Samsung Galaxy F55 : செல்பி கேமராவில் அமர்களப்படுத்தும் சாம்சங்க் - யூ டியூபர்களுக்கு ஏற்ற மொபைல்

யூடியூபராக இருந்தால், உங்களுக்கு ஏற்ற கேமரா மொபைல் தேடிக் கொண்டிருகிறீர்கள் என்றால் Samsung Galaxy F55 ஸ்மார்ட்போன் பட்ஜெட் விலையில் சிறந்த மொபைல் ஆகும். 

இப்போது யு டியூபர்க்கள் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில் மல்டி டாஸ்கிங் செய்யும் மொபைல்களை இளைஞர்கள் அதிகம் தேடிக் கொண்டிருக்கிறார்கள். அந்தவகையில் செல்பி கேமராவில் புதிய குவாலிட்டியை கொண்டு வந்திருக்கும் Samsung Galaxy F55 மொபைல் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்

1 /9

உலகிலேயே அதிக ஸ்மார்ட் போன் பயனர்களைக் கொண்ட பட்டியலில் இந்தியா இரண்டாம் இடத்தில் உள்ளது. அந்த அளவுக்கு மக்கள் மத்தியில் ஸ்மார்ட்போன் பயன்பாடு அதிகரித்துள்ளது. இப்போதெல்லாம் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரது கைகளிலும் நம்மால் ஸ்மார்ட் ஃபோனை பார்க்க முடிகிறது. இந்தியாவில் ஏற்பட்டுள்ள தொழில்நுட்ப வளர்ச்சி காரணமாக ஸ்மார்ட்போன் சந்தையானது அசுர வளர்ச்சியைக் கண்டுள்ளது. 

2 /9

இந்தியாவைப் பொருத்தவரை ஸ்மார்ட் போன் சந்தையில் ஆதிக்கம் செலுத்தும் நிறுவனங்களில் சாம்சங் மற்றும் ஆப்பிள் நிறுவனங்கள் முன்னணி வகிக்கின்றன. இதில் ஆப்பில் நிறுவனம் விலை உயர்ந்த ப்ரீமியம் ஃபோன்களையே தயாரிப்பதால், அவர்களுக்கு நல்ல வரவேற்பு உள்ளது. 

3 /9

ஆனால் அனைவராலும் ஆப்பிள் போனை வாங்கிவிட முடியாது. அதற்கு அடுத்தபடியாக அனைவரும் பயன்படுத்தும் வகையில் பட்ஜெட் ஸ்மார்ட்போன் தயாரிப்புகளில் மிகவும் பிரபலமாக விளங்குவது சாம்சங்தான். இது எல்லா தரப்பு மக்களின் தேவையை பூர்த்தி செய்யும் நிறுவனமாக உள்ளது. 

4 /9

அந்த வகையில் சாம்சங் நிறுவனத்தின் புதிய ஸ்மார்ட்போனான Samsung Galaxy F55 5G நேற்று விற்பனைக்கு வந்துள்ளது. சாம்சங் F சீரியஸ் ஸ்மார்ட்போன்கள் மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமானவை. மேலும், இந்தியாவில் இப்போது 5G ஸ்மார்ட்போனுக்கான தேவை அதிகரித்துள்ள நிலையில், இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போனை சாம்சங் நிறுவனம் வெளியிட்டுள்ளது. 

5 /9

இந்த ஸ்மார்ட் போனில் இடம் பெற்றுள்ள கேமரா, பேட்டரி, ப்ராசசர் என அனைத்துமே சிறந்ததாக உள்ளது. 6.67 இன்ச் AMOLED டிஸ்ப்ளேயுடன், 1080×2400 பிக்சல் ரெசல்யூஷன் மற்றும் 120Hz ஸ்கிரீன் ரெஃப்ரெஷ் ரேட்டுடன் வருகிறது. இதன் சிப்செட்டைப் பொருத்தவரை Qualcomm நிறுவனத்தின் ஸ்நப்டிராகன் 7 Gen 1 உடன் வருகிறது. இதில் அதிகபட்சமாக 12 ஜிபி ரேம் மற்றும் 256GB இன்டெர்னல் ஸ்டோரேஜ் வழங்கப்பட்டுள்ளது. 

6 /9

இந்த ஸ்மார்ட்போனின் சிறப்பம்சமே அதன் கேமராதான். இதுவரை ஸ்மார்ட்போன் என்றாலே அதில் பின்பக்க கேமராதான் சிறப்பாக இருக்கும். முன்பக்க கேமரா எப்போதும் குறைவாகவே கொடுப்பார்கள். இந்த முறை முன்பக்கத்தில் 50 மெகா பிக்சல் கேமரா கொடுக்கப்பட்டுள்ளது. 

7 /9

இது youtube Vlog எடுக்கும் நபர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். அதேபோல பின்பக்கத்திலும் 50 மெகாபிக்சல் கேமராவுடன் 10X Zoom வசதியும் உள்ளது. இதில் 5000mah பேட்டரியுடன் 45W Fast Charging சார்ஜிங் வசதியும் வழங்கப்பட்டுள்ளது. 

8 /9

இப்படி எல்லா வசதிகளும் கொண்டு வெளிவந்துள்ள இந்த ஸ்மார்ட்போனின் விலை, 8+128 ஜிபி வேரியண்ட் 26,999 ரூபாய்க்கும்,  8+256 ஜிபி வேரியண்ட் 29,999 ரூபாய்க்கும், 12+256 ஜிபி வேரியண்ட் 32,999 ரூபாய்க்கும் விற்பனைக்கு வந்துள்ளது.   

9 /9

மொத்தம் இரண்டு நிறங்களில் வெளிவந்துள்ள இந்த ஸ்மார்ட்போனை பிளிப்கார்ட் தளத்திலும், சாம்சங்கின் அதிகாரப்பூர்வ தளத்திலும் நீங்கள் வாங்கிக் கொள்ளலாம். ஸ்மார்ட்போன் சந்தையில் இந்த Samsung Galaxy F55 5G சாதனம் ஒரு கேம் சேன்ஜராக இருக்கும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.