானார். பின்னர் Darna Mana Hai, Musafir, Taxi No. 9211, Race, Vaaranam Aayiram, Vettai உள்ளிட்ட பல ஹிந்தி, தமிழ், தெலுங்கு படங்களில் நடித்தார். மேலும் அவர் பல படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

tamil cinema7/9

தமிழ் சினிமா பயணம்:

தமிழ் சினிமா பயணம்: சூர்யாவுடன் நடித்த வாரணம் ஆயிரம் இவருக்கு தமிழ் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை தந்தது. பின்னர் நடுநிசி நாய்கள், வெட்டை போன்ற படங்களில் நடித்தார். வாரணம் ஆயிரம் படம் இவருக்கு தென்னிந்தியாவில் நல்ல பெயரை பெற்றுத்தந்தது.

Personal life 8/9

தனிப்பட்ட வாழ்க்கை:

தனிப்பட்ட வாழ்க்கை: 2014-இல் தொழிலதிபர் அக்‌ஷய் வார்தேவை திருமணம் செய்துகொண்டார். ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். அமெரிக்க டாக் ஷோ ஹோஸ்ட் ஓப்ரா விண்பிரியை சந்தித்து, புடவை பரிசளித்த சம்பவமும் பேசப்பட்டது.

Awards9/9

விருதுகள்

விருதுகள் மற்றும் பிரபலமடைந்த தருணங்கள்: 2011-இல் Rediff “Best Tamil Actresses” பட்டியலில் 4வது இடம், Femina “50 Most Beautiful Women” பட்டியலில் இடம் பெற்றார். “Sameera: The Street Fighter” என்ற வீடியோ கேம் வெளியான முதல் இந்திய நடிகை என்ற சிறப்பும் பெற்றார்.